காற்றின் அலை வரிசை

காற்றின் அலை வரிசை, ஹாம் ரேடியோ ஓர் அறிமுகம், தங்க.ஜெய்சக்திவேல், டெஸ்லா பதிப்பகம், விலை 100ரூ.

வானொலிகளின் பரிணாம வளர்ச்சியை அறிந்துகொள்வதன் வாயிலாக ஒரு காலகட்டத்தையே நாம் அறிந்துகொள்ள முடியும். வானொலிகள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் ஜெய்.சக்திவேல் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், ஹாம் ரேடியோ குறித்து எளிமையான அறிமுகம் தருகிறது. ஹாம் ரேடியோ என்பது என்ன, அதில் என்னென்ன வகைகள் இருக்கின்றன,

ஹாம் ரேடியோவுக்கான உரிமைகளை எப்படிப் பெறுவது உள்ளிட்ட பல விஷயங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அரிதாக அறியப்பட்ட ஹாம் ரேடியோவானது தகவல்தொடர்பு, பொழுதுபோக்கோடு நின்றுவிடுவதில்லை; இயற்கைச் சீற்றங்களின்போது இதன் பயன்பாடு அளப்பரியது.

வானொலி மீது ஆர்வம் கொண்டவர்களுக்கும், ஊடகத் துறை மாணவர்களுக்கும் இப்புத்தகம் பயனுள்ளதாக இருக்கும்.

– ச.ச.சிவசங்கர்

நன்றி: தமிழ் இந்து,7/10/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.