சாலாம்புரி

சாலாம்புரி, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 400ரூ.

கைத்தறி நெசவு தொடர்பான சொல் சாலாம்புரி என்பதைத் தலைப்பாகத் தாங்கி இருக்கும் இந்த நாவல். தமிழகத்தில் 1950 களில் நடைபெற்ற அரசியல், அப்போதைய நெசவாளர்களின் வாழ்க்கை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.

திராவிடர் கழகத்தில் இருந்து விலகி தொடங்கப்பட்ட தி.மு.க.வின் வளர்ச்சிக்கு உழைக்கும் கதாநாயகன், அவரைச் சுற்றி நடைபெறும் நெசவாளர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள், சாதி பிரச்சனை ஆகியவை கண் முன் படம் பிடித்துக் காட்டப்பட்டு இருக்கின்றன.

சரளமான நடை, கதாபாத்திரங்களின் அப்பட்டமான பேச்சு, விறுவிறுப்பான சம்பவங்கள், கடவுள் கொள்கையை ஏற்பதா மறுப்பதா என்ற கதாநாயகனின் ஊசலாட்டம் போன்ற அனைத்தையும் நூலிழையாகக் கொண்டு அழகான பட்டுப்புடவை போல இந்த நாவலைப் படைத்து இருக்கிறார் ஆசிரியர்.

நன்றி: தினதந்தி, 17/1/21

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030933_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.