சுளுந்தீ

சுளுந்தீ, ரா.முத்துநாகு, ஆழி பதிப்பகம், பக். 472, விலை 450ரூ. பண்டுவம் எனும் சித்த மருத்துவம் பார்க்கும், நாவிதர்களின் சமூக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாவல், சுளுந்தீ. இது, ஒரு மரத்தின் பெயர்; இதை, தீக்குச்சியாகவும் எரிபொருளாகவும் பயன்படுத்துவர். ஆசிரியர் இதை வழிகாட்டும் வெளிச்சமாகவும், ஆதிக்க உணர்வுக்கு எதிராக வினை புரியும் எரி நெருப்பாகவும், ஒடுக்கப்பட்டோரின் வாழ்விற்குரிய போர் ஆயுதமாகவும் உணரக் கூடிய வகையில், ஒரு குறியீட்டு நாவலாக அமைத்துள்ளார். இதை, ஒரு தொல்குடி சமூகத்தின் ஆவணமாக கருதலாம். தொன்மை அடையாளத்தின் பண்பாட்டையும், குறிப்பிட்டதொரு […]

Read more

அகமுகம்

அகமுகம், குட்டி ரேவதி, காஞ்சனை நூலாறு, ஆழி பதிப்பகம், விலை 70ரூ. உள்ளத்தின் உரையாடல்கள் கூர் அலகுகளுடன் கம்பியில் வந்தமரும் மதியக் காகங்கள் எவ்வளவு கருமையை ஊற்றிப்போகின்றன இந்நாளைய பொழுதுக்கு -இதுபோன்ற அபூர்வமான காட்சிகளால் நிறைந்துகிடக்கிறது குட்டி ரேவதியின் புதிய கவிதைத் தொகுப்பு ‘அகமுகம்’. கூர்மையான மொழியால் தன் அகத்தின் குரலைத் திரட்டி உரையாட முயலும் உள்ளத்தின் எத்தனிப்பை இதில் காணமுடிகிறது. நிலாவும் புலியும் உலாவரும் கவிதைகளில் இருக்கும் இறுக்கமான உணர்வும், அகத்தனிமையின் கூர் நோக்கும் சில்லிட வைக்கின்றன. அத்திரமரத்தைப் பற்றிய கவிதையொன்று அந்த […]

Read more