கடல் கிணறு

கடல் கிணறு, ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. மௌனமாய் மரணத்தைப் பேசும் கதைகள் கடல் கிணறு தொகுப்பில் இருக்கிற சிறுகதைகள் வழக்கமான தமிழ்க் கதைகள் அல்ல. மனதின் வலியிலிருந்து எழுதப்பட்ட, சமூக நிகழ்வுகளின் கொடூரங்கள் தந்த மன அழுத்தத்திலிருந்து எழுதப்பட்ட கதைகள். அரசியல் கதைகள் என்று தோற்றம் தருகிற உண்மை அறிதல், எட்டாம் தூக்கம், ழ, வார்த்தைகள் போன்ற கதைகளில் முக்கியமான பாத்திரம் அரசியல் அல்ல. மரணம்தான். அதைவிடவும் மௌனம்தான் எல்லாக் கதைகளிலும் பிரதான பாத்திரம். தொகுப்பின் அநேகக் கதைகளில் மரணம் […]

Read more

உயிர்ப்பு மிக்க காவியம்

உயிர்ப்பு மிக்க காவியம், சீறா வசனகாவியம், கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர், கல்தச்சன் பதிப்பகம், 21, மேயர் சிட்டி பாபு தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5. சீறாப்புராணத்தின் உரைநடை வடிவம்தான் இந்தச் சீறா வசன காவியம். இதை எழுதியிருப்பவர் காயல்பட்டணத்தைச் சேர்ந்த கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர். இது 125 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. என்றாலும் அதில் கையாளப்பட்டுள்ள மொழியால் இந்நூல் இன்று உயிர்ப்புடன் இருக்கிறது. இந்தப் புத்தகம் சீறாப்புராணத்தின் பொழிப்புரையோ தெளிவுரையோ அல்ல. கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர் இதை ஒரு பருந்துப் பார்வையுடன் எழுதியிருக்கிறார். சீறாப்புராணத்தின் […]

Read more

வேடிக்கை வினோதக் கதைகள்

வேடிக்கை வினோதக் கதைகள், கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சன்னை 17, விலை 350ரூ. பெரியவர்களுக்கு கவுசிகள் என்ற பெயரிலும், சிறுவர்களுக்கு வாண்டு மாமா என்ற பெயரிலும் கதை எழுதும் வி.கே. மூர்த்தி,இப்போது சிறுவர்களுக்காக பெரிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ராஜா ராணி கதைகள், மந்திராவாதிக் கதைகள், மர்மக் கதைகள், சிரிக்க வைக்கும் கதைகள் இப்படி பலதரப்பட்ட கதைகள் இதில் உள்ளன. மொத்தம் 50க்கும் மேற்பட்ட கதைகள், சுவையும், விறுவிறுப்பும் மிக்க கதைகள். சிறுவர் சிறுமிகள் கையில் எடுத்தால், படித்து […]

Read more
1 42 43 44