ஆன்மீகம் தெரிந்ததும் தெரியாததும் (இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்கள்)

ஆன்மீகம் தெரிந்ததும் தெரியாததும் (இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்கள்), டாக்டர் மா. ஷிவகுமார், அழகு பதிப்பகம், பக். 224, விலை 180ரூ.

தென்னக ரயில்வேயில் இன்ஜீனியராக 33 ஆண்டுகள் பணியாற்றிய இந்நூலாசிரியர், ஜோதிடத் துறையிலும் 25 வருட அனுபவங்களைப் பெற்று, இது குறித்து பல பாடங்களையும் கற்று பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

ஜோதிடம் பார்க்க வருபவர்கள் தங்கள் மனதில் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இவர் அளித்துள்ள பதில்கள், கேட்பவர்களுக்குப் பெரும் திருப்தி அளித்துள்ளன. அவற்றின் தொகுப்பே, இந்நூல். சந்தேகங்களுக்கான விளக்கங்கள் அனைத்தும் தனது சொந்தக் கருத்துக்கள் அல்ல என்றும், பல பெரியோர்களின் கூற்றுக்கள் மற்றும் ஹிந்துமத சாஸ்திரங்களின் அடிப்படையிலானவை என்றும் ஆசிரியர் கூறியுள்ளார்.

அந்த வகையில் இந்நூலில் 180-க்கும் மேற்பட்ட விஷயங்கள் அடங்கியுள்ளன. இவை அனைத்தும் இதில் நம்பிக்கையுள்ள பலர் மனதில் அவ்வப்போது எழக்கூடியவை என்பதால், படிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன.

உதாரணத்திற்கு, ஜோதிடம் உண்மையானதற்கான விளக்கம் தொடங்கி, வீட்டு விசேஷங்களுக்கு மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்? கிணறு வெட்ட பூதம் கிளம்புமா? எமனைக் கண்டா நாய் ஊளையிட்டு அழுகிறது? பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவது ஏன்? அமாவாசையில் சுபகாரியங்கள் செய்யலாமா? தும்மினால் நூறு வயசா? 40 வயதில் நாய்க்குணம் வருமா? காய்ச்சிய எண்ணெயில் விளக்கேற்றலாமா? இப்படி பல வகையான சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் அறிவியல் ரீதியாகவும் பதிலளித்துள்ளது சிறப்பாக உள்ளது.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 23/8/2017.

Leave a Reply

Your email address will not be published.