சிறிய தூண்டில் பெரிய மீன்

சிறிய தூண்டில் பெரிய மீன், மூ.இராசாராம், பழனியப்பா பிரதர்ஸ்,  பக்.174, விலை ரூ.155.

சிறு சிறு முயற்சிகள் மூலம் பெரிய வெற்றிகளை எப்படிப் பெறுவது என்பதற்கான வழிமுறைகளைக் கூறும் நூல். நம்மிடம் அளவாக இருக்கும் சக்தியைப் பயன்படுத்தி அதிகமான பலன் பெறலாம் என்பதை சில முக்கிய மேற்கோள்கள் மூலம் சுவைபடக் கூறியுள்ளார்.

குறிப்பாக ரூ.1-க்கு விற்கப்படுகிறது என்ற பிரபல செய்தித்தாளின் விளம்பர உத்தி, இந்த  டிசைன்&#39 சேலைகள் இன்னும் மூன்று மட்டுமே எஞ்சியுள்ளன' என்ற ஜவுளிக் கடைக்காரரின் விளம்பரத் தந்திரம் போன்றவை வாடிக்கையாளர்கள் என்ற பெரிய மீன்களைப் பிடிப்பதற்கான சிறிய தூண்டில்கள்தாம் என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

‘நாம் எப்போதுமே தூண்டில் போடுபவராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. நல்ல தூண்டில்களாகத் தெரிந்தால் மீனாகவும் போய் மாட்டிக் கொள்ளலாம். நல்ல புத்தகங்கள், எழுத்து, சொற்பொழிவுகள், அனுபவங்கள் எல்லாமே தூண்டில்கள்தாம். நாம் அவற்றைத் தேடிப் போகலாம் 39’ என்ற வரிகள் பணத்தை மட்டும் தேடி அலையும் மனிதர்களுக்கான மருந்தாகும்.

இந்த நூலில்‘சிறிய தூண்டில் பெரிய மீன் 39’ உள்பட ‘மகிழ்ச்சியை விதைப்பவர் 39’, ‘வாழ்வின் வசந்தம்39’ என மொத்தம் 3 அத்தியாயங்கள் உள்ளன. மற்ற இரு அத்தியாயங்களிலும் கவலைகளைத் தீர்க்கும் வழிகள், பாவ புண்ணியக் கணக்குகள், கூலி, வேலி, தாலி- மனிதன் சிக்கிக் கொள்ளும் பிரச்னைகள், நம்மை முதலில் மதிப்போம் போன்ற தலைப்புகளில் வாழ்க்கையைச் செம்மையாக வாழ்வதற்கான சிறந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

ன்றி: தினமணி, 17/4/2017.

Leave a Reply

Your email address will not be published.