திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம், கருப்பேரி கே.வி.ஆர். கிருஷ்ணசாஸ்திரி, தென்றல் நிலையம், விலை 60ரூ. ஜாதகங்களில் திருமணப் பொருத்தம் பார்ப்பது பற்றிய நுட்பமான விஷயங்களையும் இந்நூல் விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 26/4/2017.   —-   காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல, மணிமேகலைப் பிரசுரம், விலை 75ரூ. உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து டாக்டர் எஸ். ஜீவராஜன் எழுதிய சிறுகதைகள் கொண்ட புத்தகம். சில கதைகள் வியப்படைய வைக்கின்றன. சில கதைகள் அதிர்ச்சி அடையச் செய்கின்றன. பொதுவாகச் சொன்னால், எல்லா கதைகளும் சிந்திக்க வைக்கின்றன. நன்றி: […]

Read more

பகவத் கீதை சிந்தனைகள்

பகவத் கீதை சிந்தனைகள், காந்தாமணி நாராயணன், தென்றல் நிலையம், பக். 96, விலை 50ரூ. எளிமையான நடையில் எழுதப்பட்ட இந்நூல், ‘தர்மசக்தி’ என்ற வார இதழில் தொடர்ந்து ஒரு ஆண்டிற்கும் மேலாக வந்தது. அந்தத் தொகுப்பு தான், இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. மனதிற்கு அமைதியையும், ஆன்மிக அனுபூதியையும் கொடுக்கக் கூடிய நூல் பகவத் கீதை. இதில் கூறப்பட்டுள்ள உண்மைகள் எல்லா காலத்திற்கும் பொருந்தும். ‘நம் மனதில் உள்ள கெட்ட எண்ணங்களைப் போக்குவது, நெற்பயிர்களுக்கு இடையே முளைத்து இருக்கும் களைகளை எடுப்பது போல், நல்ல […]

Read more

நந்தவனங்கள் பேசுகின்றன

நந்தவனங்கள் பேசுகின்றன, மரியதெரசா, தென்றல் நிலையம், பக். 112, விலை 50ரூ. கல்வி, சாதி, முதியோர் இல்லம், குடிப்பழக்கம், உழைப்பு, நகம், கூந்தல், நா, வாழை, குழந்தை போன்ற தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் 100-ம், 50-ம் ஆக ஹைகூ வடிவில் கவிதைகள் படைத்துள்ளார். படிக்கப் படிக்க நற்பயன் நல்கும் கவிதைகள். நன்றி: குமுதம், 22/2/2017.

Read more

பாஞ்சாலக்குறிச்சி வீர சரித்திரம்

பாஞ்சாலக்குறிச்சி வீர சரித்திரம், ஜெகவீர பாண்டியனார், தோழமை வெளியீடு, விலை 500ரூ. பாஞ்சாலங்குறிச்சி என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருபவர்கள், வீரபாண்டிய கட்டபொம்மனும், ஊமைத்துரையும் ஆவர். அவர்கள் இருவரும் சிற்றரசர்களாக இருந்தபோதிலும் பேரரசரும் போற்றும்வகையில் வீரம் செறிந்தவர்கள். இந்த நூலில் முதல் பாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றையும், இரண்டாம்பாகத்தில் ஊமைத்துரையின் வரலாற்றையும் ஜெகவீர பாண்டியனார் விரிவான முறையில் எழுதியுள்ளார். இதன் மூலம் வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோரின் வீரம் செறிந்த வாழ்க்கை மற்றும் அவர்களது தேசப்பற்று, தெய்வப்பற்றை அறிந்து கொள்ள முடிகிறது. உயிர் துறக்க […]

Read more

காற்றில் வடித்த சிலைகள்

காற்றில் வடித்த சிலைகள், முனைவர் மரியதெரசா, தென்றல் நிலையம், பக். 80, விலை 35ரூ. இயற்கையை அன்றாட வாழ்க்கையோடு இணைத்து காணும் முயற்சியே இக்கவிதைத் தொகுப்பு. இயற்கை தரும் இன்பத்தை நூல் முழுதும் அள்ளித்தெளித்திருக்கிறார் கவிதை வடிவில். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 11/4/2016.   —- விழிப்புணர்வு, புதுவை மு. தருமராசன், புதுகைத் தென்றல், பக். 224, விலை 110ரூ. நூலாசிரியர் எழுதிய தலையங்கங்களின் தொகுப்பு இந்நூல். அரசியல் பிரச்னைகளில் இருந்து சமூகப்பிரச்னை வரை பலவற்றையும் அலசியுள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், […]

Read more

பேருந்து

பேருந்து, ஹரணி, கே.ஜி. பப்ளிகேஷன்ஸ், பக். 120, விலை 120ரூ. தன் பயண வாழ்வின் ஒரு பகுதியாக அன்றாட வாழ்வில் அலையும் மக்களின் அவலங்களை மனிதமன ஓட்டங்களை நாவலாக பதிவு செய்துள்ளார். நன்றி: குமுதம், 28/3/2016.   —- டிஜிட்டல் வாழ்க்கை, பத்மினி பட்டாபிராமன், தென்றல் நிலையம், பக். 208, விலை 150ரூ. டிஜிட்டல் துறையில் நவீனமாகிவரும் தொழில் நுட்பங்களை, மீடியா மாணவர்களுக்கு உதவும் வகையில் எழுதியுள்ளார். நன்றி: குமுதம், 28/3/2016.

Read more

காயப்படும் நியாயங்கள்

காயப்படும் நியாயங்கள், கமலா கந்தசாமி, அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 240, விலை 70ரூ. முன்னூறு சிறுகதைகள் எழுதி குவித்திருக்கிறார் கமலா கந்தசாமி. இந்தத் தொகுதியில், 30 சிறுகதைகள் அடக்கம். எல்லாமே நல்ல கதைகள். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் – ஈஸ்வர அல்லா தேரே நாம். நாய் மனிதர்களை விட நன்றியுள்ளது என்பதை சொல்லும் நாய்க்குட்டி, பள்ளி ஆசிரியர்கள் ஏணிகளாகவும்இருக்கின்றனர்; கரை சேர்க்கும் தோணிகளாகவும் இருக்கின்றனர் என்பதை சொல்லும் ஏணிகளும் தோணிகளும்; எல்லாருக்கும் கடிதம் சுமந்து சென்று வினியோகிக்கும் தபால்காரர்; ஆனால் அந்தத் தபால்காரருக்கு வரும் […]

Read more

12 பாவ பலன்கள்

12 பாவ பலன்கள், சுப. சுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. ஜாதகங்களை துல்லியமாக கணிக்கவும், பலன் சொல்லவும் உதவும் ஆராய்ச்சி நூல். இதில் 200க்கும் அதிகமான வாழ்வு நிலைகளுக்கான கிரக அமைப்புகளை பல உதாரண ஜாகங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜோதிடர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இந்த நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 11/3/2015.   —- சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள், சாயிபிரியா, ஸ்ரீ அலமு புத்தக நிலையம், சென்னை, விலை 50ரூ. ஸ்ரீசீரடி சாய்பாபாவின் அருள்மொழிகளை அனைவரும் உணர்ந்து பயனடைய வேண்டும் என்ற […]

Read more

தங்க விலை ரகசியம்

தங்க விலை ரகசியம், கே.எஸ். ராகவன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பக். 204, விலை 90ரூ. சின்னச் சின்ன விஷயங்கள். ஆனால் அதில் அடங்கும் பெரிசு. அதை நேரடியாகச் சொல்லாமல் ஹாஸ்யமாக, படித்தால் சிரிப்பு வரும் வகையில் எளிய தமிழில், ஆங்கிலம் அதிகம் கலந்தாலும் நெருடல் இல்லாமல் தங்க விலை ரகசியமாக தந்துள்ளார் ஆசிரியர். கணவன் மனைவி அல்லது நண்பர்கள் இருவர் உரையாடலில் எவ்வளவு செய்தியை உட்புகுத்தித் தந்துள்ளார். அதிரசம் சொல்லும் ருசியும், தங்கவிலை தரும் நாட்டு நடப்பும், ரியல் எஸ்டேட் தகிடுதத்தம், ஆபீஸ் […]

Read more

சாதனையாளர்களுடன் ஒரு சந்திப்பு

சாதனையாளர்களுடன் ஒரு சந்திப்பு, எம்.எஸ். கோவிந்தராஜன், தென்றல் நிலையம், 12பி, மேலசன்னதி, சிதம்பரம் 608001, விலை 75ரூ. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 38 சாதனையாளர்களின் நேர்காணல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, எழுத்தாளர் வல்லிக்கண்ணன், கவிஞர் மு.மேத்தா, என்.சி. மோகன்தாஸ், மெர்வின் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். புதுக்கோட்டையில் இருந்து குழந்தைப் பத்திரிகைகள் ஏராளமாக வெளிவந்த காலக்கட்டம் பற்றி பலர் விவரித்துள்ளனர். மாணவராக இருந்தபோதே பி. வெங்கட்ராமன் (வடமலை அழகன்) டிங்டாங் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக பணியாற்றியது சுவையான தகவல். சாதனையாளர்களின் அனுபவங்களை அறிவது, சாதனைகள் […]

Read more
1 2