மதுரை வீரன் கதைகள் மறுபார்வை

மதுரை வீரன் கதைகள் மறுபார்வை, சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.290, விலை 230ரூ. வீரமும், விவேகமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவன் மதுரை வீரன். இவன், காசியிலே பிறந்து பொம்மண சீமையிலே வளர்ந்து, மதுரையிலே தெய்வமாகிறான். மதுரையில் தெய்வமானதால் இவன் மதுரை வீரனாகிறான். சாதாரண மனிதனைப் போலவே மதுரை வீரனுக்கும் காமம், கொள்ளை, கொலை ஆகிய தீய பண்புகள் இருந்துள்ளன. இவனைப் பற்றிய கதையை தற்காலத்தில் பரப்பிய பெருமை திரைப்படத்தையே சாரும். எனினும், மதுரை வீரனைக் கதைப் பாடல்களும், வில்லுப் பாடல்களும், கூத்துப் பாடல்களும், கோலாட்டப் பாடல்களும் […]

Read more

நெல்லை மறவர் கதைப்பாடல்கள்

நெல்லை மறவர் கதைப்பாடல்கள், சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலை 400 ரூ. முன்னோர்களை வழிபடும் தெய்வவழிபாடு, தமிழகத்தில் பன்னெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதையொட்டி தொகுக்கப்பட்ட இந்த நூல், குறிப்பாகத் திருநெல்வேலிப் பகுதியில் இறந்தோர் வழிபாட்டில் பாடப்படும் பாடல்களை சிறப்பாகப் பதிவு செய்து இருக்கிறது. நெல்லை மறவர் குலத்தைச் சேர்ந்த ஈனமுத்துப் பாண்டியன், மெச்சும் பெருமாள் பாண்டியன், சோனமுத்துப் பாண்டியன், சிவராமப் பாண்டியன், பாலம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்ட பின்னர் அவர்களது வாழ்க்கை விவரம் தெய்வவழிபாட்டுப் பாடல்களாகப் பாடப்பட்டு இருக்கின்றன. இந்தப் பாடல்களையும் கதை மாந்தர்களின் வாழ்வில் நடைபெற்ற […]

Read more

கன்னடியர் மகள்

கன்னடியர் மகள், சு. சண்முகசுந்தரம், காவ்யா, விலை 100ரூ. இது வள்ளியூரைக் களமாகக் கொண்டு ஐவர் ராஜாக்கள் கதையைத் தழுவி எழுதப்பட்ட நாவல். இதை சுந்தரபாண்டியன் என்ற புனைப் பெயரில் பேராசிரியர் சு. சண்முகசுந்தரம் எழுதியுள்ளார். கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றின் பண்பாடு, வீரம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு இணைப்பு பாலமாக இந்த நாவல் திகழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 12/7/2017.

Read more

நெல்லை நாட்டுப்புறக் கலைகள்

நெல்லை நாட்டுப்புறக் கலைகள், சு.சண்முகசுந்தரம், காவ்யா, சென்னை, பக்.216, ரூ.210. நாட்டுப்புறக் கலைகளின் பிறப்பிடம் கிராமங்கள். கிராமங்களில் நடைபெறும் விழாக்களின் ஒரு பகுதியாக நாட்டுப்புறக் கலைகள் அரங்கேற்றப்படுவதுண்டு. இன்று விவசாயம் நலிந்து, கிராமங்களிலிருந்து பிழைப்புக்காக பெரும் அளவில் மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்துவிட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நமது மண்ணில் புதைந்து கிடக்கும் பழைய வேர்களிலிருந்து கிளை பரப்பி, மலர்ந்துள்ள நாட்டுப்புறக் கலைகளைப் பற்றிய அறிமுகமாகவும், நமது மரபை நாம் மறந்துவிடாமல் நினைவுபடுத்தும் நோக்கத்துடனும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம், ஆலி ஆட்டம், […]

Read more

வள்ளியூர் வரலாறு

வள்ளியூர் வரலாறு, சு. சண்முகசுந்தரம், காவ்யா, சென்னை 24, பக். 503, விலை 400ரூ. தென் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில் திருத்தலங்களில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரும் ஒன்று. இது வளர்ந்து வரும் நகரமும்கூட. இந்த ஊர் தொடர்பான இலக்கியங்கள், செவிவழிச் செய்திகள், நாட்டுப்புறப் பாடல்கள், புராணங்கள், வரலாறுகள், கல்வெட்டுகள், வாய்மொழி வழக்குகளில் உள்ள பல்வேறு செய்திகளின் விரிவான தொகுப்பே இந்நூல். நூலாசிரியரின் கடின உழைப்பும் சுவைபடச் சொல்லும் விதமும் ஓர் ஊரின் பின்னணியில் இத்தனை சம்பவங்களும் செய்திகளும் வரலாறும் உள்ளனவா என்பது […]

Read more