பொருநை நதிக் கரையினிலே
பொருநை நதிக் கரையினிலே, கன்யூட்ராஜ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 230ரூ.
தமிழகத்தின் பெரும்பான்மை நதிகளில் ஆற்றுநீரும், ஆற்று மணலும் பெருமளவில் கொள்ளையடிக்கப்படுவதை இந்த நவீனம் சித்தரிக்கிறது. பிரசார நெடி வீசுகிறது என்றாலும், கதை சுவாரஸ்யம் உள்ள சம்பவங்களுக்கும் பஞ்சம் இல்லை.
தாமிரபரணி தண்ணீரை நம் முன்னோர் தீர்த்தமாக எடுத்துச் சென்று, கடவுளுக்கு அபி ஷேகம் செய்தனர்; அப்படியே குடிக்கவும் செய்தனர். அவ்வளவு துாய்மையாக இருந்தது. இன்று, மீன்கள் வாழக்கூட முடியாத அளவிற்கு, தண்ணீர் மாசு அடைந்து விட்டது. காரணம், ஒன்று சாக்கடை, தொழிற்சாலைக் கழிவுகளின் கலப்பு.
இன்னொன்று, முக்கியமாக நம் ஆறுகளில் மணலைக் காணவில்லை. நம் கண்முன்னே ஆற்று மணலை கடத்திச் செல்கின்றனர். இவர்கள் நம் ஆற்றை, நம் எதிர்காலத்தை, நம் வாழ்வாரத்தை அழிக்கின்றனர்.
இமயமலைக் காட்டில், அங்குள்ள மரங்களைக் காப்பாற்ற, பெண்கள் மரங்களை கட்டிப் பிடித்துக் கொண்டு, வெட்ட வருவோரை எதிர்த்து நிற்கின்றனர். இதற்கு, ‘சிப்கோ’ இயக்கம் என்று பெயர். அவ்வாறு ஆற்றையும் காப்பாற்ற வர வேண்டும். நம்ம காலத்திலே, ஆற்றில் தண்ணீருமில்லை, மணலும் இல்லை. ஆறு பொட்டல் காடாகி விட்டது அல்லது சாக்கடையாகி விட்டது.
ஆற்றைச் சுத்தமாக்கும் மணல் இல்லாவிடில் அது வெட்டையாகி விடுகிறது. தன், உயிர்த்தன்மையை இழந்து விடுகிறது. எனவே, ஆற்றைக் காக்க வேண்டும் என முழங்கும் இந்த நாவல், காலத்தின் கட்டாயம்!
–எஸ்.குரு.
நன்றி: தினமலர், 12/8/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026664.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818