இராஜஜோதிடம்

இராஜஜோதிடம், மணிமேகலை பிரசுரம், பக். 88, விலை 60ரூ. உலக மக்களின் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வழிகாட்டுபவைகளே சாஸ்திரங்கள். அதன் அடிப்படையில் மக்கள் பயன்பெறும் வகையில் பஞ்ச பூத தத்துவ நட்சத்திர பாதசாரங்களின் அடிப்படையில் விரிவாக எழுதப்பட்டுள்ளது இந்நூல். பகவான் கிருஷ்ணன், சத்ரபதி சிவாஜி முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள் வரை கொடுக்கப்பட்டுள்ள உதாரண ஜாதகங்கள் ஜோதி ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் உதவும். நன்றி: விஜயபாரதம், 15/1/2016.

Read more

சகல சவுபாக்கியம் தரும் தெய்வ வசியம் ரகசியங்கள்

சகல சவுபாக்கியம் தரும் தெய்வ வசியம் ரகசியங்கள், வேணுசீனிவாசன், அழகு பதிப்பகம், விலை 210ரூ. குடும்ப பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் கணவன் – மனைவி உறலில் ஏற்பட்ட விரிசல்களைச் சரி செய்வதற்கும், தொழிலில் ஏற்படும் தடைகளை நீக்குவதற்கும், நோய்களை குணமாக்குவதற்கும் பயன்படும் வகையில் தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 30/3/2016.   —– 12 ராசிகளும் குணங்களும், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ. 12 ராசிக்காரர்களும் எப்படிப்பட்டவர்கள், அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும், பொதுவான குணங்கள் என்ன என்பதை விவரிந்துள்ளார், டாக்டர் கே. என். சரஸ்வதி. […]

Read more

பிருகு சம்ஹிதா

பிருகு சம்ஹிதா, தமிழில் எட்டயபுரம் க. கோபி கிருஷ்ணன், குமரன் பதிப்பகம், விலை பிருகு சம்ஹிதா ரூ.500, விவாக தீபிகா ரூ.400. இந்து ஜோதிடத்தின் தந்தையாக விளங்கும் பிருகு மகரிஷியின் ஜோதிட நூல், “பிருகு சம்ஹிதா”. இந்த நூலை தமிழில் எட்டயபுரம் க. கோபி கிருஷ்ணன் மொழி பெயர்த்துள்ளார். வடமொழியில் உள்ள மகரிஷியின் ஜோதிடக் கருத்துகளை தமிழ் மரபுக்கேற்ற வகையில், எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாக எழுதியுள்ளார். 12 ராசிக்குரிய பலன்கள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1,296 லக்ன பாவ பலன்களை உள்ளடக்கியது. இதே ஆசிரியர் […]

Read more

27 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள்

27 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள், செந்தூர் திருமாலன்,  தினத்தந்தி பதிப்பகம், பக். 208, விலை 180ரூ. மனித வாழ்வில் நட்சத்திரங்களும், கிரகங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில் ரேவதி முதல் அஸ்வினி வரையிலான 27 நட்சத்திரங்கள் மனிதனின் அங்கங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித்தன்மை, பார்வை, நிறம், குணம், ஆடை, அணிகலன், பூக்கள், தொழில், நைவேத்தியம், தூபம், மந்திரம், பலன் என்று தனித்தனியாக பல்வேறு அம்சங்கள் இந்து சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டள்ளன. அதன்படி உரிய நட்சத்திர கோவில்களுக்குச் சென்று பரிகாரம் செய்வதால் குறைபாடுகளைக் குறைத்துக் […]

Read more

திடீர் இடியோசை

திடீர் இடியோசை, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 260ரூ. இன்றைய சமுதாயம் எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழிமுறைகளைச் சொன்னவர். நமது விரைவு வாழ்க்கையை நெறிப்படுத்த தியான முறையைத் தந்தவர் ஓஷோ. முப்பது ஆண்டுகளாக அவர் ஆற்றிய சொற்பொழிவு, எண்ணற்ற புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அவற்றில் இந்த திடீர் இடியோசையும் ஒன்று. இதை சுவாமி சியாமானந்த் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். எதற்காகவும் உன் வாழ்க்கையை தியாகம் செய்யாதே. வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய். வாழ்க்கைதான் இறுதி இலக்கு. அது எந்த நாட்டை விடவும் […]

Read more

காலப்பிரகாசிகை

காலப்பிரகாசிகை, கே.என். சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், பக். 426, விலை 310ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000002619.html ஒரு விழாவைக் கொண்டாடவோ அல்லது ஒரு முக்கியச் சடங்கைத் துவங்க வேண்டியிருந்தாலோ, நல்ல நேரம் பார்த்துத்தான் எவருமே துவங்குவர். நன்மை செய்யும் கிரகங்களும், தீமை விளைவிக்கும் கிரகங்களும் உள்ளன. அதேபோல், சுப, அசுப நட்சத்திரங்களும், திதிகளும், கிரக நிலைகளும் உள்ளன. எனவே, அதற்கு அந்த நாளைப் பற்றிய திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் (பஞ்ச அங்கங்கள்) இவை யாவும் நன்மையளிக்கக் […]

Read more

சங்கு தியானம்

சங்கு தியானம், யோகி சிவானந்த பரமஹம்சர், விஸ்வயோக கேந்திரா டிரஸ்ட், கிருஷ்ணகிரி, விலை 150ரூ. சங்குகளின் மகத்தான சக்தியை இந்நூல் விவரிக்கிறது. வலம்புரி சங்கு எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த இல்லத்தில் செல்வம் பெருகும். எல்லா தேவதைகளும் அங்கு வாசம் செய்வார்கள் என்று நூலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பல நாடுகளில் சேகரிக்கப்பட்ட அரியவகை சங்குகளின் வண்ணப்படங்கள் கண்ணைக் கவர்கின்றன. நன்றி: தினத்தந்தி, 21/10/2015.   —- சர்க்கரை (நீரழிவு) மீது அக்கறையா?, எஸ். காளிராஜ், சரணம் அறக்கட்டளை வெளியீடு, விலை 35ரூ. சர்க்கரை நோயாளிகள் […]

Read more

மகா அவதார் பாபா

மகா அவதார் பாபா, வாசு. இராதாகிருஷ்ணன், மணிவாசகர் பதிப்பகம், விலை 60ரூ. சிதம்பரம் அருகில் உள்ள பரங்கிப்பேட்டையில் கி.பி. 203ம் ஆண்டில் பிறந்தவர் பாபா. பெற்றோர் சுவேதநாத அய்யர் – ஞானம்பிகை. பெற்றோருக்கு 8வது பிள்ளையாகப் பிறந்த பாபாவின் இயற்பெயர் நாகராஜ். சிரஞ்சீவியான பாபா, இன்னமும் இமயமலையில் வாழ்வதாகக் கருதப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாபா மீது மிகுந்த பக்தி கொண்டவர் என்பதும், அவர் வாழ்க்கை வரலாற்றை பாபா என்ற பெயரிலேயே திரைப்படமாக எடுத்ததும் அனைவரும் அறிவர். நூலாசிரியர் வாசு. இராதாகிருஷ்ணன், பாபா பற்றி […]

Read more

பாவார்த்த ரத்னாகரம்

பாவார்த்த ரத்னாகரம், விருத்தியுரை எட்டயபுரம் க.கோபி கிருஷ்ணன், குமரன் பதிப்பகம், பக். 672, விலை 400ரூ. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, தீண்டாமையை எதிர்த்துக் குரல் கொடுத்து, பெரும் மதப்புரட்சி செய்த ராமானுஜரால், இந்த ஜோதிட நூல் ஆக்கப்பட்டிருக்கிறது என்பது வியப்பான விஷயம். மொத்தம், 383 சமஸ்கிருத சுலோகங்களில், 14 நீண்ட அத்தியாயங்களில் லக்ன பலாபலன்கள், 12 பாவகங்களில் நவக்கிரகங்களின் பலம், பலவீனம், கிரக சேர்க்கைகளின் பலன்கள், காரக கிரகங்களின் வலிமை, தசாபுத்திப் பலன்கள், ராஜயோகங்கள், வாகன பாக்கிய யோகங்கள், மரணம் தரும் திசா புத்திகள் […]

Read more

சரசோதிமாலை எனும் காலக்கணிதம் (கி.பி. 1310)

சரசோதிமாலை எனும் காலக்கணிதம் (கி.பி. 1310), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, விலை 140ரூ. சரசோதிமாலையென்னும் இவ்வரிய சோதிடத்தின் ஒரு நிறை களஞ்சியம். ஒருவன், சாதாரணக் குடிமகனாயினும் மன்னனாயினும் அவனுக்கு இகம் பரம் ஆகிய இரண்டுக்கும் வேண்டப்படும் சோதிட நியதிகள் நிறைந்து விளங்குகின்றன. அதனால் எல்லார்க்கும் வேண்டப்படும் சோதிட விஷயங்கள் யாவும் பொதிந்துள்ளது இந்நூலின் சிறப்பு. சரசோதிமாலையின் பாடல்கள் பலவகை விருத்தப்பாக்கள் ஆனவை. அதனால், தமிழில் ஆற்றல் பெற்றவர்களே உரையின்றி இந்நூலை படித்து பயன்பெற முடியும். இக்காலத்தில் இதன் மூலத்தை மாத்திரம் படித்து எல்லோரும் […]

Read more
1 2 3 4 5 9