ஸ்ரீ அரவிந்தரின் எரிக்கன்(ERIC)

ஸ்ரீ அரவிந்தரின் எரிக்கன்(ERIC), அரவிந்தர்; தமிழாக்கம்: சிவ சூரியநாராயணன்; எல்கேஎம் பப்ளிகேஷன், பக்.272, விலை ரூ. 250.

விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளராக இருந்து ஆன்மிகவாதியாக மலர்ந்தவருமான மகரிஷி அரவிந்தகோஷ், மிகச் சிறந்த இலக்கியவாதி என்பது
பலரும் அறியாத தகவல்.

அரவிந்தர் எழுதிய எரிக் என்ற கவிதை நாடகம், ஸ்காண்டிநேவிய நாட்டுக் கதையின் செம்மை வடிவம். அவரது ஆங்கில நடை, ஆங்கிலேயர்களே வியந்த தனித்தன்மை கொண்டதாகப் போற்றப்படுகிறது. இதன் மூலம் எதுவென்று அவர் குறிப்பிடவில்லை. எனினும், நார்வே தேச மன்னன் எரிக் பற்றிய சித்திரம் இதுவென்பது நாடகத்திலிருந்து தெரிய வருகிறது. இதனை, அழகுத் தமிழில் மூலமா, மொழிபெயர்ப்பா என்று புலப்படாதவாறு மொழிபெயர்ப்பாளர் சிவ சூரியநாராயணன் தமிழாக்கி இருக்கிறார்.

நார்வே மன்னன் எரிக் தமிழில் எரிக்கன் ஆகிறான். அவனது எதிரியான ஸ்வேன் தமிழில் சுவேணன் ஆகிறான். ஸ்வேனின் தங்கை ஆஸ்லாக் அசுலாகியாகவும், மனைவி ஹெர்த்தா எர்த்தியாகவும் மாற்றம் பெறுகின்றனர். கதாபாத்திரங்களும் அதிகமில்லை; காட்சிகளும் அதிகமில்லை. உள்ளரங்க நாடகத்துக்கான எளிய வடிவம். உரையாடல்களிலேயே முழுக் கதையும் பெரும்பாலும் சொல்லப்படுகிறது.

இந்தச் சிறிய நாடகத்தில் மானுடப் பேருணர்வுகளை உலவவிட்டு, போரற்ற உலகம் குறித்த உன்னதக் கற்பனை களையும் உலகை வெல்லும் அன்பின் வழியையும் காட்டிச் செல்கிறார் அரவிந்தர்.

நூலின் இடது பக்கத்தில் ஆங்கில மூலத்தையும் வலது பக்கத்தில் தமிழ் மொழியாக்கத்தையும் கொடுத்திருப்பது நல்ல முயற்சி; அரவிந்தரின் எழுத்துகளையும், அதன் தமிழாக்கத்தையும் ஒரு சேர ரசிக்க இனிய வாய்ப்பு.

நன்றி: தினமணி, 25/3/19

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.