நீலகண்டம்

நீலகண்டம், சுனில் கிருஷ்ணன், யாவரும் பதிப்பகம், விலை ரூ.270. மிலன் குந்தேராவின் சொற்களில், ‘நாவல் என்பது ஆசிரியரின் வாக்குமூலம் அல்ல; எலிப்பொறியாக மாறிவிட்ட இன்றைய உலகத்தில், மனித வாழ்க்கை மீதான விசாரணை’. துளி அமுதமும் நிறைய விஷமுமாக இறங்கிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கையின் மீதான விசாரணையாக விரிகிறது சுனில் கிருஷ்ணனின் முதல் நாவல் ‘நீலகண்டம்’. காதல் திருமணம், குழந்தைக்கான தவிப்பு, பெண் குழந்தையைத் தத்தெடுப்பது, ஆட்டிஸம் பாதித்த அந்தக் குழந்தையை வளர்ப்பதன் துயர சாகசம் – இதையெல்லாம் ஒற்றை வரிசையில் அல்லாமல் பல்வேறு முனைகளில், பல்வேறு […]

Read more

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம், மயிலன் ஜி சின்னப்பன், உயிர்மை பதிப்பகம், விலை: ரூ.250. இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவரும், மூளை-தண்டுவட அறுவைச்சிகிச்சை மருத்துவருமான மயிலன் ஜி சின்னப்பன் எழுதியிருக்கும் மருத்துவத் துறை சார்ந்த நாவல் இது. இளம் மருத்துவர் ஒருவரின் தற்கொலையில் தொடங்குகிறது இந்த நாவல். அந்த இறப்பைப் பற்றி மருத்துவத் துறையின் வெவ்வேறு படிநிலைகளில் பணிபுரியும் வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு கதைகளைச் சொல்கிறார்கள். ஒன்றுக்கொன்று தொடர்புடைய, ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிரான இந்தக் கதைகளால் துப்பறியும் நாவலுக்கான பாணியை இந்நாவல் பெற்றுவிடுகிறது. அந்த மர்மத் தன்மையினூடாக […]

Read more

பார்வை தொலைத்தவர்கள்

பார்வை தொலைத்தவர்கள், யோசே சரமாகோ, தமிழில்: எஸ்.சங்கரநாராயணன், பாரதி புத்தகாலயம், விலை: ரூ.295. கரோனா காலத்தில் ஆல்பெர் காம்யுவின் ‘கொள்ளைநோய்’ (தி ப்ளேக்) நாவல் வாசிக்கப்படுவதில் ஆச்சர்யமில்லை. கொள்ளைநோய் பற்றிய குறியீட்டுக் கதை என்றபோதும் அது நேரடியாகக் கதைசொல்லும் தன்மையில் அமைந்திருக்கிறது. ஆனால், யோசே சரமாகோவின் ‘பார்வை தொலைத்தவர்கள்’ (பிளைண்ட்னெஸ்) நாவலும் இந்தக் காலத்தில் அதிகம் வாசிக்கப்படும் நாவலாக இருக்கிறது. போர்த்துக்கீசிய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சரமாகோ இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர். 1995-ல் வெளியான இந்நாவல் விதிகளை மாற்றிப் போட்டு விளையாடும் புனைவின் சாத்தியங்களை […]

Read more

மணல்

மணல், பா.செயப்பிரகாசம், நூல்வனம் வெளியீடு,  விலை: ரூ.210. பா.செயப்பிரகாசம் எழுதிய ‘மணல்’ நாவல், சமகால அரசியலைப் பேசுகிறது. ‘மணல்’ என்ற எளிமையான தலைப்பே அதன் கதையையும் அரசியலையும் சொல்லிவிடும். இயற்கையின் சமீபத்திய படைப்பான மனிதன் எப்படித் தன்னுடைய சுயநல உறுபசிக்குப் பெற்ற அன்னையைப் பிய்த்துத் தின்கிறான் என்பதையும், உலகெங்கும் உள்ள இயற்கையின் அடிப்படை ஆதாரங்களை அழிப்பதில் மனிதன் எவ்வளவு வேகமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறான் என்பதையும், முதலாளிகளின் கொள்ளை லாபவேட்டைக் களமாக மக்களின் உழைப்பு மட்டுமல்ல; இயற்கையின் மார்பில் ரத்தம் வரும் வரை உறிஞ்சிக் குடிக்கிற வெறித்தனத்தையும் […]

Read more

அன்பே ஆரமுதே

அன்பே ஆரமுதே, தி.ஜானகிராமன், காலச்சுவடு பதிப்பகம், விலை ரூ.500/- மருத்துவர்கள் எல்லாக் காலத்திலுமே கடவுளுக்கு இணையாகவே மதிக்கப்பட்டுவருகிறார்கள். என்றாலும், இந்த கரோனா காலம் எப்போதைவிடவும் இப்போது மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் மிகுந்த நன்றியுணர்வோடு பார்க்கிற சூழலை உருவாக்கியிருக்கிறது. மனிதர்களின் இன்ப துன்பங்களை விசாரணைக்கு உட்படுத்தும் இலக்கியங்களில் துயரம் தீர்க்கும் மருத்துவர்களுக்கும் இடமில்லாமல் இருக்குமா? தன்னலமற்ற மருத்துவர் ஒருவரைப் பற்றிய மகத்தான சித்திரத்தைத் தமிழுக்கு அளித்திருக்கிறார் தி.ஜானகிராமன். ‘அன்பே ஆரமுதே’ நாவலின் நாயகனான அனந்தசாமி, ஒரு மருத்துவர். எம்பிபிஎஸ் படித்த மருத்துவர் இல்லை. சந்நியாசத்தோடு வைத்தியமும் […]

Read more

புத்துயிர்ப்பு

புத்துயிர்ப்பு, லியோ டால்ஸ்டாய், தமிழில்: ரா.கிருஷ்ணய்யா, அடையாளம் பதிப்பகம், விலை: ரூ.395. நெருக்கடியான சூழலில் துவண்டிருக்கும் மனதுக்கு வாசிக்க இதமான புத்தகமாக டால்ஸ்டாய் எழுதிய ‘புத்துயிர்ப்பு’ நாவல் பரிந்துரைக்கப்படுகிறது. ‘உங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு புத்தகம் மட்டும்தான் வைத்திருக்க அனுமதி என்றால், எந்தப் புத்தகத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்?’ என்ற கேள்விக்குப் பலரும் ‘புத்துயிர்ப்பு’ நாவலைச் சொல்கிறார்கள். என்ன காரணம்? வாசகர்களை இந்நாவல் சுயபரிசீலனைக்கு உட்படுத்த முயல்கிறது என்பதுதான் முக்கியமான காரணமாக இருக்கக்கூடும். இந்நாவலின் பிரதானப் பாத்திரம் நெஹ்லூதவ் ஒரு லட்சியப் பாத்திரமாக இருக்கிறான். அன்றாட வாழ்க்கை […]

Read more

நிலவென வாராயோ!

நிலவென வாராயோ!,  வரலொட்டி ரெங்கசாமி,  தாமரை பிரதர்ஸ், விலை ரூ.300. அவளன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை தான் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை விவரித்துக் கொண்டு செல்கிறார், நுாலாசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. கதை மாந்தர்களின் பெயர்கள் அனைத்தும், அன்னையின் பல்வேறு பெயர்களைத் தாங்கியே நடைபயணிக்கிறது. காதல், பாசம், அன்பு, நேசம், கோபம், வேதனை, கசப்பு கலந்த உணர்வு குவியலாய் எழுத்துக்கள் படைக்கப்பட்டுள்ளது சிறப்பு.  வாழ்வின் எதார்த்தங்களை எழுத்தோட்டமாய் கொண்டு சென்று வெற்றி பெற்றிருக்கிறார் ஆசிரியர். புத்தகம் முழுதும் அன்னையை தவழவிட்டு,உலவவிட்டு, ‘நிலவென வாராயோ’ […]

Read more

சா

சா,  கு. ஜெயபிரகாஷ்,  ஆதி பதிப்பகம், பக்.128, விலை ரூ.120.  மரணத்தை எண்ணத்தில் கொண்டு எழுத்தாக மாற்றுவதைப் பெரும்பாலும் யாரும்விரும்புவதில்லை அல்லது முன் வருவதில்லை.தமிழில் மரணம் தொடர்பாக வெளிவந்த நூல்களை, புதினங்களை விரல்விட்டு அவலம் சம்பத்தின் “இடைவெளி’யையும் சேர்த்து. இத்தனைக்கும் சித்தர்கள் வாழ்ந்த நிலம் இது. இங்கே மரணத்தைப் பாடாத சித்தர்களே இல்லை. பழந்தமிழ்க் கவிஞர்கள் பாடிய தனிப் பாடல்கள் ஏராளம். ஆங்கிலத்தில் நிறைய நூல்கள். தமிழில் பதிவுகள் குறைவே.கு. ஜெயபிரகாஷ் எழுதிய ‘சா’ நாவல் (ஓரிடத்தில் நூல் என்றும் எச்சரிக்கையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது) இந்தப் […]

Read more

Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)

Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920) , மலர் -விசு, வாசக சாலை பதிப்பகம், பக்.392, விலை ரூ.380.   சுதந்திரப் போராட்டத்தின் விதையான சிப்பாய் புரட்சி முளைத்த வேலூரின் காந்தி நகரில் தொடங்கும் கதை, பாஸ்டன் விமான நிலையத்தில் முடிகிறது. கிச்சா என்று அழைக்கப்படும் விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் கதைநாயகன். கிளிமூக்கு என்று அவனால் செல்லமாக அழைக்கப்படும் உமா கதையின் நாயகி. பிளஸ் 2, கல்லூரி, சிஏ என அவர்களுடைய படிப்புடன் காதலும் வளருகிறது. அம்மா உள்பட தான் நேசிப்பவர்களை இழந்துவிடும் உமா, “விச்சு பயமா இருக்கு. நாம […]

Read more

கர்ணன் – காலத்தை வென்றவன்

கர்ணன் – காலத்தை வென்றவன், மராத்தி மூலம்: சிவாஜி சாவந்த், தமிழில் – நாகலட்சுமி சண்முகம்;மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.862; விலை ரூ.899. மகாராஷ்டிர அரசின் விருது, குஜராத் இலக்கிய அமைப்பின் விருது, ஞானபீடத்தின் மூர்த்திதேவி விருது உள்பட பல விருதுகளைப் பெற்ற நாவலின் தமிழாக்கம் இது. சூரிய பகவானுக்கும், குந்திக்கும் பிறந்த கர்ணனை குந்தி அசுவநதியில் போட்டுவிட, அதிரதன் என்னும் தேரோட்டி கர்ணனை அசுவநதியில் கண்டெடுத்து தனது மகனாக வளர்த்தார். பிறந்த கணம் தொட்டு பாரதப் போரில் அர்ஜுனனால் கொல்லப்படும் வரை கர்ணன் […]

Read more
1 2 3 59