இந்தியா அழைக்கிறது

இந்தியா அழைக்கிறது, ஆனந்த் கிரிதரதாஸ், தமிழில்: அவைநாயகன், அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பக்.360, விலை ரூ.300. 1970 – களில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா நாட்டில் கிளீவ்லாந்தின் ஓஹியோ புறநகர்ப் பகுதிக்கு குடி பெயர்ந்த இந்தியப் பெற்றோருக்குப் பிறந்தவர் நூலாசிரியரான ஆனந்த் கிரிதரதாஸ். பிறந்தது, வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவாக இருந்தாலும், அவருள்ளே இந்திய மண்ணின் மீதான தாகம் எப்போதும்நிறைந்திருந்ததால், அமெரிக்காவில் இருந்த மெக்கின்சி நிறுவனத்தின் இந்தியக் கிளைக்கு வேலைக்கு விண்ணப்பித்து இந்தியா வந்து சேர்ந்தார். வேலை தொடர்பாகவும், தன் ஆர்வத்தின் காரணமாகவும் இந்தியாவின் பல […]

Read more

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது, மாயா ஏஞ்சலோ, தமிழில் அவைநாயகன், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, பக். 336, விலை 300ரூ. உலகில் இன்றும் எஞ்சியிருக்கும் நிறவெறிக்கு எதிரான போரில் தனது எழுத்தையே ஆயுதமாக்கியவர் ஆப்பிரிக்க – அமெரிக்க எழுத்தாளர் மாயா ஏங்சலோ. தனி தேவாலயம், பொது இடங்களில் வெள்ளையர்களின் சுரண்டல், எங்கும் ஆணாதிக்கம், கேலி, வன்கொடுமைகள் எனப் பல மோசமான அனுபவங்களுடன் வளர்ந்தாலும், அவற்றை மீறி சிலிர்த்தெழுந்த அமெரிக்க கறுப்பினப் பெண்ணான மாயா, பிற்காலத்தில் அடிமைத்தளையை எதிர்க்கும் போரில் முன்னுதாரணமான பெண்மணியாக உயர்ந்தார். எழுத்தாளர், […]

Read more