பறக்கும் தட்டு உண்மையா?

பறக்கும் தட்டு உண்மையா?, குன்றில்குமார், குறிஞ்சி, விலை 175ரூ.

பலநூறு ஆண்டுகளாக கேள்விக்குறியாகவே இருக்கும் பறக்கும் தட்டு உண்மையா? வேறு கிரகங்களில் மனிதர்கள் – வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? அவர்கள் அவ்வப்போது பறக்கும் தட்டில் பூமிக்கு வந்து செல்வதாகச் சொல்லப்படும் செய்திகள் உண்மையா? பொய்யா? வேற்றுகிரகவாசிகளுடன் பேசமுடியுமா
? என்பது போன்ற எல்லா கேள்விகளுக்கும் விடை சொல்லும் விதமாக ஆதாரத்துடனும் தேவையான படங்களுடனும் எழுதியிருக்கிறார். படித்துவிட்டு இரவில் வெளியே வந்தால் தொலைவில் தெரியும் வெளிச்சம் பறக்கும் தட்டாகத் தோற்றமளிப்பது போன்ற பிரமை ஏற்படக்கூடும்.

நன்றி: குமுதம், 26/7/2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *