பிஞ்சுச் சாவு

பிஞ்சுச் சாவு, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான சாலை, ராயப்பேட்டை, சென்னை 14,விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-490-7.html பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் மரணம் குறித்து 87 கவிஞர்கள் நெஞ்சு பொறுக்க முடியாத வேதனையில் படைத்த கண்ணீர்க் கவிதைகளின் தொகுப்பு நூல். பாலச்சந்திரன் தன் உயிரைக் கொடுத்து உலகின் பார்வையை தமிரீழத்தின் பக்கம் திருப்பியிருக்கிறான். அவர் மார்பைத் துளைத்த தோட்டாக்கள், லட்சக்கணக்கான தமிழீழ மக்களைக் கொன்று குவித்த கொடுரத்தை உலகின் பார்வைக்குகொண்டு சென்றிருக்கிறது. அவனது ஒற்றை மரணம், ஒரு […]

Read more

இந்தியாவில் ஓரினப்பால்

இந்தியாவில் ஓரினப்பால், முனைவர் கி. அய்யப்பன், விசாலாட்சி பதிப்பகம், பக். 128, விலை 100ரூ. ஓரினச் சேர்க்கையை பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் இந்நூலில் எழுதியிருக்கும் ஆசிரியரின் முயற்சி, மிகத் தெளிவானதுதான். நம்மில் பெரும்பாலானோர் ஓரினச் சேர்க்கை என்ற வார்த்தையை கேட்டாலே, முகம் சுளிப்பது உண்டு. ஓரினச் சேர்க்கையை பல மதங்களும் வன்மையாக கண்டிக்கவே செய்கின்றன. இந்தியாவில் 25 லட்சம் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. இந்தியன் பீனல் கோர்ட் 377ன்படி, ஓரினச் சேர்க்கை என்பது தண்டனைக் குரிய குற்றமாக இருந்தது. ஆனால் […]

Read more

சிவமூர்த்திகள் 64

சிவமூர்த்திகள் 64, தெள்ளாறு ஈ. மணி, சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 250ரூ. சிவபெருமான் 64 மூர்த்திகளாக தோன்றி அருள் புரிந்த விவரங்கள் அடங்கி உள்ளன. தற்கால உலகிற்கு இந்த 64 மூர்த்திகளும் எதை உணர்த்துகிறார்கள் என்பதை சிறு சிறு சான்றுகள் மூலம் விளக்கப்பட்டுள்ளன.சிவ பக்தர்களுக்கு உதவும் நூல்.   —-   செட்டிநாட்டு சமையல் (101 சைவ அசைவ வகைகள்), ஜே.எஸ். குமாரி, மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், 9, […]

Read more

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம், கமலா வி. முகுந்தா, தமிழில்-ராஜேந்திரன், கிழக்குப் பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், சௌத் உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, பக். 328, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-801-2.html பள்ளிக்கூடங்கள் குழந்தைகளை மனப்பாடம் செய்வதற்கு மட்டுமே நிர்பந்திக்கின்றன. இந்த செயலால், குழந்தைகள் பள்ளிக்கூடம் என்றாலே அலறியடித்து ஓடுகிறார்கள். புத்தகச் சுமை, அளவுக்கு அதிகமான வீட்டுப் பாடங்கள், இடைவிடாத தேர்வுகள் என்று அவர்களை மிரட்டுவதுதான் இன்றைய பள்ளிக்கூடங்களின் செயல்பாடாக உள்ளது. இதனால் மனதளவில் குழந்தைகள் […]

Read more

ரத்த ஞாயிறு

ரத்த ஞாயிறு, டாக்டர். கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், 127-63, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை 108, விலை 260ரூ. பாரத தேசத்தை எப்படிக் கட்டிக் காக்க வேண்டும் என்கிற அக்கறையுடன் போராடிய சரித்திர மகாபுருஷர்கள் ஏராளம். அவர்களுள் மக்களுக்காகவும், மதத்துக்காகவும், மொழிக்காகவும் போராடியவர்கள் சொற்பமானவர்கள். அவர்களுள் ஒருவர் சத்ரபதி சிவாஜி. இந்த மாவீரரை கதாநாயகனாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது இந்நூல். சிவாஜியின் காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் யாவும் விடுதலைப் போராட்டம் போன்றதே. பின்னாளில் ஆங்கிலேயனை விரட்டுவதற்காக எழுந்த போராட்டத்தின் தொடக்கத்தை சிவாஜிதான் அமைத்துக் கொடுத்தார் […]

Read more

பிரபல கொலை வழக்குகள்

பிரபல கொலை வழக்குகள், எஸ்.பி. சொக்கலிங்கம், கிழக்கு பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, பக். 200, விலை 140ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-787-9.html இப்படிக் கூடவா நடந்திருக்கும் என்று பலரால் வியந்து பேசும்படியான சம்பவங்களை உள்ளடக்கிய வழக்குகளை பிரபலமான வழக்குகள் என்று கூறுவோம். சமுதாயத்தில் புகழ் பெற்றவர் புரியும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளுக்கும் அப்பெயர் உண்டு. அந்த வகையில் சென்ற நூற்றாண்டில் பத்திரிகைகளில் தினமும் வெளியாகி, மக்களால் பெரிதும் […]

Read more

குறிஞ்சிச் சுவை

குறிஞ்சிச் சுவை, ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா, ஜமாலியா பதிப்பகம், பக். 96, விலை 60ரூ. குறிஞ்சிச் சுவையை தமிழர்கள் அறிந்து, புளகாங்கிதம் அடைய விரும்பி ஆசிரியர், மேற்கொண்ட முயற்சிக்கு தமிழகம் முழுவதும் நிச்சயம் பாராட்டு கிடைக்கும். வேழம் ஒன்று சருச்சரை வடிவமான கல் ஒன்றை பிடியெனக்கருதி பேதலிக்கும், கரும்புணக் களித்த புகர் முக வேழம் என்ற பாடலில் ஆசிரியர் அதை விளக்கும் முறை அருமை. தலைவனுடன் சென்ற மனது மீளுமோ என்ற ஐயத்தில் மஞ்ஞையுடன் தன்னை ஒப்பிட்டு, தலைவி ஒருத்தி கூறும் ஐங்குறு நூற்றுத் தகவலும், […]

Read more

சிந்தனை வகுத்த வழி

சிந்தனை வகுத்த வழி, ர.சு. நல்லபெருமாள், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை 14, பக். 478, விலை 180ரூ. இன்றைய உலகம் என்பது மானுடத்தின் சிந்தனை வழியில் உருவானது. அதாவது உலக வரலாறுதான் இந்த நூல். ர.சு. நல்லபெருமாள் நாவலாசிரியர். ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு கதை போலச் சொல்லிச் சொல்கிறார். 1965 இல் வெளியான இந்த நூல் தொடர்ந்து 3வது பதிப்பைக் கண்டிருக்கிறது. சுமார் 45 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நூல் என்பதை மனதில் வைத்துக் கொண்டு படித்தால், இந்த உலக வரலாற்றைப் பல்வேறு தலைப்புகளில் […]

Read more

மொழிபெயர்ப்பு ஒரு கவின்கலை

மொழிபெயர்ப்பு ஒரு கவின்கலை, வி. சந்திரன், உலக தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழிநுட்ப வளாகம், சென்னை 113, பக். 170, விலை 75ரூ. நூலின் தலைப்பில் நூலாசிரியர் நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவின் நூல் வடிவம் இது. தமிழ் மொழியுடன், பிறமொழியிலும் சிறப்பான பாண்டித்தியம் உள்ளவர்களால் மட்டுமே, மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட முடியும். மொழிபெயர்ப்புக்கு இலக்கணம் இருக்கிறது. மேலும், மொழிமாற்றம், செய்யப் பெற்றதும், இலக்கிய அந்தஸ்தைப் பெறக்கூடியதுதான். நிர்வாகம், சட்டம், தொழில்நுணுக்கம் ஆகிய துறைகளில் மொழிபெயர்ப்பில் ஈடுபடுகையில், புதிய சொல்லாக்கம் தவிர்க்க […]

Read more

சட்டச் சொல் அகராதி

சட்டச் சொல் அகராதி, வீ. சந்திரன், புத்தகப் பூங்கா, 17/9, சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 250ரூ. நீதிமன்றங்களில் வழக்காடும் தமது வக்கீல்கள் என்ன சொல்லி வாதாடுகிறார்கள் என்பது குறித்து அந்த வழக்குக்கு உரியவர்கள் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருக்கிறது. தற்போது சட்டத்துறையில் ஏற்பட்டுள்ள தமிழ் வளர்ச்சியின் காரணமாக, சட்ட நுணுக்கங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில், நீதிமன்றங்களில் தமிழில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு தேவைப்படும் சட்டக்கலை சொற்களை அனைவருக்கும் பயன்படும் வகையில் தமிழில் வடிவமைத்துள்ளார் ஆசிரியர் […]

Read more
1 9 10 11 12