தென் இந்திய வரலாறு பிரச்சினைகளும் விளக்கங்களும்

தென் இந்திய வரலாறு பிரச்சினைகளும் விளக்கங்களும், தொகுப்பு: நொபோரு கராஷிமா, தமிழில்: ப.சண்முகம், அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம். விலை: ரூ.700 தென்னிந்திய வரலாற்றைக் கல்வெட்டு ஆதாரங்களின் துணையோடு ஆய்வுக்குட் படுத்தியவர் நொபோரு கராஷிமா. தமிழக வரலாற்று அறிஞர்களின் பங்களிப்போடு அவர் தொகுத்த ‘தென் இந்திய வரலாறு’ இருபதாம் நூற்றாண்டு வரையிலான தமிழக வரலாற்றை நவீன ஆய்வுக் கண்ணோட்டத்தோடு விரிவாகப் பேசும் நூல். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்திய வரலாற்று நூல் விஜயநகரப் பேரரசின் காலத்துடனே நிறைவுபெற்றுவிடுகிறது. சாஸ்திரிக்குப் பிறகு கிடைத்த வரலாற்று ஆதாரங்களையும் ஒப்புநோக்கி எழுதியிருப்பது […]

Read more