எனது இமாலயப் பயணம்

எனது இமாலயப் பயணம், தாமரை செந்தூர்பாண்டி, சிவகாமி புத்தகாலயம், விலை:ரூ.120. தாமரை செந்தூர்பாண்டி, பானியட், குருஷேத்திரம், எழுத்தாளர் சண் சிம்லா, டேராடூன், ஹரித்துவார் என்ற பல இடங்களுக்கு பயணித்ததை அவருக்கே உரிய பாணியில் சிறப்பாகச் சொல்லி இருக்கிறார். நடுத்தரவர்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையிலும், நம்மையும் அவருடன் அழைத்துச் சென்று விளக்கும் உணர்வைத் தரும் வகையிலும் இவற்றைத் தந்து இருக்கிறார். அவர் எடுத்த புகைப்படங்கள், இந்தப் பயண அனுபவத்தைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 20/2/22 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

கொல்லிமலை மகிமை

கொல்லிமலை மகிமை, மதியுகி சிவகுரு, பிரேமா பிரசுரம், பக். 104, 60ரூ. எந்த இடத்துக்கு சென்றாலும், அந்த இடம் பற்றிய விபரங்களை நாம் அறிந்திருந்தால் மட்டுமே, நன்கு சுற்றி பார்க்க முடியும். நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக உள்ள கொல்லிமலை பற்றி பலரும் தெரிந்திருப்போம். ஆனால், அங்கு பார்க்க வேண்டியவை பற்றி கேட்டால், சரியாகத் தெரியாது. இந்தக் குறையைப் போக்கும் வகையில், கொல்லிமலை பற்றி முழு தகவல்களுடன், இந்நுால் வெளிவந்துள்ளது. நன்றி: தினமலர், 26/8/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

வேங்கடம் முதல் குமரி வரை

வேங்கடம் முதல் குமரி வரை, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், சந்தியா பதிப்பகம், விலை 600ரூ. தமிழகக் கோயில்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல்களில் ஒன்று, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் ‘வேங்கடம் முதல் குமரி வரை’. பாலாற்றின் மருங்கிலே, பொன்னியின் மடியிலே,காவிரிக் கரையிலே, பொருநைத் துறையிலே என்ற தலைப்புகளில் ஐந்து பாகங்களாக இந்நூலில் வெளிவந்தது. வடநாட்டுக் கோயில்களைப் பற்றி, ‘வடவேங்கடத்துக்கு அப்பால்’ என்றொரு நூலையும் எழுதியிருக்கிறார் பாஸ்கரத் தொண்டைமான். வேங்கடம் முதல் குமரி வரையின் ஐந்து பாகங்களையும் ஒரே தொகுப்பாக சந்தியா பதிப்பகம் […]

Read more

மதுரை நகரக் கோயில்கள்

மதுரை நகரக் கோயில்கள், டி.வி.எஸ். மணியன், அமராவதி வெளியீடு, பக். 200, விலை 130ரூ. மதுரை நகரத்திற்குள் அமைந்திருக்கும் கோயில்கள் பற்றி கூறும் நூல். மதுரைக் கோயில்களை காண விரும்புவோருக்கும் ஆராய விரும்புவோருக்கும் இந்நூல் ஒரு நல்ல வழிகாட்டி. கோயில்களை அறிமுகம் செய்யும் அதே வேளையில் கோயில் வரலாறு, கோயில் சார்ந்த மன்னர்கள் வரலாறு, மக்கள் வாழ்க்கை முறை, நம்பிக்கை, புராணப் பின்புலங்கள் என்று அனைத்தையும் நமக்கு எடுத்துக்காட்டிவிடுகிறார் நூலாசிரியர். நன்றி: குமுதம், 3/5/2017.

Read more

ஆன்மிக இலங்கைத் திருப்பயணம்

ஆன்மிக இலங்கைத் திருப்பயணம், “கயிலை மாமணி” மருத்துவர் நா. மோகன்தாஸ், இமாலயா பதிப்பகம், விலை 90ரூ. பயண நூல்களில் இது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில், பல இந்துக்கோவில்கள் உள்ளன. அங்கு யாத்திரை சென்ற “கயிலை மாமணி” மருத்துவர் நா. மோகன்தாஸ், தமது அனுபவங்களை இந்த நூலில் விவரித்துள்ளார். குறிப்பாக, யாழ்ப்பாணம், திரிகோணமலை வரலாறுகளையும், கதிர்காமம் கந்தன் திருக்கோவில், நயினார் தீவு, நாகபூசணி அம்மன் திருக்கோவில், நகுலேஸ்வரம் சிவன் திருக்கோவில் போன்ற திருக்கோவில்கள் பற்றி அவர் கூறுகின்ற தகவல்களைப் படிக்கும்போது மெய்சிலிர்க்கிறது. […]

Read more

எனது அமெரிக்கப் பயணம்

எனது அமெரிக்கப் பயணம், பேரா. கே. ஜெகதீசன், விஜயா பதிப்பகம், பக். 152, விலை 80ரூ. அமெரிக்கா போய் வருவது இன்று பெரிய விஷயமே இல்லை. ஆனால் அந்த அனுபவங்களை சுவைபடச் சொல்லி, படிப்போரை சொல்லப்படும் இடத்திற்கே அழைத்துச் சென்று அனுபவிக்க வைக்கும் கலை சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அது பேரா. கே.ஜெ.வுக்கு கைகூடியிருக்கிறது. அமெரிக்கா செல்லாதவர்களுக்கு வியப்பு. அமெரிக்கா சென்றவர்களுக்கு புது அனுபவம். நன்றி: குமுதம், 28/12/2016.   —-   அகிலமே என் அப்பாதான், மணிமேகலைப் பிரசுரம், விலை 80ரூ. இன்றைய […]

Read more

பொன்விழா சுற்றுலா

பொன்விழா சுற்றுலா, கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 208, விலை 140ரூ. ஜம்பதாண்டைக் கடந்துவிட்ட நமது தேசத்தின் சுதந்திரத்தை இன்றைய தலைமுறைக்குச் சொல்லப்பட வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட நூல். இந்த தேசத்திற்காக பாடுபட்டு மறைந்த மாமனிதர்களின் ஊர்களுக்கு மாணவர்கள் சுற்றுலா செல்வது போன்று இந்நூலை ஜீவபாரதி படைத்திருப்பது சிறுவர்களுக்கு பயன்தரும். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 31/8/2016.

Read more

இமயமலைச் சாரலிலே

இமயமலைச் சாரலிலே, டி.கே.எஸ். கலைவாணன், வானதி பதிப்பகம், விலை 90ரூ. பொதுவாக பயண நூல் என்றால், அது பயணித்தவரின் அனுபவங்களின் வடிகாலாக மட்டுமே இருக்கும். ஆனால் “நாடக மன்னர்”அவ்வை டி. சண்முகத்தின் மகனான டி.கே.எஸ். கலைவாணன், அந்த மரபை மீறி தனது பயணத்தின் அனுபவங்களால் மற்றவர்கள் பயன் அடைய வேண்டும் என்ற நோக்கில் இதனை ஆக்கி இருக்கிறார். பயண ஏற்பாட்டாளர் மூலம் இமயமலையில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ஹரித்துவார் போன்ற இடங்களுக்குச் சென்ற அவர், அங்கே பார்க்க வேண்டிய இடங்கள், தங்கும் […]

Read more

வேலூர் மாவட்ட வரலாறு

வேலூர் மாவட்ட வரலாறு, வேலூர் மா. குணசேகரன், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. இந்நூல் வேலூரின் வரலாற்றைக் கூறம், நல்லதோர் தகவல்களஞ்சியம். வேலூரின் பெருமைகளையும், சிறப்புகளையும் பல கோணங்களில் விவரித்து படிப்போர் மனதைக் கவரும் வகையில் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர் வேலூர் மா. குணசேகரன். இது இணையத்திலும், விக்கிபாடியா போன்ற இணையத் தகவல் களஞ்சியங்களில் இடம் பெறவேண்டும். நன்றி: தினத்தந்தி, 04/5/2016.   —- சுற்றுலாச் செல்ல 12 ஜோதிர் லிங்கங்கள், டாக்டர் கே. என். சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ. சிவத்தலங்கள் பலவற்றுள் […]

Read more

செட்டிநாட்டு சுற்றுலாவும் சிவகங்கை மாவட்ட பிரசித்திபெற்ற திருத்தலங்களும்

செட்டிநாட்டு சுற்றுலாவும் சிவகங்கை மாவட்ட பிரசித்திபெற்ற திருத்தலங்களும், S.L.S.பழனியப்பன், S.L.S. பதிப்பகம், பக். 74, விலை 60ரூ. செட்டிநாட்டில் உள்ள பிரசித்திபெற்ற கோயில் தலங்கள், அரண்மனை, அழகிய வீடுகள், அருங்காட்சியம் போன்ற அனைத்தையும் விவரித்து, அவற்றை காணச்செல்வோருக்கு உதவும் வகையில் ஒரு சுற்றுலா வழிகாட்டியாக விளங்கும் நூல். நன்றி: குமுதம், 27/4/16.   —- அக்னிக் குஞ்சுகள், ஏம்பல் ராஜா, பஞ்சவர்ணம் பதிப்பகம், பக். 232, விலை 150ரூ. சமுதாயத்திற்கான குரலாக ஒலிக்கும் கவிதைகளின் தொகுப்பு இவை. சமூக விடுதலையில் கவிஞருக்குள்ள அக்கறை வெளிப்படும் […]

Read more
1 2