கச்சியப்ப சிவாசாரியார் இயற்றிய கந்தபுராணம் (மூலமும் உரையும்-பகுதி-1)

கச்சியப்ப சிவாசாரியார் இயற்றிய கந்தபுராணம் (மூலமும் உரையும்-பகுதி-1) – உரையாசிரியர்: சிவ.சண்முகசுந்தரம்; பாரி நிலையம், பக்.1648; விலை ரூ.1500;

சிவபெருமானின் மூன்று திருக்கண்களுள் கந்தபுராணம் நெற்றிக் கண்ணாகப் போற்றப்படுகிறது. "வடமொழியில் உள்ள பதிணென் புராணங்களுள் சிவபெருமானுக்குரியவை பத்துப் புராணங்கள். அவற்றுள் ஒன்று கந்தபுராணம். அதிலுள்ள ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதற்காண்டம் சிவரகசிய காண்டம். அதனுள் உள்ள நமது வரலாற்றைக் கந்தபுராணம் எனப் பெயரிட்டுத் தமிழில் பெருங்காப்பியமாக இயற்றுவாயாக' என முருகப்பெருமான், கச்சியப்ப சிவாசாரியார் கனவில் தோன்றி கட்டளையிட்டும், முதலடியும் (திகடச் சக்கரம்) எடுத்துக் கொடுக்க, 10345 செய்யுள்களால் கச்சியப்பரால் அருளிச் செய்யப்பட்டதுதான் கந்தபுராணம்.
இந்நூலில் சிவபெருமானின் மாண்பே பெருமளவில் கூறப்பட்டிருந்தாலும் குறிப்பாக, முருகப் பெருமானின் வரலாறுகள் விரித்துரைக்கப்படுவதால் இது கந்தபுராணமாயிற்று. இது மக்கள் பிறவிக் கடலைக் கடக்க உதவும் தோணியாகத் திகழ்கிறது.
எந்தப் புராணமும் கந்தப் புராணத்தில் உள' என்கிற பழமொழிக்கேற்ப, இப்புராணத்தில் சொல்லப்படாத செய்திகளே இல்லை எனலாம். சைவ சித்தாந்தக் கருத்துகளும் பெருமளவில் இதில் உள்ளன.

கந்தபுராணத்தில் உள்ள ஆறு காண்டங்களுள் முதல் இரண்டு காண்டங்கள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. எளிய தெளிவுரையோடு, அருஞ்சொற்பொருளும் தரப்பட்டுள்ளது.

அற்புதமான தெளிவுரையுடன் கூடிய இந்நூலை பல பாகங்களாகப் பிரித்து வெளியிட்டிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். எடுத்துப் படிக்க முடியாதபடி பெரிய அளவில் நூல் அமைந்திருப்பது மிகப்பெரிய குறை.”,

நன்றி: தினமணி, 8/7/19

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *