முறிந்த வானவில்

முறிந்த வானவில், கோ. வசந்தகுமரன், தமிழ் அலை, பக். 144, விலை 100ரூ. வாழ்வியல் அம்சங்களை, மனித மனதில் புகுத்தும் கவிதை தொகுப்பு நூல். அழகியலை, மிக எளிய நடையில் சின்ன சின்ன கவிதைகளாகப் படைத்துள்ளார். சமகால சூழலை, நாலு வரிகளில், ‘நச்’ என்று பதிய வைக்கின்றன சில. நீர், நிலம், நெருப்பு, காற்று, வானம் என சூழலியலை அழகிய வடிவில் பிரதிபலிக்கின்றன கவிதைகள். ‘ஒரு கூழாங்கல்லை மணலாகச் செதுக்கும் வரை ஓய்வதில்லை நதி…’ என்கிறது ஒரு கவிதை. இப்படி, இயற்கை அனுபவங்களின் சாரம் […]

Read more

தமிழக வரலாற்றில் பெரம்பலூர்

தமிழக வரலாற்றில் பெரம்பலூர், ஜெயபால் இரத்தினம், விச்சி பதிப்பகம், பக்.572, விலை ரூ.700.  பெரம்பலூர் வட்டாரத்தின் வரலாற்றைச் சொல்லும் இந்நூலில், முதலில் பெரம்பலூர் பகுதியின் நிலவியலமைப்பு விவரிக்கப்படுகிறது. பழைய கற்காலத்திலேயே பெரம்பலூர் வட்டாரத்தில் மக்கள் பரவி வாழத் தொடங்கிவிட்டதையும், புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்படைக் காலங்களில் ஊர்கள் உருவாகிவிட்டதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. சங்க காலத்தில் இவ்வட்டார நிலப்பரப்பில் விச்சி, கண்டீரம் மற்றும் பிடவூர் ஆகிய மூன்று குறுநில அரசுகள் அமைந்திருந்தன, எஞ்சியுள்ள பகுதிகள் மலையநாட்டின் ஒரு பகுதியாகவும், சோழ நாட்டின் ஒரு பகுதியாகவும் […]

Read more

அழகிய நதி

அழகிய நதி, தரம்பால், தமிழில்: பி.ஆர்.மகாதேவன், கிழக்குப் பதிப்பகம், மொத்த விலை: ரூ.400. ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய இந்திய அறிவுத்தளம் பற்றிப் பேசும்போது பெருமிதமும், சில நூற்றாண்டுகளுக்கு முந்தையதைப் பேசும்போது கீழான பார்வையும் வெளிப்படுவது பொது மனோபாவமாகவே மாறியிருக்கிறது. நிறைய கட்டுக்கதைகளும் பொய்ப்புரட்டுகளும் இந்த வரலாற்றில் கலந்திருக்கின்றன. அங்கே புதையுண்டிருக்கும் உண்மையை வெளியே எடுக்கும் எண்ணத்தோடு களத்தில் இறங்கினார், இந்தியாவின் மிக முக்கியமான காந்தியச் சிந்தனையாளர்களுள் ஒருவரான தரம்பால். அவருடைய இரண்டு முக்கியமான புத்தகங்கள் இப்போது மறுபதிப்பு கண்டிருக்கின்றன. 18-ம் நூற்றாண்டில் இந்தியப் […]

Read more

வித்தியாசம்தான் அழகு

வித்தியாசம்தான் அழகு, ச.மாடசாமி,  அகரம் அறக்கட்டளை வெளியீடு, விலை ரூ.100. அன்பின் மை தொட்டு எழுதும் ச.மாடசாமி, ஆங்கில மொழியில் வாசித்திருக்கும் குழந்தைகளுக்கான கதைகளைத் தமது பேரக் குழந்தைகளுக்குச் சொன்ன அனுபவத்தின் ருசியோடு இந்நூலில் சொல்கிறார். குரைக்கச் சொன்னால் வெவ்வேறு விலங்குகளின் ஒலிக் குறிப்பை எழுப்பும் நாய்க்குட்டி, பல் டாக்டர் சுண்டெலி, சட்டை பொத்தான் இழந்ததால் யாருமே வாங்காதுபோவதில் வருத்தமுறும் கரடி பொம்மை என்று பல விலங்குகள் சுவாரஸ்யமாக உரையாடுகின்றன. போட்டி, பொறாமை, கர்வம் போன்றவற்றைக் குழந்தைகள் கடந்துபோவதில் எப்படி பெரியவர்கள் குறுக்கிட்டுக் குழப்புகிறோம் […]

Read more

ஓவியம் தேடல்கள் புரிதல்கள்

ஓவியம், தேடல்கள், புரிதல்கள், கணபதி சுப்பிரமணியம், யாவரும் பதிப்பகம்,  விலை: ரூ.350. ஓவியரும் ஓவியத்தைப் பற்றி எழுதும் மொழியைக் கொண்டவருமான கணபதி சுப்பிரமணியம், சுயமுயற்சியில் ஓவியம் பயின்றவர். உருவப் படங்கள், நிலக்காட்சிகள், சித்திரக்கதை, அனிமேஷன் என்று தொடங்கி மெய்சாரா ஓவியங்களில் நிலைகொண்டு தற்போது பூனைகளைக் கீற்றிவருகிறார். இவர் எழுதி சமீபத்தில் ‘யாவரும் பதிப்பக’ வெளியீடாக வந்திருக்கும் ‘ஓவியம்: தேடல்கள், புரிதல்கள்’ புத்தகமானது ஓவிய மாணவர்களுக்கும் ஓவிய ரசனையை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் மிக முக்கியமானது. நன்றி: தமிழ் இந்து, 04.04.2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

அன்று ஆறு ஆறாயிருந்தது

அன்று ஆறு ஆறாயிருந்தது,  நா.நாகராஜன், காவ்யா, விலை ரூ.110. கலை, இலக்கியம், சமூகம் பற்றிய தன் அனுபவப் பிழிவுகளைத் தருகிறார் நாகராஜன். ஆயிரம் பூக்கள் மனதில் என்றொரு கட்டுரை. கல்லுாரியில் படிக்கின்ற காலத்திலேயே கவிதைகள் பிடிக்கும் எனக்கு. இரண்டு பக்க சிறுகதையில் சொல்ல முடியாத விஷயத்தை இரண்டே வரிகளில் நறுக்குத் தெரித்தாற்போல் சொல்லி, கைத்தட்டு வாங்க கவிதைக்கு தான் முடியும்… ஆயிரம் கவிதைகள் வாசித்தால், ஆறு கவிதைகள் தான் மனதில் நிற்கும். ஆனாலும் கவிதை இன்பம் நாடி, வாசிப்பை விட முடியவில்லை என்கிறார் கட்டுரையாளர். […]

Read more

பெரியாழ்வார் போற்றும் பெருவாழ்வு

பெரியாழ்வார் போற்றும் பெருவாழ்வு, தி.இராசகோபாலன்,  வானதி பதிப்பகம், பக்.200, விலை ரூ.120.  முதலாழ்வார்களுள் முதன்மையானவர் விஷ்ணுசித்தரான பெரியாழ்வார். இவர் ‘பெரிய திருவடி’யின் அம்சம். தாய்மையின் பெருமையைப் பிள்ளைத்தமிழ் மூலம் உலகுக்கு எடுத்துரைத்ததோடு, வளர்ப்பு மகளையும் (கோதை) ஆழ்வாராக்கிக் (ஆண்டாள்)காட்டியவர். முன்னோர் மொழியைப் போற்றுவதுடன், அவற்றை தம் படைப்பில் பல்வேறு இடங்களில் கையாண்டு வைணவத் தமிழுக்குச் செழுமை சேர்த்தவர். மற்றைய ஆழ்வார்கள் பரமபக்தியினால் எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்துள்ளபோதிலும், அவர்கள் ‘பகவானுக்குக் குறையொன்றும் இல்லாதிருப்பதே நமக்கு மங்களம்’ என்று எண்ணிச் செய்துள்ளார்கள். ஆனால் விஷ்ணுசித்தரோ, சர்வ இரட்சகனையும் […]

Read more

64 யோகினிகள் மர்மங்கள்

64 யோகினிகள் மர்மங்கள், வேணு சீனிவாசன், சங்கர் பதிப்பகம், பக். 288, விலை 275ரூ. சக்தி தெய்வ வழிபாடு வழங்காலத்திலே உள்ளது. குடும்பங்களில், ‘இல்லுறை தெய்வம்’ என, கண்ணகியை வழிபட்டுள்ளனர். கொற்றவை, மாரியம்மன் தெய்வ வழிபாடு, கோவிலில் உள்ளது என, 64 யட்சிணி, யோகினி, டாகினியர், வரலாறு, வசியம், வழிபாடு பற்றி ஆய்ந்து எழுதியுள்ளார். யோகினிகள், தெய்வங்களா, பரிவார தேவதைகளா, ஏவல், பில்லி, சூனியம், வசியம் செய்ய உதவும் கூலிப்படைகளா என ஆய்ந்துள்ளார். ஆடு, மாடு, மனிதன் என்று காளிக்கு பலி தரும் வழக்கம், […]

Read more

வியாசர் அறம்

வியாசர் அறம், நல்லி குப்புசாமி செட்டியார், பிரெய்ன்பேங்க், விலை 200ரூ. வாழ்க்கைக்குத் தேவையான நல்ல கருத்துகளை, அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போலக் கொண்டு இருக்கும் மகாபாரதத்தில் இருந்து அறம் சார்ந்த சிறந்த செய்திகளைத் தாங்கியுள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ருசிகரமாகப் படிக்கும் வகையில் தந்து இருக்கிறார், ஆசிரியர். மகாபாரதத்தில் வியாசர் கூறி இருக்கும் கதைகளில், 60 கதைகள் இந்த நூலில் இடம் பெற்று இருக்கின்றன. ஒவ்வொரு கதைக்கும் முகப்பு வாசகம் கொடுத்து இருப்பது, அந்தக் கதையைப் படிக்கத் தூண்டும் அம்சமாக அமைந்து […]

Read more

அழகிய நதி

அழகிய நதி தரம்பால், கிழக்குப் பதிப்பகம், தமிழில்: பி.ஆர்.மகாதேவன்,  விலை: ரூ.400 ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய இந்திய அறிவுத்தளம் பற்றிப் பேசும்போது பெருமிதமும், சில நூற்றாண்டுகளுக்கு முந்தையதைப் பேசும்போது கீழான பார்வையும் வெளிப்படுவது பொது மனோபாவமாகவே மாறியிருக்கிறது. நிறைய கட்டுக்கதைகளும் பொய்ப்புரட்டுகளும் இந்த வரலாற்றில் கலந்திருக்கின்றன. அங்கே புதையுண்டிருக்கும் உண்மையை வெளியே எடுக்கும் எண்ணத்தோடு களத்தில் இறங்கினார், இந்தியாவின் மிக முக்கியமான காந்தியச் சிந்தனையாளர்களுள் ஒருவரான தரம்பால். அவருடைய இரண்டு முக்கியமான புத்தகங்கள் இப்போது மறுபதிப்பு கண்டிருக்கின்றன. 18-ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி என்னவாக […]

Read more
1 2 3 15