குதிப்பி

குதிப்பி, ம.காமுத்துரை, வெளியீடு, டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.400/-

அதிக அளவில் இலக்கியக்கவனம் பெறாமல் இருந்த நாவிதர்கள், சோழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், வண்ணார்கள், நாகசுரக் கலைஞர்கள் குறித்து சமீப காலங்களில் காத்திரமான படைப்புகள் தமிழில் வெளிவருகின்றன. அவை வாசக கவனத்தையும் குவித்திருக்கின்றன. அவற்றின் தொடர்ச்சியாகத்தான், சமையல் கலைஞர்களின் வாழ்க்கையைப் பேசும் ‘குதிப்பி’ நாவலையும் பார்க்க வேண்டும்.

சாரதி என்ற சமையல்காரரின் குவாட்டர் பாட்டில் மூடித் திறப்பில் நாவல் தொடங்குகிறது. சாரதியின் மகன் சரவணன் குவாட்டர் பாட்டிலைத் தூக்கி வெளியே எறிவதில் நாவல் முடிவடைகிறது. சமையல் என்ற சொல்லைவிட, குவாட்டர் என்ற சொல்தான் நாவலில் அதிகமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சமையல் கூடத்தைவிட, மதுபானக் கூடத்தைத்தான் நாவல் மிகுதியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

குதிப்பியைவிட, மதுக் குப்பிகளையே இவர்கள் அதிகம் பிடித்திருக்கிறார்கள். குடிப் பழக்கத்தால் அழிந்துகொண்டிருக்கும் சமையல் தொழிலாளர்கள் சிலரின் கதையாக இந்நாவலை முன்னிறுத்தலாம். குடியைப் பற்றி இவ்வளவு விரிவாகத் தமிழில் எழுதப்பட்ட நாவல் வேறில்லை

. நன்றி.தமிழ் இந்து. 30.05.2020.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030143_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.