சிறுகதை என்னும் கலைவடிவம்

சிறுகதை என்னும் கலைவடிவம், காலவெளிக் கதைஞர்கள், தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ், சாகித்ய அகாடமி வெளியீடு,  விலை : ரூ.300. சர்வதேச அளவில் ஒப்பிடக்கூடிய மேதமைகள் பல்வேறு சோதனைகளை நிகழ்த்திப் பார்த்து வெற்றிகண்ட வடிவம் தமிழ்ச் சிறுகதை வடிவமாகும். சிறுகதை வரலாறு, எழுத்துப் போக்குகள், இயக்கங்கள் அடிப்படையில் இருபது சிறுகதை ஆசிரியர்களைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை தமிழ்ச் சிறுகதைகளின் ஒரு நூற்றாண்டு வளர்ச்சியைக் காண்பிப்பதாக உள்ளன. தமிழ்ச் சிறுகதைகளில் சாதனை நிகழ்த்திய புதுமைப்பித்தன், மௌனி, கு. ப.ரா, ந.பிச்சமூர்த்தி ஆகிய முதல் தலைமுறையினர் […]

Read more

காலவெளிக் கதைஞர்கள்

காலவெளிக் கதைஞர்கள் (தமிழ்ச் சிறுகதைகள் குறித்த திறனாய்வுக் கட்டுரைகள்), தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ், சாகித்திய அகாதெமி,  பக்.356, விலை ரூ.300.  தமிழின் முன்னணிப் படைப்பாளிகளான புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன்,ஆதவன், ஜெயந்தன், கந்தர்வன் உள்ளிட்ட 20 படைப்பாளிகளின் படைப்புகளைப் பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இவற்றில் இடம் பெற்றுள்ள விமர்சனக் கட்டுரைகளை எழுதியவர்களில் இந்திரா பார்த்தசாரதி, பெருமாள் முருகன், ச.தமிழ்ச்செல்வன், சுகுமாரன் போன்ற படைப்பாளிகளும், வீ.அரசு, ந.முருகேசபாண்டியன்,சு.வேணுகோபால்,ஒவ்வொரு படைப்பாளியின் படைப்புகளைப் பற்றிய விரிவான அறிமுகங்களாகவும்,படைப்பாளிகளின் வாழ்க்கைப் பார்வை, படைப்பாளிகள் […]

Read more

தமிழ்ச் சிறுகதை வரலாறும் விமர்சனமும்

தமிழ்ச் சிறுகதை வரலாறும் விமர்சனமும்,  தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., பக்.248, விலை ரூ.275. தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றை பல்வேறு கோணங்களில் தொகுத்துக் கூறும் முயற்சியாக இந்நூல் மலர்ந்திருக்கிறது.கலை இலக்கியம் பற்றி வெவ்வேறு பார்வைகளைக் கொண்ட கா.நா.சுப்ரமண்யம் கட்டுரையும் கா.சிவத்தம்பி கட்டுரையும், கோ.கேசவனின் கட்டுரையும், சுந்தரராமசாமியின் கட்டுரையும் இடம் பெற்றுள்ளன. ராஜ்கெüதமன், பிரமிள், எம்.ஜி.சுரேஷ், ஜெயமோகன், நாஞ்சில்நாடன், அசோகமித்திரன், வீ.அரசு, இரா.கந்தசாமி, சுப்பிரமணி இரமேஷ் ஆகியோரின் கட்டுரைகள் தமிழ்ச் சிறுகதைகளின் வெவ்வேறு போக்குகளைப் பற்றி பேசுகின்றன.மணிக்கொடி காலத்தில் வெளிவந்த சிறுகதைகள், […]

Read more