கலைமாமணி வி.சி. குகநாதன்

கலைமாமணி வி.சி. குகநாதன், ராணி மைந்தன், கலைஞன் பதிப்பகம், விலை 200ரூ. 250 படங்களுக்கு கதை, வசனம் எழுதிய வி.சி. குகநாதன். எம்.ஜி.ஆரால் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் வி.சி. குகநாதன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என்று பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். தமிழிலும் மற்றும் பல மொழிகளிலும் தயாரான 250 படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். 48 படங்களை இயக்கியவர். 51 படங்களைத் தயாரித்தவர். திருப்பங்கள் பல நிறைந்த இவருடைய வாழ்க்கை வரலாற்றை கலைமாமணி வி.சி. குகநாதன் என்ற தலைப்பில் புத்தகமாக […]

Read more

இந்துமதம்

இந்துமதம், கலைஞன் பதிப்பகம், சென்னை, பக். 440, விலை 300ரூ. இந்து மதம் என்பது பல்வேறு சமயக் கொள்கையின் ஒருமைப்பாடு என்பதை தமிழ் உலகிற்கு நிறுவும் அரிய முயற்சி இந்நூல். பல மெய்ஞானிகள், நான்கு வேதங்கள், 108 உபநிடதங்கள், கீதை, பிரம்மசூத்திரம், பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம், ஆலய தரிசனம், தீர்த்த யாத்திரை என்றெல்லாம் பலவகையான எண்ணிறந்த வழிமுறைகளை நம் இந்து சமய நெறியில் எதற்காக எடுத்து வைக்கப்பெற்றுள்ளன என்பதை இந்நூலைக் கற்போர் யாவரும் புரிந்து கொள்வர். பலதரப்பட்ட மக்கள் வாழும் நம் சமூகத்தில் […]

Read more

ஃபேஸ்புக் பக்கங்கள்

ஃபேஸ்புக் பக்கங்கள் (தொகுதி 1), தொகுப்பு சுப்ரஜா, கலைஞன் பதிப்பகம், பக். 416, விலை 312ரூ. முக நூலில் இருப்பவர்களுக்குத்தான் அந்த சுதந்திர தாகம் புரியும். இது வெட்டி வேலை என்று ஸ்டேட்டஸ் போடுவதில்கூட ஒரு கருத்து இருக்கும். அல்லது உண்மை இருக்கும். நிறையப் பேர் துணிச்சல் மிக்கவர்களானதே ஃபேஸ்புக் வருகைக்குப் பிறகுதான். பிரபலமாக இருந்தால்தான் எழுத முடியும் என்ற பெர்லின் கோட்டையை உடைத்தெறிந்தது ஃபேஸ்புக்தான். கவிதை, சிறுகதை, நாவல், அரசியல், நாடகம், பாட்டு, காமெடி, விமர்சனங்கள், சர்ச்சைகள், சண்டைகள், சமையல்கள், சோதிடம், பக்தி […]

Read more

இலக்கிய விதி இனியவன்

இலக்கிய விதி இனியவன், ராணிமைந்தன், கலைஞன் பதிப்பகம், பக். 224, விலை 150ரூ. கவனக கலைக்கு மறுவாழ்வு தந்தவர் படைப்புகளை தாயாக உருவாக்குகிறார், படைப்பாளர், தன் படைப்பு குந்தைகளை பெறுவதும், பெயர் சூட்டி மகிழ்வதும், உலாவவிட்டு புகழ் மாலை பெற வைப்பதிலும், தாயாக நிற்கிறார் படைப்பாளர். ஆனால் தன் படைப்புகள் மட்டுமின்றி, எல்லா படைப்பாளர்களுக்கும் தாயாக, அவரை சமூகத்திற்கு அறிவிக்கும் தந்தையாக இருந்து, தமிழ் வளர்த்தவர், இலக்கிய வீதி இனியவர். விநாயகநல்லூரில் விவசாய குடும்பத்தில் பிறந்த லட்சுமிபதி, வளர்ந்து, எழுத்தாளராய் உயர்ந்து, இலக்கிய அமைப்பாளராய் […]

Read more

இலக்கிய வீதி இனியவன்

இலக்கிய வீதி இனியவன், ராணி மைந்தன், கலைஞன் பதிப்பகம், சென்னை, பக். 224, விலை 150ரூ. இலக்கிய வீதி என்ற அமைப்பின் மூலம் வளரும் எழுத்தாளர்கள் பலரை ஊக்குவித்து, வளர்ந்தெடுத்த இனியவனின் வாழ்க்கை வரரலாற்றை எழுதியுள்ளார் ராணிமைந்தன். இனியவனின் பண்புகள், அவர் தொடங்கிய அமைப்பு, அதன் நோக்கம், அவரது இளம்பிராயம் தொட்டு அவரது எழுத்தாற்றல், இலக்கியத்திற்காக அவர் பட்டபாடு, எழுத்தாளர்களுக்கு அவர் அளித்த ஊக்கம், கம்பன் கழக விழா உள்ளிட்ட அவர் நடத்திய பல்வேறு விழாக்கள், எழுத்துலக மேதைகள் முதல் அவரால் ஊக்கம் பெற்ற […]

Read more

மணப்பேறும் மகப்பேறும்

மணப்பேறும் மகப்பேறும், நாகமணி மருத்துவமனை, சென்னை, விலை 1000ரூ. 1217 பக்கங்கள் கொண்ட பிரமாண்டமான மருத்துவ நூல் இது. நூலாசிரியர் டாக்டர் ஞானசவுந்தரி மகப்பேறு மருத்துவத்தில் நீண்ட அனுபவம் உடையவர் என்பதுடன் 30 ஆயிரம் பெண்களுக்கு பிரசவம் பார்த்து சாதனை படைத்தவர். திருமணத்தின்போதும், கர்பிணியாக இருக்கும்போதும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை தெளிவாகச் சொல்கிறார். சுகப்பிரசவத்துக்கான யோசனைகளைக் கூறுகிறார். நுட்பமான விஷயங்களை படத்துடன் விளக்குகிறார். இது மருத்துவத்துறையில் முக்கியமான புத்தகம். புத்தகத்தின் வடிவமைப்பு, மேல்நாட்டுப் புத்தகங்களுக்கு சவால் விடும் விதத்தில் சர்வதேசத் தரத்துடன் அமைந்துள்ளது. […]

Read more

காற்றோடு சில கனவுகள்

காற்றோடு சில கனவுகள், டாக்டர் ஷியாமளா, டி.எஸ். புத்தக மாளிகை, 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 100ரூ. 23 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். ஒவ்வொரு கதையும் யதார்த்த வாழ்க்கையை வைத்து எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலும் குடும்ப பெண்ணை சுற்றியே மற்ற பாத்திரங்கள் வலம் வருகின்றன. பொருத்தமான வார்த்தைகள், எடுத்துக்காட்டுகள், வர்ணணைகள் சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 4/12/13.   —-   ஜஸ்டிஸ் ஜெகதீசன், ராணிமைந்தன், கலைஞன் பதிப்பகம், பக். 208, விலை 200ரூ. சிலரின் வாழ்க்கை வரலாறு, பலருக்கு நல்வழிகாட்டியாக […]

Read more

சர்க்கரை மனிதர்கள்

சர்க்கரை மனிதர்கள், புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி.இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுதாங்கல், சென்னை 32, விலை 90ரூ. எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், பிறருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று ஆர்வத்துடன் உழைப்பவர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒருசிலர் இருப்பார்கள். எல்லோருக்கும் பத்திரிகைச் செய்திகளை படித்துச் சொல்வதுடன், பிழையின்றி செய்திகளைப் படிக்கும் சிறவர்களுக்கு சாக்லெட் கொடுக்கும், பேப்பர் பெருசு, எதிர்பாராமல் பிரச்சினைகளில் சிக்குவோருக்கு வட்டி இல்லாமல் பணம் கொடுத்து உதவும் சிறுவாட்டு லட்சுமி. இப்படி பெரிய மனம் படைத்த எளிய மனிதர்களை கண்டுபிடித்து சந்தித்திருக்கிறீர்களா?என்ற தலைப்புடன் […]

Read more
1 2 3