தமிழ்வேள் கோ. சாரங்கபாணி

தமிழ்வேள் கோ. சாரங்கபாணி, இலக்கிய வீதி, 52/3, சவுந்தர்யா குடியிருப்பு, அண்ணாநகர் மேற்கு விரிவு, சென்னை 101, விலை 200ரூ. திருவாரூர் மாவட்டம் விஜயபுரத்தைச் சேர்ந்தவர் தமிழ்வேள் கோ. சாரங்கபாணி. சிறந்த பத்திரிகையாளர், எழுத்தாளராக அரை நூற்றாண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றியவர். தமிழ் இலக்கியத்திலிருந்து சமுதாயப் பிரச்சினைகள், அரசியல் கருத்துகள் வரை ஆழ்ந்த அறிவும், அவற்றைத் தெளிவாகப் பேச்சிலும், எழுத்திலும் எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர். இவருடைய வாழ்க்கை வரலாற்றை நூலாசிரியர் ஜே.எம். சாலி நூலாக தொகுத்துள்ளார். தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் மாமனார் வள்ளல் உ. […]

Read more

அரசியல் சதுரங்கம்

அரசியல் சதுரங்கம், சோலை, நக்கீரன், 105 ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 140ரூ. அரசியல் விமர்சகர் சோலை நக்கீரன் வார இதழில் எழுதிய அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. இந்த கட்டுரை தொடர் வெளியான காலகட்டத்தில் பரபரபப்பாக பேசப்பட்ட உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரையிலான விஷயங்களை தனது பாணியில் அலசி ஆராய்ந்து எழுதியுள்ளார். கட்சிபேதமின்றி உண்மைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லும் தைரியம் அவரது எழுத்தில் பளிச்சிடுகிறது. சமுதாய நோக்குடன் உண்மைகளை ஆணித்தரமாக எழுதியிருப்பது சிறப்பு.   —-   […]

Read more

முத்திரை நினைவுகள்

முத்திரை நினைவுகள், ஜே. எம். சாலி, இலக்கிய வீதி, சென்னை 101, பக்கங்கள் 144, விலை 120ரூ எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜே.எம். சாலி தனது எழுத்துலக அனுபவங்களை இந்நூலில் எழுதியுள்ளார். 1955இல் கண்ணன் சிறுவர் இதழுக்கு எழுத ஆரம்பித்த அவர், அதற்குப் பின்பு தமிழகத்தின் பிரபல இதழ்கள் எல்லாவற்றிலும் எழுதிவிட்டார் என்பது நம்மை வியக்க வைக்கிறது. பிரபல பத்திகையாளர்களான சாவி, இதயம் பேசுகிறது, மணியன், கல்கி ராஜேந்திரன் உட்பட பல பத்திகையாளர்களுடன் நூலாசிரியருக்கு இருந்த தொடர்புகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனந்தவிகடன், சிங்கப்பூர் தமிழ் […]

Read more