பெண்களுக்காக

பெண்களுக்காக, அர்ச்சனா நடராஜன், கண்ணப்பன் பதிப்பகம், பக். 336, விலை 200ரூ. டீன் – ஏஜ் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை, அவர்களுக்கு உதவும் வகையில் மருத்துவம், மாதவிடாய், உள்ளிட்டப பெண்கள் பிரச்னைகள், கர்ப்பகால டிப்ஸ்கள், குழந்தைப் பராமரிப்பு, குடும்ப பராமரிப்பு, தொடர்ந்து வீட்டுத்தோட்டம் அமைப்பது வரையான பல அரிய தகவல்களைத் தாங்கி வரும் நூல். நன்றி: குமுதம், 3/5/2017.

Read more

பெண்களுக்காக

பெண்களுக்காக, அர்ச்சனா நடராஜன், கண்ணப்பன் பதிப்பகம், விலை 200ரூ. “டீன் ஏஜ்” பெண்களுக்கு உடலில் மாற்றங்கள் ஏற்படும்போது அவர்களை தாய்மார்கள் எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும், பெண்களுக்கான உடற்பயிற்சிகள் எவை, கர்ப்பிணி பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன… இப்படி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இந்த நூலில் எழுதியுள்ளார் அர்ச்சனா நடராஜன். பெண்களுக்கு அவசியமான அனைத்து விஷயங்களையும் ஒன்று திரட்டி, அவற்றை ஒரே புத்தகத்தில் அடக்கி இருப்பது பாராட்டுக்கு உரியது. பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more