ஜெகாதா குறுநாவல்கள்

ஜெகாதா குறுநாவல்கள், ஜெகாதா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 608, விலை 380ரூ. ஜெயகாந்தனை துரோணராக வரித்துக்கொண்ட ஜெகாதா (ஜெயகாந்தன்தாசன்) என்ற ஏகலைவன், வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறி உச்சியைத் தொட்டிருக்கிறார். ஜெகாதாவின், 18 நீள் கதைகளைக் கொண்ட தொகுதி இது. ‘அவ்வளவு பெய்த மழையிலும் நிலவு நனையாமல் பளீரிடுவதைப் பார்த்தாள். ஒளியேற்றிய கற்கண்டுக் கட்டிகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன’ என்பது போன்ற வர்ணனைகள் நம்மை, உற்சாகப்படுத்துகின்றன. ராமேஸ்வரம் சங்கு குளித் தொழிலாளர் பிரச்னைகளைச் சித்தரிக்கும், ‘சமுத்திர குமாரர்கள்’, கந்து வட்டிக்குக் கடன் […]

Read more

குருதிக் களத்தில் ஒளிப்பதிவு செய்தவர்கள்

குருதிக் களத்தில் ஒளிப்பதிவு செய்தவர்கள், ஜெகாதா, சபரீஷ் பாரதி வெளியீடு, பக். 128, விலை 80ரூ. ஒரு போர் பற்றிய தகவல்கள் எந்தளவுக்கு பரபரப்பை கிளப்பி விடுகின்றனவோ, அதேபோல்தான், போர் குறித்த புகைப்படங்களும். ஆனால் செய்யதிகளைவிட அவை, மக்களிடம் ஒருவித அச்சத்தையும், இரக்கத்தையும் ஏற்படுத்துவதில் முன்னிற்கின்றன. அப்படி போர்களில் உயிரை துச்சமாக மதித்து, கேமராக்களுடன் ஓடி, போரின் பாதிப்புகள், மனித உரிமைமீறல்கள், பரிதாபம், கொடூரங்களை புகைப்படங்களாக பதிவு செய்த, 50 புகைப்பட கலைஞர்களின் வாழ்க்கை பதிவு தான் இந்த நூல். அமெரிக்கா, சோவியத், பிரிட்டன் […]

Read more

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால், ஜெகாதா, நக்கீரன், விலை 150ரூ. அண்மையில் நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை வென்று, இந்தியாவை மட்டுமல்ல, உலகின் விழிகளையே வியப்பால் விரியச் செய்தவர், அரவிந்த் கெஜ்ரிவால். ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பை அன்னா ஹசாரேயுடன் இணைந்து உருவாக்கியது முதல், மீண்டும் டெல்லி அரியணையில் அமர்ந்தது வரையிலான கெஜ்ரிவாலின் வாழ்க்கையை எழுத்தாளர் ஜெகாதா சுவைபட எழுதியுள்ளார். சாமானியனாக இருந்த சாதனை படைத்த அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்ட குணம், துணிச்சல் ஆகியவற்றை பாராட்டும் ஆசிரியர், அவரது ஆரவார […]

Read more

ஈழக்கனவும் எழுச்சியும்

ஈழக்கனவும் எழுச்சியும், ஜெகாதா, நக்கீரன், சென்னை, விலை 300ரூ. தனி ஈழம் கோரி, இலங்கையில் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடத்திய போராட்டம் முடிவடைந்து, ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. விடுதலைப்புலிகளின் வீரப்போரை விரிவாகக் கூறுகிறது இந்நூல். சம்பவங்களை ஆதாரங்களுடனும், தெளிவாகவும் விவரிக்கிறார் ஆசிரியர் ஜெகாதா. பிரபாகரனுக்கும் மாத்தையா செய்த துரோகத்தைப் படிக்கும்போது, நெஞ்சம் பதைபதைக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட மாத்தையா, கடைசி முறையாக மனைவியைப் பார்க்க விரும்பியபோது, அந்த துரோகியைக் காண நான் விரும்பவில்லை என்று கூறிவிடுகிறார் அந்த வீரப்பெண். […]

Read more

பேரறிஞர் அண்ணா களஞ்சியம்

பேரறிஞர் அண்ணா களஞ்சியம், குமுதவல்லி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 200ரூ. அப்பாவித் தோற்றமளித்த அறிஞன். எதிராளியையும் வசப்படுத்திய வசியன். குரலால், எழுத்தால் ஆண்ட மன்னன். தமிழ்நாட்டின் அண்ணன், சி.என்.ஏ. என்னும் மூன்றெழுத்தால் அறிமுகமான அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரைக் களஞ்சிய நூல். இந்நூல் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று சுருக்கக் குறிப்பும், அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் அண்ணா பற்றி எழுதிய புகழ்மாலை தொகுப்பும், கவிஞர்களின் கவிதைத் தொகுப்பும், அண்ணாவின் மறைவுக்குப் பின் தலைவர்கள் தெரிவித்த இரங்கல் உரைகளும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. திறனாய்வுச் செம்மல் எம்.எஸ்.தியாகராஜன் இத்தொகுப்பை செம்மைப்படுத்தியிருக்கிறார். […]

Read more

நான் கண்ட ஜப்பான்

நான் கண்ட ஜப்பான், எத்திராஜன் ராதா கிருஷ்ணன், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-338-4.html பேராசிரியர் எத்திராஜன் ராதாகிருஷ்ணன், 23 முறை ஜப்பானுக்கு சென்று வந்தவர். எனவே ஜப்பான் பற்றிய பயனுள்ள தகவல்களைக் கூறும் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். ஜப்பானில் மேலை நாட்டு நாகரிக்த்தின் தாக்கம் மிகுந்து வந்தாலும், ஜப்பானிய பெண்களிடம் பெண்மைக்கே பெருமையும், அழகும் சேர்க்கும் மென்மையும், நளினமும் நிறைந்து காணப்படுகின்றன என்கிறார் ஆசிரியர். ஜப்பானிய கல்வி முறையைப் பற்றிய விவரங்கள் விரிவாகக் […]

Read more

சங்கீத சற்குரு தியாகராஜர்

சங்கீத சற்குரு தியாகராஜர், ஜெ. அரவிந்த்குமார், லதா பதிப்பகம், ஜி3, பத்மா காம்ப்ளெக்ஸ், 2, கன்னியப்பன் தெரு, வடபழனி, சென்னை. பக். 344, விலை 200ரூ. கர்நாடக சங்கீத உலகின் மும்மூர்த்திகளுள் ஒருவரான ஸ்ரீ தியாகராஜரின் வாழ்க்கைச் சரித்திரச் சுருக்கம், அவர் இயற்றிய நௌகா சரித்திரம், பிரகலாத பக்தி விஜயம், இவற்றோடு தியாகராஜரின் கீர்த்தனைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கீர்த்தனைகள் பஞ்சரத்ன கீர்த்தனைகள் மற்றும் அவற்றுக்கான தமிழ்மொழிபெயர்ப்பு, தியாகராஜர் கையாண்ட ராகங்கள், தாளங்களின் பட்டியல் போன்ற தியாகராஜர் பற்றி அனைத்தும் அடங்கிய அருமையான நூல். […]

Read more

நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள்

நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள், பா. பிரவீண்குமார், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 95ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-841-0.html முன்பு, தங்களுக்கு வந்த நோய் என்ன என்பதைக்கூட அறியாமல் இறந்தவர்கள் பலர் உண்டு. இன்று, எந்த நோயாக இருந்தாலும் சரி, அதற்குத் தீர்வு உண்டு என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஜு.வி.யில் டாக்டர் விடகன் பகுதியில் தொடராக வெளிவந்த மருத்துவக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். உயிருக்கும், உடலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் […]

Read more

இந்திய சிம்மாசனத்தை அலங்கரித்த இஸ்லாமிய மன்னர்கள்

இந்திய சிம்மாசனத்தை அலங்கரித்த இஸ்லாமிய மன்னர்கள், ஜெகாதா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 75ரூ. இந்திய சிம்மாசனத்தில் கம்பீரமாக ஏறி அமர்ந்து ஆட்சி புரிந்த குத்புத்தீன் ஐபக் முதல் முகலாய அவுரங்கசீப் வரையிலான இஸ்லாமிய மன்னர்களைப் பற்றி எழுதப்பட்ட நூலாகும். குறிப்பாக இந்தியா வரலாற்றில் இடம் பெற்றுள்ள அரசியல் சாணக்கியர் முகம்மது பின் துக்ளக், தாஜ்மகால் நாயகன் ஷாஜகான், முகலாய ராஜதந்திரி அக்பர் உள்ளிட்ட 25 இஸ்லாமிய மன்னர்கள் குறித்த செய்திகளை அனைவரும் […]

Read more
1 2