சுக வாழ்வு அருளும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்

சுக வாழ்வு அருளும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர், தெள்ளாறு ஈ.மணி, சங்கர் பதிப்பகம், விலைரூ.165.

சிவனின் ஒரு வடிவமான, ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி விளக்கும் நுால். முறையாக வழிபட்டால் பொன், பொருளை வாரிக் கொடுப்பார் என விளக்குகிறது.

பைரவரை வழிபடும் முறை, அவர் ஏந்தியிருக்கும் ஆயுத தத்துவம், வாகனங்கள், கடன் பிரச்னை தீர்க்கும் சொர்ணாகர்ஷண பைரவர் போன்ற தலைப்புகளில் தகவல்கள் உள்ளன.
‘உடலே ஆலயம்’ என, திருமந்திரப் பாடலைக் கொண்டு அலசுகிறது. கோவில் கருப்பக்கிரகம், தீபம், சிவலிங்கம் போன்றவற்றுக்கு தத்துவ ரீதியாக விளக்கம் தருகிறது. பைரவர் யந்திரம், மந்திரம் இரண்டும் தரப்பட்டுள்ளன.

பைரவரை வழிபடும் நாள், நேரம், முறை, நிவேதனம், மலர், தியான ஸ்லோகம் என விரிவான தகவல்களை கொண்டுள்ள நுால்.

– பேராசிரியர் இரா.நாராயணன்

நன்றி: தினமலர், 24/4/22.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%9a%e0%af%81%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%b8/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.