திருக்குறள் விளக்கம்

திருக்குறள் விளக்கம், திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும், கி.குப்புசாமி முதலியார், சிவலாயம் வெளியீடு, பக்.1735, விலை 1800ரூ. உலக பொதுமறை என போற்றப்படும் திருக்குறளுக்கு, எண்ணற்ற விளக்கவுரைகள் வெளிவந்துள்ளன; இனியும் வரும். அவை அத்தனையும், மாற்றுக் குறையாத பரிமேலழகரின் உரைக்கு அடுத்த விளக்கமாகும். பரிமேலழகர், வைணவராக இருந்தாலும், சைவ நுால்களை நன்கு பயின்று தேர்ந்தவர். வட மொழியைக் கற்று கரை தேர்ந்த வித்தகர். திருக்குறளுக்கு அவரின் உரை, மாபெரும் கோவிலுக்கு தங்கக் கூரை வேய்ந்ததை போன்றது என்றாலும், அவரின் உரையும், விமர்சனங்களை சந்தித்தே வருகிறது. […]

Read more