சூரிய வம்சம்

சூரிய வம்சம் (இரண்டு பகுதிகள்), சிவசங்கரி, பதிவு – எழுத்து: ஜி.மீனாட்சி, வானதி பதிப்பகம், விலை: ரூ.600. நினைவை மீட்டுவதென்பது காலச் சக்கரத்தில் ஏறிப் பின்னோக்கிப் பயணித்து மீள்வதைப் போன்றது. ‘சூரிய வம்சம்’ நினைவலைகளின் மூலம் அதை நிகழ்த்துகிறார் சிவசங்கரி. வாழ்க்கை சுரத்தில்லாமல் நிறமிழக்கும் நேரத்தில், மலர்ந்து சிரிக்கிற வசந்தத்தைப் போல எழுத்துலகில் புதுப் பாய்ச்சலுடன் புகுந்தவர் அவர். மானசீகமாகத் தன்னை அம்மாவாக ஏற்றுக்கொண்ட லலிதாவுக்காகத் தன் நினைவலைகளைத் தொகுத்திருக்கிறார். இது சுயசரிதை அல்ல என்று சொல்லும் சிவசங்கரி, சிலரது முகமூடிகளைக் கிழிக்க வேண்டிவரும், […]

Read more

வியாசர் அருளிய மகாபாரதம்

வியாசர் அருளிய மகாபாரதம், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 200ரூ. மாபெரும் இந்திய இதிகாசங்களில் வியாசர் அருளிய மகாபாரதம் மனித வாழ்வை நெறிப்படுத்தும் நன்னூல். தர்மத்தை உயிர் மூச்சாய் கொண்ட யுதிஷ்டிரன், அநியாய அக்கிரமங்கள் செய்யத் தயங்காத துரியோதனன் இவர்களுக்கிடையே உருவாகிறது பகைமை. முடிவில் எது வெற்றி பெறுகிறது? தர்மமா, அதர்மமா என்ற கேள்வியும், அதற்கான பதிலுமே மிகப்பெரிய மகாபாரதமாய் விரிந்திருக்கிறது. இந்நூலின் சிறப்பு, கண்ணன், யுதிஷ்டிரன், அர்ச்சுனன், கர்ணன், சகுனி, விதுரன் என்று மாறுபட்ட ஆளுமைச் சிறப்புகளை, வாழ்வியல் நெறிகளை உள்ளடக்கியது என்பதுதான், […]

Read more

சிவசங்கரி குறுநாவல்கள் தொகுதி 8

சிவசங்கரி குறுநாவல்கள் தொகுதி 8, சிவசங்கரி, வானதி பதிப்பகம், சென்னை, பக். 344, விலை 175ரூ. எழுத்தாளர் சிவசங்கரி தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். இதுவரை 150 சிறுகதைகள், 30 நாவல்கள் எழுதியுள்ளார். அவர் எழுதிய கதைகளில் ஒரு மனிதனின் கதை, நண்டு, அம்மா சொன்ன கதைகள் ஆகியவை இன்றும் அவரது எழுத்துக்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன. பொதுவாக அவருடைய கதைகளில் சமூகச் சிந்தனைகள் மேலோங்கி நிற்கின்றன. போதைப் பொருளுக்கு அடிமையாவது, மதுவுக்கு அடிமையாவது ஆகியவற்றைத் தன்னுடைய எழுத்துக்கள் மூலம் தொடர்ந்து கண்டித்து வருகிறார். முதுமை சார்ந்த […]

Read more