நோய் தீர்க்கும் சிவாலயங்கள்

நோய் தீர்க்கும் சிவாலயங்கள், டாக்டர் ச. தமிழரசன், தினத்தந்தி பதிப்பகம், பக். 160, விலை 150ரூ.

சிவபெருமான் வீற்றிருக்கும் திருத்தலங்களில் நோய் தீர்க்கும் தலங்களாகக் கருதப்படும் ஆலயங்களுக்கு நேரில் சென்று தெய்வீகச் செய்திகளைச் சேகரித்து அதை விளக்கமாக ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.மேலும் அந்த நோய்கள் குறித்த மருத்துவக் கருத்துகளையும் கூறுகிறார்.

இந்த நூலில் பிணிகளைக் குணமாக்கும் வைத்தீஸ்வரன், தோல் நோய் தீர்த்த திருத்துருத்தி, சனி பகவானின் வாத நோய் போக்கிய திருவாதவூர், வலிப்பு நோய் விரட்டிய திருவாசி, சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர், புற்று நோயைக் கட்டுப்படுத்தும் சிவாலயம், குளிர் காய்ச்சல் போக்கும் ஜுரஹரேஸ்வரர் என 33 சிவாலயங்கள் குறித்து விரிவாக விளக்கியுள்ளார்.

மேலும் கோவில் அமைவிடம், நடை திறந்திருக்கும் நேரம், தொலைபேசி எண் ஆகியவற்றை வழங்கி இருப்பது பக்தர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும்.

நன்றி: தினத்தந்தி, 11/1/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *