மனம் ஒரு மகாத்மா

மனம் ஒரு மகாத்மா, முனைவர் பா. மஞ்சுளா, விஜயா பதிப்பகம், விலை 70ரூ.

வள்ளலாரின் வழியை பின்பற்றி வரும் நூலாசிரியரான தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் பா. மஞ்சுளா, வள்ளலாரின் 43 அமுதுமொழிகளை தேர்வு செய்து, அதனை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நூலாக தொகுத்துள்ளார்.

அதில் ‘துணையினை தூயமனதோடு நேசியுங்கள்’, ‘மனிதரை நேசித்தால் இறைவன் உங்களை நேசிப்பான்’, ‘எல்லோரும் ஜெயிக்க நினைப்பவன், ஒருபோதும் தோற்பதில்லை’ போன்ற வரிகளுக்கு விளக்கம் தந்திருப்பது மனதை தொடுகிறது.

தற்போதைய தண்ணீர் பஞ்சத்தை நினைவூட்டும் வகையில் ‘குடிக்கின்ற நீர்ள்ளக் குளத்தைத் தூர்த்தேனா’ என்ற வள்ளலாரின் அமுத மொழியை விளக்கும் வகையில் ‘தாயை பழித்தாலும் தண்ணீரை பதிக்காதே’ என்ற வரியையும் அழகாக குறிப்பிட்டுள்ளார்.

நூலை படிப்பவர்களும் மகாத்மாவாக மாறுவதுடன், அனைவருடைய மனமும் வள்ளலார் வழியை நாடும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினத்தந்தி, 3/5/2017.

Leave a Reply

Your email address will not be published.