கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை (பாகம்-2)

கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை (பாகம்-2), மு.ஞா.செ.இன்பா, பந்தள பதிப்பகம், பக்.504, விலை ரூ.399.

நடிகர் திலகம் சிவாஜியின் திரையுலக அனுபவங்கள் மற்றும் அரசியல் அனுபவங்களைப் பேசும் விரிவான நூல் இது. வார இதழ் ஒன்றில் தொடராக வெளிவந்த 60 கட்டுரைகள் நூலாகத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றுடன் அரை நூற்றாண்டு தமிழக அரசியல்-கலையுலக வரலாறும் பின்னிப் பிணைந்திருக்கிறது. 1967 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அரசியல் கட்சிகள் வகுத்த வியூகம், சிவாஜியின் தேர்தல் பிரச்சாரங்கள், காமராஜர், ம.பொ.சி., சின்ன அண்ணாமலை போன்ற தலைவர்களுடன் சிவாஜிக்கு இருந்த நட்பு, சிவாஜியைப் பற்றிய ஜெயகாந்தனின் மேற்கோள், இந்திய-பாகிஸ்தான் போர் நிதிக்காக சிவாஜி மன்றம் ஆற்றிய களப்பணிகள், சுவாமிமலை முருகன் கோயிலுக்கு சிவாஜி அளித்த கொடை, பாண்டிபஜாரில் சிவாஜி அமைத்துக் கொடுத்த கடைகள் போன்றவை அரிய தகவல்கள்.

தில்லானா மோகனாம்பாள் கதையை எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி நிறுவனமே திரைப்படம் எடுக்க நினைத்ததும், அதில் நாயகனாக காருக்குறிச்சி அருணாசலம், நாயகியாக வைஜெயந்திமாலா என வாசன் முடிவு செய்து வைத்திருந்ததும் புதிய தகவல். ‘சாந்தியின் பெரியப்பாவான எம்.ஜி.ஆர். 39; ‘எம்.ஜி.ஆரை காங்கிரஸ்க்கு அழைத்த சிவாஜி 39; போன்ற கட்டுரைத் தலைப்புகள் மனதை ஈர்க்கின்றன.

நூலாசிரியரின் கடின உழைப்பால் விளைந்திருக்கும் இந்த பிரம்மாண்ட நூல், அனைவரையும் கவர்ந்திழுக்கும்.

நன்றி: தினமணி: 15/5/2017.

Leave a Reply

Your email address will not be published.