ஐம்பேரியற்கை

ஐம்பேரியற்கை. மாற்கு, தமிழினி . போராடும் மாநிலமாக மாறியுள்ள தமிழகத்தின் அத்தனை போராட்டங்களுக்கும் மைய இழை, இயற்கையைப் பாதுகாப்பதுதான். அந்த நோக்கத்துக்கு இலக்கிய வடிவம் கொடுத்திருக்கிறார் மாற்கு. கிராமத் தன்னிறைவு, சமத்துவம், எளிய வாழ்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற லட்சியங்களைக் கொண்ட ஒரு வெற்றிகரமான கிராமத்தை முன்மாதிரியாகக் காட்டுகிறது கதை. தொண்டு நிறுவனங்களின் லாப நோக்கம், நகர நாகரிகத்தின் தாக்கத்தால் மறந்துபோன 23 மூலிகைகளின் பட்டியல் என்று நடப்பையும் இழப்பையும் ஒருசேரப் பேசுகிறது. நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

சிவப்புக் கிளி

சிவப்புக் கிளி, வசுதேந்திரா – தமிழில் யூமா வாசுகி,  பாரதி புத்தகாலயம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் நம் அனைவரது வாழ்வையும் நேரடியாகத் தீண்டத் தொடங்கிவிட்ட நிலையிலும், அவற்றைக் குறித்த அடிப்படை உணர்வு அற்றவர்களாகவே பெரும்பாலோர் இருக்கிறோம். இயற்கையையும் நம் வாழ்க்கையையும் எப்படிப்பட்ட அவலமான வகையில் பறிகொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அழுத்திச் சொல்லும் கதைகளில் ஒன்று ‘சிவப்புக் கிளி’. நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஒன்பது ஆட்தின்னிகளும், ஒரு போக்கிரி யானையும்

ஒன்பது ஆட்தின்னிகளும், ஒரு போக்கிரி யானையும் , கென்னத் ஆண்டர்சன், தமிழில்:கமலநாத் , பாரதி புத்தகாலயம், விலை 210ரூ. வேட்டை இலக்கியம் என அறியப்படும் பிரிவில் தேசிய அளவில் ஜிம் கார்பெட் புகழ்பெற்றவர். வட இந்தியாவுக்கு ஜிம் கார்பெட் என்றால் தென்னகத்துக்கு கென்னத் ஆண்டர்சன். இவருடைய ஆங்கில நூல்கள் மிகக் குறைவாகவே மற்ற மொழிகளுக்குச் சென்றுள்ள நிலையில், இப்புத்தகம் தமிழில் வெளியாகியுள்ளது. நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027156.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

இந்திய நாயினங்கள்

இந்திய நாயினங்கள், சு. தியடோர் பாஸ்கரன் , காலச்சுவடு வெளியீடு , விலை 190ரூ. நாய் நமக்கு மிக நெருக்கமான உயிரினம். அதேநேரம் நாய் என்றவுடன் நம் மனதில் அயல்நாட்டு நாய் வகைகளும், கலப்பின நாய் வகைகளுமே தோன்றுகின்றன. இந்தப் பின்னணியில் இந்திய நாட்டு நாயினங்கள் பற்றி முதன்முறையாக தமிழில் அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம். நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026335.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

1000 கடல் மைல்

1000 கடல் மைல், வறீதையா கான்ஸ்தந்தீன்,  தடாகம், விலை 250ரூ. மீனவர்களை ஏதோ மீன்பிடித் தொழில் செய்பவர்கள் என்ற ரீதியிலேயே புரிந்துகொள்கிறது பொதுப்புத்தி. ஆனால், காட்டைச் சார்ந்து வாழும் பழங்குடிகளைப் போல் கடலைச் சார்ந்து வாழும் பழங்குடிகளாக உள்ள மீனவர்களை அரசுகள் எப்படிப்பட்ட நெருக்கடிகளுக்குத் தள்ளுகின்றன என்பதை விரிவாகப் பேசுகிறது இந்தப் புத்தகம். நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027320.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

கையிலிருக்கும் பூமி

கையிலிருக்கும் பூமி, சு.தியடோர் பாஸ்கரன், உயிர்மை வெளியீடு, விலை 600ரூ. மூத்த சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் தமிழில் சூழலியல் எழுத்துக்குத் தனி அடையாளம் பெற்றுத் தந்தவர். தமிழில் அவர் எழுதிய 100 கட்டுரைகள் அடங்கிய இந்த முழுத் தொகுப்பு, முதன்மையான சூழலியல் ஆவணமாக வெளியாகியுள்ளது. நன்றி: தி இந்து, 10/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027340.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ராஜ் கௌதமன் நூல்கள் வரிசை

ராஜ் கௌதமன் நூல்கள் வரிசை, என்.சி.பி.ஹெச். வெளியீடு, விலை 1670ரூ. சங்க இலக்கியங்கள், புதுமைப்பித்தன், வள்ளலார் என்று வெவ்வேறு ஆய்வுத் தளங்களைத் தனித்த பார்வையோடு அணுகியவர் ராஜ் கௌதமன். புனைவாகவும் தன்வரலாறாகவும் அமைந்த அவரது சிலுவைராஜ் தொடர் வரிசை நூல்கள் அவரது இலக்கிய எழுத்தாளுமைக்கு உதாரணங்கள். ஏற்கெனவே வெளிவந்து பதிப்பில் இல்லாத புத்தகங்களையும், புதிய புத்தகங்களையும் (9 புத்தகங்கள் – ஆய்வு நூல்கள் மற்றும் ‘காலச்சுமை’ நாவல் உட்பட) என்சிபிஹெச் பதிப்பகம் கொண்டுவந்திருக்கிறது. நன்றி: தி இந்து, 10/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

அக்னி நதி

அக்னி நதி, குல் அதுல்ஜன் ஹைதர், தமிழில் சௌரி, என்.பி.டி. வெளியீடு. ‘அக்னி நதி’யை வாசித்துவிட்டு அந்நாவலில் வரும் கதாபாத்திரமான கௌதம நீலாம்பரனாகத் தன்னை நினைத்துக்கொண்டுத் திரிந்தவர்கள் ஏராளம் பேர். இந்த நாவல், உருது இலக்கியத்துக்குப் புதிய பாணியை அளித்தது. தலைசிறந்த நாவலாசிரியாக ஹைதர் கருதப்பட்டதற்கு இந்நாவலின் படைப்பாற்றல் மிக முக்கியமான காரணம். பல காலமாகப் பதிப்பில் இல்லாத இந்தப் புத்தகத்தை இப்போது மறுபதிப்பு செய்திருக்கிறது ‘நேஷனல் புக் ட்ரஸ்ட்’. நன்றி: தி இந்து, 13/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

100 சிறந்த சிறுகதைகள்

100 சிறந்த சிறுகதைகள், எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி பதிப்பகம், விலை 1000ரூ. எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ் இலக்கியத்துக்குச் செய்த மகத்தான பணிகளுள் ஒன்று இந்தத் தொகுப்பு. தமிழின் தலைசிறந்த 100 சிறுகதைகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது இது. அங்கிருந்து புதிதாகப் பல எழுத்தாளர்களைக் கண்டடைவதற்கான வாசலையும் திறந்துவிடுகிறது. நவீன இலக்கிய வாசகர்கள் ஒவ்வொருவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகம். நன்றி: தி இந்து, 13/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நீலகண்டப் பறவையைத் தேடி

நீலகண்டப் பறவையைத் தேடி, அதீன் பந்த்யோபாத்யாய, தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி, என்.பி.டி.வெளியீடு, இதுவரை பழக்கப்பட்ட வாசிப்பிலிருந்து முற்றிலும் வேறு தளத்துக்கு அழைத்துச்செல்லும் நாவல் ‘நீலகண்டப் பறவையைத் தேடி’. எல்லாவற்றிலும் வேகத்தைத் தேடும் மனதைக் கொஞ்சம் நிறுத்தி நிதானமாக வாசிக்கச்சொல்லும் இந்நாவலில் இயற்கை ஒரு பாத்திரம்போல வலம்வருகிறது. ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் ரம்மியமான மனநிலைக்கு இட்டுப்போகும் இந்நாவலை உங்கள் கட்டாய வாசிப்புப் பட்டியலில் வைத்துக்கொள்ளுங்கள். நன்றி: தி இந்து, 11/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more
1 2 3 4 36