குகை மனிதனும் கோடி ரூபாயும்

குகை மனிதனும் கோடி ரூபாயும், P. பாலசுப்ரமணி, சந்தியா பதிப்பகம், 9வது அவென்யூ, அசோக்நகர், சென்னை 83, பக்கங்கள் 152, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-807-8.html பணத்தைச் சம்பாதிப்பதைவிட, அதைப் பாதுகாப்பதில்தான் நம் பொருளாதார வளர்ச்சியே இருக்கிறது. சிந்திக்காமல் செய்யும் முதலீடுகளால் அசலுக்கே ஆபத்தாய் முடியும். இப்படி பங்குச்சந்தை முதலீடுகள் தொடங்கி, பணத்தினைப் பாதுகாப்பது வரை படிப்பவர்களுக்கும் பாமரர்களுக்கும் விளங்கும் வண்ணம் பல்வேறு விஷயங்களை எளியமுறையில் எடுத்துரைக்கிறது இந்நூல். பணத்தைக் கையாள்வதில் இன்றைய நாகரிக மனிதனிடம்கூட குகை […]

Read more

வாலிப வாலி

வாலிப வாலி, நெல்லை ஜெயந்தா, பக். 372, வாலி பதிப்பகம், 12/28, சௌந்தர்ராஜன் தெரு, தி.நகர், சென்னை – 17, விலை ரூ. 250 82 வாரங்களாக சென்னை பொதிகை தொலைக்காட்சியில் கவிஞர் வாலியுடன் நிகழ்த்திய நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். தமிழ் சினிமாவின் வரலாற்றினை வாலியின் மனப்பெட்டகத்தில் இருந்து அள்ளி எடுத்துத் தந்திருக்கிறார்கள். திரை உலகின் ஒவ்வொரு அங்குலத்தையும் வாலியின் வாக்கு அளந்து வைக்கிறது. நம் கண்முன் நான்கு தலைமுறையைத் தாண்டியும் அவரது திரைத்தமிழ் வெள்ளமாய் ஓடிவருவதை ஒவ்வொரு நேர்காணலின்போதும் ரசிக்க முடிகிறது. நான் […]

Read more

இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி

இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி, ஆர்.சி. சம்பத், பக். 104, காளீஸ்வரி பதிப்பகம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர். சென்னை – 17. விலை ரூ. 40 எம்.எஸ். என்று அழைக்கப்படும் எம்.எஸ். சுப்புலட்சுமி இந்தியா முழுதும், வெள்ள நிவாரண நிதி, கல்வி, சமூக நிறுவனங்களின் வளர்ச்சி நிதி போன்ற சேவைக்காக கச்சேரி நடத்தி திரட்டித் தந்த நிதி ஏராளம். இப்படியொருவர் இந்திய இசையுலகில் வாழ்ந்தார் என்பதே உலகுக்கே பெருமை. அதுவும் தமிழகத்திற்கு சிறப்பு. அத்தகைய இசையரசியின் வாழ்க்கையைத்தான் நூலாசிரியர் எழுதியுள்ளார். மகாத்மாகாந்தி, இந்திராகாந்தி ஆகியோருடனான நட்பு, தமிழிசைக்கு […]

Read more

பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே!

பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே! முனைவர் துளசி இராமசாமி,  பக். 888, வெளியீடு: விழிகள், 664, 3வது தெரு, வீனஸ் குடியிருப்பு விரிவு, வேளச்சேரி, சென்னை – 42. விலை ரூ. 700 பழந்தமிழ் இலக்கியங்கள் யாவும், நாட்டுப்புறப் பாடல்களாக இருந்தவற்றைச் சேகரித்துத் தொகுத்தவை என்றும், அதில் வரும் அடி வரையறைகளைக் கொண்டே தொகுப்புகளுக்குப் பெயரிட்டிருக்கிறார்கள் என்றும் மிகப் பெரிய அளவில் ஆய்வு செய்து முனைவர் துளசி. இராமசாமி இந்நூலை எழுதியுள்ளார். இவை எல்லாம் எழுத்து – தமிழ் – பிராமி கண்டுபிடிக்கப்பட்ட பின் தொகுக்கப்பட்டவை என்பதையும் ஆய்வில் […]

Read more

சோதனைகளை சாதனைகளாக மாற்றுவது எப்படி?

சோதனைகளை சாதனைகளாக மாற்றுவது எப்படி?, லோகநாயகி, குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 10. பக். 224, விலை ரூ. 130 குமுதம் சிநேகிதி ஆசிரியர் லோகநாயகி, சிநேகிதிகளின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பே இந்நூல். கேள்விகளுக்கான பதில்கள்தான் என்றாலும், பதில்களில் உங்களுக்குக் கிடைக்கும் செய்திகள் ஏராளம். அறிவியல், ஆன்மிகம், குடும்ப உறவுகள், ஆண்-பெண் மன இயல்புகள், பயணம் குறித்த அனுபவங்கள், வரலாற்றுச் சான்றுகள், சினிமா உள்ளிட்ட நாட்டு நடப்புகள், அரசியல் விமர்சனங்கள் என்று தகவல் பெட்டகமாக விளங்குகிறது. பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை, சோதனைகளை சாதனைகளாக […]

Read more

நூலகவியல்

நூலகவியல், முனைவர் மு. ராமச்சந்திரன், தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை, பக்கம் 171, விலை ரூ. 100 நூலகம் என்றால் என்ன? அதன் வரலாறு யாது? நூலகத்தின் அக ஒழுங்குமுறை எப்படியிருக்க வேண்டும்? இவை பற்றிதான் சுருக்கமாக இந்நூலில் ஆசிரியர் பேசியுள்ளார். நூல்களை வகைப்படுத்துதல், அவற்றைப் பாதுகாத்தல், நூலகத்திற்கு வரும் வாசகர்களுக்கு அவற்றைப் பகிர்ந்தளிக்கும் பணி எவ்வாறு இருக்கும் என்பன போன்ற பயனுள்ள தகவல் படிப்போர்க்கு உதவும். – இரா. மணிகண்டன் நன்றி: குமுதம் 28.11.12      

Read more

பத்திரிகைகளுக்கு எழுதுவது எப்படி?

சேற்றில் மலர்ந்த செந்தாமரை, தொ.மு.சி. ரகுநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 08,  பக்கம் 110, விலை ரூ. 75 தொ.மு.சி. ரகுநாதன் தமிழகம் நன்கு அறிந்த முற்போக்கு இலக்கியவாதி. திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைபெயரில் இவர் எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் தனித்த முத்திரை பதித்தவை. இவரது ‘பஞ்சும் பசியும்’ என்ற நாவல்தான் தமிழ் மொழியிலிருந்து முதன் முதலாக ஐரோப்பிய மொழியொன்றில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவலாகும். 1940களில் அவர் எழுதிய […]

Read more

ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை (செவ்வியல் அரசியல் பொருளாதாரம்)

காற்றால் நடந்தேன், சீனு ராமசாமி, உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை – 18, பக்கம் 104, விலை 80 ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-203-0.html சீனு ராமசாமியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. சமூகம் கட்டமைத்த சராசரி ஆண் மனதைக் கடக்க எண்ணும் முயற்சி பல கவிதைகளில் பிரதிபலிக்கிறது. ஒரு கூரையின் கீழ் காதலின்றி வாழ நேரும் ஓர் ஆணையும் பெண்ணையும் காதலற்ற வாழ்வில் நடமாடித் திரிவதைவிடவும் இப்பிரிவு உன்னதம் என்கிறது ‘விளக்கம்’ கவிதை. […]

Read more

குமுதம் புத்தக அறிமுகங்கள் – 29.08.2012

வீடு நெடும் தூரம் ரவி பக்கங்கள் 240 விலை 160ரூ பரிசல் பதிப்பகம் அகிம்சை வழியில் தொடங்கிய இலங்கைத் தமிழர்கள் சுதந்திரப் போராட்டம், ஆயுதப் போராட்டமாக உருமாறிய காலத்தைப் பற்றிய, ஒரு முன்னாள் போராளியின் அனுபவப் பகிர்வு இந்தப் புத்தகம். 1972-1986 வரை பதினைந்து வருட காலம் ஈழத்தில் என்ன நடந்தது என்பதை அப்படியே பதிவு செய்துள்ளார். ஏன் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள்? ஏன் இலங்கைத் தமிழர்கள், ‘எங்களால் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது’ என்று சொல்கிறார்கள்? போன்ற பல கேள்விகளுக்கு இந்தப் […]

Read more

எனக்கு எதுவோ உனக்கும் அதுவே

எனக்கு எதுவோ உனக்கும் அதுவே – இளையராஜா; பக்.144; ரூ.150; குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, சென்னை-10 இசையமைப்பாளர் இளையராஜாவின் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் கவித்துவமான சிந்தனைகளை தத்துவார்த்தரீதியில் வெளிப்படுத்தும் தொகுப்புதான் இந்நூல். இளையராஜா ஆன்மிகம் குறித்தே அதிகம் சிந்திக்கிறார் என்பதற்கு இதில் உள்ள பல கவிதைகள் சான்று. “நடுத்தர வயதிலேயே பாம்பு சட்டையை உரிப்பதைப் போல, பசுமரம் பட்டையை உரிப்பதைப் போல, உலகாயத விஷயங்களை உதறி தாமரையிலைத் நீராய் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கப் பயின்றவர்’ என்று கவிஞர் வாலி நூலின் அணிந்துரையில் குறிப்பிடுவது நூற்றுக்கு நூறு […]

Read more
1 55 56 57