இதிகாசம்

இதிகாசம், எஸ்.திவாகர், கே.நல்லத்தம்பி, காலச்சுவடு, பக். 128, விலை 150ரூ. கன்னடத்தில், 1970களில் எழுதப்பட்டு, பல்வேறு பத்திரிகைகளில் பிரசுரமாகி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் சிறுகதைப் போட்டிகளில், முதல் பரிசு பெற்ற, 9 சிறுகதைகளின் தொகுப்பாக இந்த நூல் உள்ளது. சிறுகதைகளின் நிஜம், கனவு சார்ந்த பொருட்களின் அடிப்படையில், இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 19/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கவிமணி நினைவோடை

கவிமணி நினைவோடை, சுந்தர ராமசாமி, காலச்சுவடு, பக். 80, விலை 100ரூ. சுந்தர ராமசாமி, தான் பழகிய க.நா.சு., சி.சு.செல்லப்பா, கிருஷ்ணன் நம்பி, ஜீவா உள்ளிட்ட இலக்கிய ஆளுமைகளைப் பற்றி, நினைவோடை என்ற பகுதியில் பகிர்ந்து வந்தார். அதன் தொடர்ச்சியாக, நாஞ்சில் நாட்டுக்காரரான, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையைப் பற்றிய நினைவுகள், இதில் பதியப்பட்டுள்ளன. நன்றி: தினமலர், 19/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030090.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

முச்சந்தி இலக்கியம்

முச்சந்தி இலக்கியம், ஆ.இரா. வெங்கடாசலபதி, காலச்சுவடு, விலை 140ரூ.   புலவர்களும் இலக்கிய ஆளுமைகளும் படைப்பவை மட்டுமே இலக்கியம் என்றொரு மூடநம்பிக்கை இருக்கிறது. சாதாரண மக்களும் அதிகம் அறியப்படாத படைப்பாளர்களும் உலகின் எல்லா நிலப்பகுதிகளிலும் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். தாங்கள் வாழ்ந்த காலத்தைப் பிரதிபலிக்கும் படைப்புகளை அவர்களும் எளிய முறையில், மக்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் படைப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட எளியோர் இலக்கியம் குறித்த நூல் இது. நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000000581.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

வாராணசி

வாராணசி, பா.வெங்கடேசன், காலச்சுவடு, விலை 225ரூ. இந்தியா போன்ற நாடுகளில் வைதீகம் எல்லாவற்றையும் விழுங்கும். புதிய கதைசொல்லலின் உருவத்திலும் வைதீகம் வரும். ‘வாராணசி’ நாவல் வழியாக தன்னைச் சுற்றி ஒரு சுயசிறையைக் கட்டிக்கொண்டிருக்கிறார் வெங்கடேசன். தேச வரலாறு, கலாச்சாரம், பொருள்சார் பண்பாடுகள், நாகரிகங்களின் உரையாடல், அரசியல் என்ற அகண்ட திரையின் பின்னணியில் தனிமனிதர்களை வைத்து, வாசகனின் முயற்சியையும் வேண்டும் எழுத்தைக் கொண்ட தனித்துவமான கதைசொல்லி பா.வெங்கடேசன். தமிழில் மட்டுமல்ல; சர்வதேச இலக்கியப் பின்னணியிலும் அழுத்தமாக வைக்கப்பட்ட தமிழ்ச்சுவடாக வெங்கடேசனின் முந்தைய நாவல்களான ‘தாண்டவராயன் கதை’, […]

Read more

விடம்பனம்

விடம்பனம், சீனிவாசன் நடராஜன், காலச்சுவடு, விலை 575ரூ. காலதரிசனம் கீழத் தஞ்சை மாவட்டத்தில் கடந்துபோன ஐம்பது ஆண்டுகால வாழ்வின் பின்னணியில் செல்லும் நாவல் சீனிவாசன் நடராஜனின் விடம்பனம். நாவலுக்கென்று நாம் அறிந்திருந்த எந்த ஒழுங்கும் இல்லாமல் ஓர் ஓவியர் பல்லாண்டாக வரைந்த ஓவியத் தொடர்போல இந்நாவல் அமைந்திருக்கிறது. நாவலாசிரியரும் ஒரு தேர்ந்த ஓவியர் என்பதால் இது சாத்தியம் ஆகியிருக்கலாம். இந்த தொடர்பற்ற தன்மையைத் தாண்டி, மென்மையான கிறுகிறுப்பூட்டும் தன் நடையால் கவர்கிறது இந்நாவல். மலர்கள் பூத்த குளமும் வாய்க்காலும், நெல்வயலும், கிணறுகளும், குடிசைகளும், தென்னை […]

Read more

பிரயாணம்

பிரயாணம், பாவண்ணன், காலச்சுவடு,  பக்.216, விலை ரூ.190. பாவண்ணன் 1984இல் இருந்து எழுதிய சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 சிறுகதைகளின் தொகுப்பு. நம்மைச் சுற்றி வாழ்கிற பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை, மன உணர்வுகளை மிகவும் அற்புதமாகச் சித்திரிக்கும் சிறுகதைகள் ஒவ்வொன்றும் நமக்குக் காட்டும் உலகு வித்தியாசமானது. நாம் அறிந்து கொள்ள வேண்டியது. வயதான காலத்தில் எந்த வருமானமும் இல்லாமல், எந்த ஆதரவும் இல்லாமல், ரெஜிஸ்டர் ஆபிஸில் யாருக்காவது சாட்சிக் கையெழுத்துப் போட்டு அதில் எப்போதாவது கிடைக்கும் சொற்பக் காசில் தன்னுடைய, தன் மனைவியினுடைய பசியைப் போக்கும் […]

Read more

பாரதி கவிஞனும் காப்புரிமையும்

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 பாரதி கவிஞனும் காப்புரிமையும், ஆ.இரா. வேங்கடாசலதி, காலச்சுவடு, உலகில் எந்தப் படைப்பாளிக்கும் கிடைக்காத தனிப்பெருமை பாரதிக்குக் கிடைத்தது எப்படி என்பதைக் கூறுகிறது இந்த நூல். பாதியின் படைப்புகள் நாட்டுடமை ஆனதற்குப் பின்பு நடந்த நிகழ்வுகளைப் புனைகதைக்குரிய சுவாரஸ்யத்துடன் ஆவணப்படுத்துகிறார் சலபதி. நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

என் உளம் நிற்றி நீ

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 என் உளம் நிற்றி நீ, ஞானக்கூத்தன், காலச்சுவடு, விலை 160ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023876.html ஐம்பது ஆண்டுகளாகக் கவிதை வடிவத்திலும் சொல்லல் முறையிலும் தொடர்ந்து வளர்ச்சி காட்டிவருபவை ஞானக்கூத்தனின் கவிதைகள். எள்ளல் மற்றும் அடங்கிய பரிகாசத்தை இயல்பாகக் கொண்ட இவரது சமீபத்திய கவிதைகளில் ஆச்சரியமும் நேசத்தின் ஈரமும் சேர்ந்துள்ளன. நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு

தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு, ஐ. ஜோப் தாமஸ், காலச்சுவடு, பக். 264, விலை 475ரூ. கலை வரலாற்றை ஆவணப்படுத்த முடியும் நம் வரலாற்றை நாம் தெரிந்து வைத்துகொள்வதில் இருக்கும் ஆர்வத்தை விட, மேலைநாட்டு வரலாற்றை ஆய்வாளர்களுக்கு ஆர்வம் அதிகம். தென்னிந்திய கலை குறித்த ஆய்வு ஆவணங்கள் குறித்து வெளிவந்த ஆங்கில நூல்களோடு, இதுவரை வெளிவந்துள்ள தமிழ் நூல்களை ஒப்பிட்டால் ஏமாற்றமே மிஞ்சும். இந்திய மண்ணில் ஓவியங்கள் குறித்து ஏராளமான நூல்கள் வந்துள்ளன. ஆனால் தமிழக மண்ணில் இதுவரை ஓவியங்கள், கலை செய்லபாடுகள் பற்றிய […]

Read more

ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை

ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை செவ்வியல் அரசியல் பொருளாதாரம், எஸ். நீலகண்டன், காலச்சுவடு, நாகர்கோவில், பக். 432, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-505-3.html உலக அளவில் பொருளாதாரச் சிந்தனைகள் எவ்வாறு, வளர்ந்து வந்திருக்கின்றன என்பதை விளக்கும் நூல். ஆடம் ஸ்மித், ஜெரமி பென்தம், ஜீன்பாப்டிஸ்டி ஸே, டேவிட் ரிக்கார்டோ, மால்தஸ், ஜான் ஸ்டூவர்ட் மில், கார்ல் மார்க்ஸ் போன்ற சிந்தனையாளர்களின் பொருளாதாரக் கெள்கைகளை விவரிக்கும் நூல். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆடம் ஸ்மித் 1776இல் எழுதிய […]

Read more
1 2 3