தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள்

தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள், தெள்ளாறு இ. மணி, சங்கர் பதிப்பகம், பக். 365, விலை 300ரூ. எத்தகைய நல்ல செயல்களைச் செய்தாலும், அதில் சிறிதளவாவது தீமை கலந்தே இருக்கும். தெய்வங்களின் செயல்கள் அனைத்தும் அதர்மத்தை அழிக்கக்கூடியவையாக இருக்கும். அந்தச் செயல்களின் காரணமாகவே அந்தத் தெய்வங்களை தோஷங்கள் பற்றி இருக்கின்றன. தம்மைப் பற்றிய தோஷங்களை நீக்குவதற்காகவும், ‘பேரானந்த நிலை’ என்பது செயலற்ற ஆன்ம தரிசனத்தில் தான் உள்ளது என்பதை உணர்த்துவதற்காகவும், தெய்வங்கள் மற்றொரு தெய்வத்தை வணங்கி நமக்கு வழிகாட்டி இருக்கின்றன எனக் கூறுகிறார் நூலாசிரியர். […]

Read more

தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள்

தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள், தெள்ளாறு இ.மணி, சங்கர் பதிப்பகம், விலை 300ரூ. தமிழகத்தில் உள்ள கோவில்கள் ஒவ்வொன்றும் ஒரு வகையில் சிறப்பு பெற்றவை ஆகும். ஆலயங்களுக்கு தெய்வங்களே வந்து வழிபாடு நடத்தி இருக்கின்றன என்பது ஐதீகம். அவ்வாறு எந்த கோவிலில் எந்த தெய்வம் வழிபாடு நடத்தியது என்பதையும், அந்த கோவிலின் வரலாறு உள்பட வேறு பல சிறப்புகள், அந்த கோவில்கள் அமைந்துள்ள ஊர், அங்கே செல்வது எப்படி என்பது போன்ற ஆன்மிக வாசகர்களைக் கவரும் பல்வேறு அம்சங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. […]

Read more

சக்தி பீடங்கள் 51

சக்தி பீடங்கள் 51, தெள்ளாறு இ. மணி, சங்கர் பதிப்பகம், சென்னை, பக். 328, விலை 225ரூ. பாரததேசத்தின் வரைபடத்தை உற்று நோக்கினால் அன்னை பராசக்தியின் திருவுருவை நாம் தரிசித்த உணர்வுதோன்றும். அவளே நம் இந்திய தாய். வடகோடியில் காமரூபத்து காமாக்யாதேவி கொலுவிருக்கிறாள் என்றால், தென்குமரியில் கன்னியாகுமரி பகவதி தேவியாகவும் அவளே குடியிருக்கிறாள். புராண வரலாற்றின்படி, பாரதம் முழுக்க 51 சக்தி பீடங்கள் அமைந்திருப்பதாகவும், அவை தேவியின் திருவுடலின் ஒவ்வொரு பாகத்தை அடையாளப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. அந்த செய்தியின் ஆதாரமாக தட்சயக்ஞ சம்பவம் அமைந்துள்ளது. அதை […]

Read more