கனவோடு நில்லாமல்

கனவோடு நில்லாமல், முனைவர் ஜெ. சதக்கத்துல்லாஹ், வானதி பதிப்பகம், விலை 150ரூ.

இந்திய ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான மண்டல இயக்குநர் முனைவர் ஜெ. சதக்கத்துல்லாஹ். மிக சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவராலும் உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்பதற்கு இவர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

தனது வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும், அதைச் சாதனைகளாக மாற்றிய நிகழ்வுகளையும் அவர் இந்த நூலில் எளிய இனிய நடையில் சுவையாக விவரித்துள்ளார். இளம் வயதில் தந்தையை இழந்த அவர், தன் கல்வியைத் தொடர பட்ட பெரும்பாடுகளையும், அவரது தாயார் வயல்வெளியில் பாடுபட்ட அவரை உயர்ந்த மனிதனாக்கிய நிகழ்ச்சிகளையும், அவருக்கு உதவிய உள்ளங்களையும் உள்ளது உள்ளபடியே உரைக்கிறார்.

இன்னல்களை இன்முகத்தோடு ஏற்று உழைப்பால் அவர் வென்றெடுத்த இந்த உன்னத வாழ்க்கை, முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் கலங்கரை விளக்கமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தப் புத்தகத்துடன் முனைவர் ஜெ. சதக்கத்துல்லாஹ்வின் தொலைக்காட்சி பேட்டிகள் மற்றும் வங்கி வேலை வாய்ப்பு குறித்த விளக்க உரை அடங்கிய குறுந்தகடு இலவசமாக இணைக்கப்பட்டுள்ளது. இது வங்கி வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு பயன் தரும்.

நன்றி: தினத்தந்தி, 7/9/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *