பார் போற்றும் பகலவன் பாபா சாகேப் பயணப் பாதை

பார் போற்றும் பகலவன் பாபா சாகேப் பயணப் பாதை, எம்.ஏ. பாலசுப்பிரமணியன், சித்தார்த்த பதிப்பகம், பக். 655, விலை 450ரூ.

14.4.1891 முதல் 6.12.1956 வரையிலான சட்டமேதை அம்பேத்கரின் வாழ்க்கைப் பயணத்தை தேதி வாரியாக தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர்.

நூலின் ஒவ்வொரு பக்கங்களும் அம்பேத்கர் எத்தகைய இடர்பாடுகளையெல்லாம் கடந்து தாழ்த்தப்பட்டவர்களை மிளிரச் செய்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது.

1905-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் அம்பேத்கர் 5-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஆசிரியர் ஒருவர், “அவரிடம் தாழ்ந்த மஹர் இனத்தில் பிறந்த நீ படிப்பதனால் என்ன பயன்?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அம்பேத்கர்,”நான் கல்வி கற்பதனால் என்ன பயன் என்று கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நாவடக்குங்கள். மீண்டும் ஒரு முறை இந்தக் கேள்வியைக் கேட்டீர்களென்றால் விளைவு மோசமாக இருக்கும்” என்று கூறினார்.

இத்தகைய பதிவைப் படிக்கும்போது அந்தக் காலத்தில் அதுவும் மிக இளம் வயதிலேயே அம்பேத்கருக்கு சுயமரியாதையும், துணிவும் எந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.

14.4.1929-இல் இரத்தினகிரி மாவட்டம் உழவர் மாநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தான் உழைக்க வேண்டிய தேவை பற்றியும், குலம், கோத்திரம் ஆகியவற்றை ஒழிப்பதற்கான மசோதா கொண்டு வருவது குறித்தும் அம்பேத்கர் பேசியது போன்று அவரது வாழ்வின் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சிகள் பல தகுந்த ஆவணங்களுடன் இடம்பெற்றுள்ளன. அரிய பல தகவல்கள் அடங்கிய கருவூலம் இந்நூல்.

நன்றி:தினமணி, 21-11-2016.

Leave a Reply

Your email address will not be published.