சிறுவர் சினிமா

சிறுவர் சினிமா, தொகுப்பு நீலன், பேசா மொழி பதிப்பகம், விலை 170ரூ.

பாட்டி கதைகளை தொலைத்துவிட்ட இன்றைக்கு, தும்பிகளைத் துரத்தும் குழந்தைகளைத் தொடுவானம் ஏந்திக் கொள்வது நல்ல சினிமாக்களாலும், புத்தகங்களாலும் சாத்தியம்.

பள்ளிப் புத்தகங்களில் கருக்கொள்ளும் மயிலிறகுகள் குட்டிகளை ஈனும் பால்யத்தில் நமக்கு அறிமுகமாகிற அம்புலிமாமா கதைகளில், நீண்டு கிடக்கும் அரண்மனைத் தெருக்களில், இரும்புக்கை மாயாவி பறந்து வரும் கனவுக்காடுகளில், 007 துப்பறியும் தங்கத் தீவுகளில், கெளபாய் சண்டை நடக்கும் மெக்ஸிகன் மலைப் பாதைகளில் மனம் மாய வண்டாகப் பறக்கிற அனுபவத்தை இன்றைய சிறுவர்கள் இழந்துவிட்டார்கள்.

ஹாரிபாட்டரைப் போல இன்றைய குழந்தைகளுக்கு பரவலான கதை உலகமும், சினிமாவும் வேண்டும். அதற்கு நீலன் தொகுத்திருக்கும் இந்த கட்டுரைகள் வழி சொல்லுகின்றன. தெறிக்கும் மழையில் புறங்கை நனைக்கிற தருணங்களை தீம்பார்க்குகளின் செயற்கை அருவிகள் தந்துவிட முடியாது. ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களுக்கான சினிமாவையும், புத்தகங்களையும் அறிமுகப்படுத்துவது நமது முதல் கடமை.

நறுக்குத் தெறித்த கட்டுரைகள். மிகவும் பயனுள்ள புத்தகம். யாராவது குழந்தைகளின் பிரியத்தை தவிர்க்க முடியுமா! அதுபோலவே இந்தப் புத்தகம்.

நன்றி: குங்குமம், 14/4/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *