பொன்னகரம்

பொன்னகரம், அரவிந்தன், காலச்சுவடு பதிப்பகம், விலை 230ரூ. மைய நீரோட்டம் எனச் சொல்லப்படும் உலகில் இருப்பவர்கள் நுழையத் தயங்குகிற சாம்பல் உலகத்தில் வெளிச்சத்தைத் தேடுகிற நாவல் இது. கதைக்களம், கதை மாந்தர்கள், அதில் வெளிப்படுத்தக்கூடிய வாழ்வு ஆகியவை நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. ‘பொன்னகரம்’ வெளியில் இருப்பவர்களுக்கு ஒரு சிறிய காலனி. ஆனால் அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு ஊர். அந்த ஊரின் பொதுத்தன்மை சாம்பல் நிறம். அந்தச் சாம்பல் நிற உலகத்தில் யார் யாரெல்லாம் குற்றாவாளிகள், குற்றம் என்றால் என்ன என்பது குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது. […]

Read more

பொன்னகரம்

பொன்னகரம், அரவிந்தன், காலச்சுவடு பதிப்பகம், பக். 264, விலை 230ரூ. மண் வாசனை என்று வரும்போது சென்னையைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இந்த நகரம், பல்வேறு ஊர்கள், மாநிலங்களைச் சேர்ந்த மக்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. சென்னைக்குள் பல உலகங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை சற்றே அணுகிப்பார்க்கும் முயற்சியில் அந்த உலகின் யதார்த்தம், அதன் நுட்பங்களோடு இந்த நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சினிமாவில் பார்த்திருந்த சென்னைக்கும் நேரில் காணும் காட்சிகளுக்கும் சம்பந்தமே இல்லாத பகவதிபுரம் என்ற இடத்துக்கு திருமணம் செய்து கொண்டு அத்தை மகன் முத்துக்கிருஷ்ணன் சகிதம், […]

Read more

பயணம்

பயணம், அரவிந்தன், காலச்சுவடு பதிப்பகம், பக். 392, விலை 350ரூ. இளைஞனும் ஆசாபாசங்களும் தமிழ் புனைகதையில் இதுவரை இல்லாத பல புதிய பரிமாணங்களை முன்வைக்கும் நாவல். செல்வம், செல்வாக்கு முதலியன இலக்காகக் கொள்ளாமல் யோகாசனம், சமூக சேவை ஆகியவற்றை நாடிப் பெற்றோரிடம்கூடக் கூறாமல் ஓர் ஆசிரமத்தில் சேரும் இளைஞனின் கதை. ஏற்கனவே பல யோகாசனங்களையும் மூச்சுப் பயிற்சியையும் நன்கு அறிந்தவனாக இருக்கிறான். மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஆசிரமத்தின் கிளைகள் எனக் கூறப்படுபவைக்கு அனுப்பப்படுகிறான். ஒரு சமூகக் கிளர்ச்சியில் ஒரு கட்டத்தில் காவல் துறையும் துணை வராது […]

Read more

பயணம்

பயணம், அரவிந்தன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில், விலை 350ரூ. இனி இந்த வீடு என்னுடையதல்ல என்னும் எண்ணத்துடன் வீட்டைவிட்டு வெளியேறும் இளைஞனான ராமநாதனின் துறவுப்பயணமே 390 பக்கங்களில் விரியும் இந்நாவல். ஒரு இந்து சுவாமியின் ஆசிரமத்தில் சேர்ந்து, ஆசிரமம் செய்கிற சமூகப்பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பல கிராமங்களில் அவன் பணியாற்றி தன்னையும் உயர்த்திக்கொள்கிறான். யோகாசனங்களில் சிறந்தவனாக இருக்கும் அவன் தன் பயணத்தில் ஆசான்கள் மூலம் மேலும் திறமைவாய்ந்த யோகாசனப் பயிற்சியாளன் ஆகிறான். ஆனால் அவனால் பிரம்மச்சர்யம் காக்க முடிவதில்லை. ஒரு பெண் மீது […]

Read more