இது சிக்ஸர்களின் காலம்

இது சிக்ஸர்களின் காலம்,  ராம் முரளி; யாவரும் பப்ளிஷர்ஸ், பக்.224, விலை ரூ.250. தற்போது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி தொடங்கி நடைபெறும் நிலையில் கிரிக்கெட் சீசன் உச்சகட்டத்தில் உள்ளது. கிரிக்கெட் ஆட்டங்களில் துரிதமாக ரன்களைக் குவிக்க பவுண்டரிகள், சிக்ஸர்கள் உதவுகின்றன. தற்போது ஏராளமான சிக்ஸர்கள் அடிக்கப்படுவதால், இது சிக்ஸர்களின் காலம் என நூலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது போலும். தற்காலத்தில் கிரிக்கெட் என்றாலே நினைவுக்கு வரும் விராட் கோலி, தோனி, ரோஹித் சர்மா, ஷிகர் தவன் (இந்தியா) கிறிஸ் கெயில் (மே.இ.தீவுகள்), பாபர் ஆஸம் […]

Read more

கால்பந்தாட்டம் ஒரு நகைச்சுவைக் கண்ணோட்டம்

கால்பந்தாட்டம் ஒரு நகைச்சுவைக் கண்ணோட்டம், ப.குணசேகர், பண்புப் பதிப்பகம், பக். 192, விலை 150ரூ. கால்பந்தாட்ட வரலாறு என்ன? அதன் தோற்றம் எப்போது என்பதை ஆண்டு அடிப்படையில் அடுக்கடுக்காக எழுதியிருப்பது, இந்நுாலுக்கு சிறப்பு சேர்க்கிறது. களத்தில் தனிநபராக நின்று, எதிரணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய வீரர்களைப் பற்றிய செய்திகளோடு, நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் கதாபாத்திரங்களை கால்பந்தாட்ட வீரர்களாகவும் ரசிகர்களாகவும் சித்தரித்து, நகைச்சுவை ததும்ப எழுதியுள்ளார், நுாலாசிரியர் குணசேகர். நன்றி: தினமலர், 26/8/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

ஒலிம்பிக்ஸ் விளையாட்டும், உலக ஜாம்பவான்களும்

ஒலிம்பிக்ஸ் விளையாட்டும், உலக ஜாம்பவான்களும்,  நா.விஜயரெகுநாதன், டிஸ்கவரி புக் பேலஸ் (பி) லிமிடெட், பக்.144, விலை ரூ.125. கிரேக்கத்தில் தொடங்கிய பழங்கால ஒலிம்பிக் வரலாறு, தொடக்கத்தில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, மீறிப் பார்க்கும் பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, நவீன ஒலிம்பிக்கின் வரலாறு, ஒலிம்பிக்கில் படைக்கப்பட்ட சாதனைகள், சுவாரஸ்யமான சம்பவங்கள், பயங்கரவாத தாக்குதல்கள் போன்றவற்றை நூலாசிரியர் அற்புதமாகப் பதிவு செய்துள்ளார். பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் சிந்து உள்ளிட்ட வீரர்கள் படைத்த சாதனை, ஒலிம்பிக்கில் இந்தியாவின் நிலை, ஹாக்கியில் இந்தியாவின் சாதனை, தயான் சந்த், […]

Read more

ஓடுகளப்போட்டி விதிகளும் விளையாட்டு விதிகளும்

ஓடுகளப்போட்டி விதிகளும் விளையாட்டு விதிகளும், எஸ். நவராஜ் செல்லையா, எஸ்.எஸ். பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 528, விலை 300ரூ. தடகளம் உள்ளிட்ட பல விளையாட்டு விதிகள் குறித்த அனைத்து தகவல்களையும் அழகிய தமிழில் கொண்டு வந்திருக்கிறது இந்நூல். ஆசிரியரின் விளையாட்டுத்துறை சார்ந்த பரந்த அனுபவங்கள் வெளிப்பட்டுள்ளன. ஆங்கில சொற்களுக்கு இணையான விளையாட்டு கலைச்சொற்கள் இப்புத்தகத்துக்கு மெருகூட்டுகின்றன. சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வம் காட்டுபவர்கள்தான், இன்று பல்வேறு விளையாட்டுகளில் முன்னணி வீரர்களாகத் திகழ்கின்றனர். அதற்கு தீவிர பயிற்சியுடன் விளையாட்டு குறித்த தொழில்நுட்ப அறிவும் அவசியம். […]

Read more