நினைவு நாட்களும் நெஞ்சில் அலைகளும்

நினைவு நாட்களும் நெஞ்சில் அலைகளும், கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 176, விலை 135ரூ.

லட்சியத்துக்காக வாழ்வதென்பது அண்மைக்காலமாக அனைத்து அரசியல் கட்சிகளிலும் அருகி வருகிறது. இந்நிலையில், பொதுவுடைமை இயக்கத்துக்காக தங்களை அர்ப்பணம் செய்த தியாகிகளின் வரலாறு, இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கிறது.

ப.ஜீவானந்தம், கே.பாலதண்டாயுதம், கே.டி.கே.தங்கமணி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சி.எஸ்.சுப்பிரமணியம், சாம்பவான் ஓடை சிவராமன், சின்னியம்பாளையம் தியாகிகள் ஆகியோருக்கான அஞ்சலிக் கட்டுரைகள், கொண்ட கொள்கைக்காக வாழ்ந்த அற்புதமான மனிதர்களை அறிமுகப்படுத்துகின்றன. இவை ஜனசக்தி, தாமரை உள்ளிட்ட பத்திரிகைகளில் வெளியானவை.

பொதுவுடைமை சித்தாந்தம் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, வேலு நாச்சியார், சுவாமி விவேகானந்தர், திருப்பூர் குமரன், கக்கன் போன்றவர்களைப் பற்றிய எழுத்தோவியங்களும், எழுத்தாளர்கள் தொ.மு.சி.ரகுநாதன், மாஜினி, சின்னக் குத்தூசி, சு.சமுத்திரம், வாலி ஆகியோர் குறித்த கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

பகத்சிங்கையும் ப.ஜீவானந்தத்தையும் ஒப்பிட்டு எழுதிய கட்டுரை மிகவும் சிறப்பு. நூலாசிரியரின் தெளிவான எழுத்தோட்டமும், கொள்கைப்பிடிப்பும் ஒவ்வொரு பக்கத்திலும் மிளிர்கின்றன. ஓர் அரசியல் பிரசார இலக்கியம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக இந்நூல் விளங்குகிறது.

நன்றி: தினமணி, 12/9/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *