குக்கூ குக்கூ ஹைக்கூ
குக்கூ குக்கூ ஹைக்கூ, டி.வி.எஸ்.மணியன், மணிமேகலைப் பிரசுரம், பக். 88, விலை50ரூ.
ஜப்பானிய ஹைக்கூ இலக்கணம், பின்னாளில் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், அவர்களுடைய மொழிகளில் ஹைக்கூ கவிதைகளாக எழுதும்போது, பின்பற்ற முடியாமல் போனது போலவே, நுாலாசிரியர், ஹைக்கூ வடிவத்தை தன் கருத்து வெளிப்பாட்டிற்கு ஏற்ப, சொல்லாட்சியுடன் திறம்பட எழுதியுள்ளார்.
‘பாகன் வீட்டு அடுப்பெரிய/ தெருவில் யாசகம்/ யானை’ (பக்., 30’ என, யானையை வைத்து பிழைப்பு நடத்துவதையும், ‘மகன் கானகம்/ கணவன் வானகம்/ கைகேயி வரம்’ (பக்., 33) என ராமாயணச் சுருக்கத்தையும், ‘நுாறை விட/ ஐந்து உயர்ந்தது/ மகாபாரதம்’ (பக்., 49) ‘தொலைத்தது எதையோ/ அழுது ஆர்ப்பரிக்கின்றதே/ கடல்’ (பக்., 70).
இப்படி படிப்பதற்கும், சிந்திப்பதற்கும் ஏற்ற ஏராளமான கவிதைகள். பேராசிரியர் ரா.மோகனின் அணிந்துரை, நுாலுக்கு மெருகூட்டியுள்ளது சிறப்பு.
நன்றி: தினமலர், 26/11/2017.