எங்கே செல்கிறது இந்தியா

எங்கே செல்கிறது இந்தியா, டியானே காஃபே, டீன் ஸ்பியர்ஸ், எதிர் வெளியீடு, விலை: ரூ.350 இந்திய புள்ளியியல் கழகத்தின் ஆராய்ச்சியாளர்களும், ஆர்ஐசிஇ அமைப்பின் நிர்வாக இயக்குநர்களுமான டியானே காஃபே, டீன் ஸ்பியர்ஸ் இருவரும் இணைந்து எழுதிய ‘எங்கே செல்கிறது இந்தியா: கைவிடப்பட்ட கழிப்பிடங்கள், தடைபட்ட வளர்ச்சிகள், சாதியத்தின் விலைகள்’ புத்தகத்தில், இந்தியாவின் தலையாய பிரச்சினைகளுள் ஒன்றான திறந்தவெளி மலம் கழித்தல் குறித்து மிக விரிவானதொரு ஆய்வுப் பார்வையை முன்வைத்திருக்கிறார்கள். இந்திய கிராமங்களில் திறந்தவெளி மலம் கழித்தலும் அதைச் சார்ந்த பிற சிக்கல்களையும் காரணங்கள், விளைவுகள், […]

Read more

என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்

என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள், சி.கே.மாணிக்கவாசகம், நர்மதா பதிப்பகம், விலை 200ரூ. மிகச் சிறிய மாற்றங்களை நடைமுறையிலும் உணவிலும் கொண்டுவருவதன் மூலம் மிகப் பெரும் பயன்களைப் பெற முடியும் என்கிறது இந்நூல். நன்றி: தமிழ் இந்து,9/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நான் கண்ட எம்.ஜி.ஆர்

நான் கண்ட எம்.ஜி.ஆர், இரா.தங்கத்துரை, கருத்துக்களம், விலை: ரூ.175 பிம்பச் சிறையல்ல எம்ஜிஆர்! , நடப்புப் பொருளாதாரத்தை வெகுநுட்பமாக ஆராயும் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டுவரும் ‘கருத்துக்களம்’ காலாண்டிதழின் ஆசிரியர் இரா.தங்கத்துரை, எம்ஜிஆர் நூற்றாண்டையொட்டி எழுதி வெளியிட்டிருக்கும் நூல் இது. மக்களவைத் துணை சபாநாயகரின் சிறப்பு உதவியாளராகவும், தமிழக அமைச்சர்களின் உதவியாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் இரா.தங்கத்துரை. நடிகராகவும் தலைவராகவும் புகழ்பெற்ற எம்ஜிஆரின் நிர்வாக ஆளுமையை விவரிக்கும்வகையில் அவரது ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூக நலத் திட்டங்களையும், பொருளாதார வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் அவர் காட்டிய அக்கறையையும் ஆதாரங்களோடு […]

Read more

ஐம்பெருங்காப்பியங்களில் அறக்கோட்பாடு

ஐம்பெருங்காப்பியங்களில் அறக்கோட்பாடு, த. சிவக்குமார், அய்யா நிலையம், பக். 224, விலை ரூ.220. அறவழிப்பட்ட சமுதாயமோ, சமூகமோதான் சிறப்பானதாகக் கருதப்படும். ஆகவேதான், ஐம்பெருங்காப்பியங்களை இயற்றிய ஆசிரியர்கள் அவரவர் சார்ந்த சமயம், மதம் குறித்த அறக்கோட்பாடுகளை தங்கள் காப்பியங்களில் இடம்பெறச் செய்து மக்களை நல்வழிப்படுத்தினர். காப்பியங்களில் உள்ள அறக்கூறுகளை, ஐம்பெருங் காப்பியங்களின் அமைப்பும் நோக்கமும் சமூக அறங்கள், சமய அறங்கள், அறக்கோட்பாடுகளும் தீர்வும் ஆகிய நான்கு இயல்களின் மூலம் இந்நூல் எடுத்துரைக்கிறது. ஐம்பெருங் காப்பியங்களில் அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நால்வகை உறுதிப் பொருள்களும் […]

Read more
1 7 8 9