புகழ் மணக்கும் அத்தி வரதர்

புகழ் மணக்கும் அத்தி வரதர், க.ஸ்ரீதரன், நர்மதா வெளியீடு, விலை: ரூ.60 முக்திதரு நகரேழில் முக்கியமாம் கச்சிதனில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை அனந்தசரஸ் என்ற திருக்குளத்திலிருந்து எழுந்தருளும் அத்திமர வரதர் வைபவத்தையொட்டி நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம். காஞ்சிபுரத்தின் பெருமை, அவதார வரலாறு, சரஸ்வதி வேகவதியாக வந்த கதை, கோயிலின் அமைப்பு, உற்சவங்கள், காஞ்சியுடன் தொடர்புள்ள ஆசார்யர்கள், திவ்யப் பிரபந்தத்தில் காஞ்சி தொடர்பான பாசுரங்கள், திருக்கச்சி நம்பிகள் அருளிய தேவராஜ அஷ்டகம், கூரத்தாழ்வானின் வரதராஜ ஸ்தவம், மஹா தேசிகன் அருளிய மெய்விரத மான்மியம், […]

Read more

அபாகஸ்

அபாகஸ் சுலபமாக கணிதம் கற்கும் இரகசியம், வசந்தி ரங்கராஜன், நர்மதா வெளியீடு, விலை 170ரூ. ‘ஜெல்ஸ்’ அபாகஸ் பயிற்சி நிலையத்தின் இயக்குநரான இந்நூலாசிரியர், அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்து, இந்தியாவில் கல்வித் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய சிறந்த கல்வியாளர். தவிர, பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றியவர். இவர் இந்தியாவில் 1997-ஆம் ஆண்டு முதன் முதலாக அபாகஸ் கல்வியை அறிமுகப்படுத்தியவர். இன்று அபாகஸ் பயிற்சி நிறுவனங்கள் பல இடங்களில் பரவி, இக்கல்வி முறையைப் பற்றிப் பலரும் அறிந்துள்ளனர். அபாகஸ் என்பது நான்கு சட்டங்கள் பொருத்தப்பட்ட […]

Read more

சாஸ்திரங்கள்

சாஸ்திரங்கள் (பாகம் 2), க. கோபி கிருஷ்ணன், பொன் பதிப்பகம்,பக். 80, விலை 50ரூ. முயற்சிகளில் வெற்றியடைந்து வாழவில் வளம் பெற இந்நூலில் உள்ள சாஸ்திரங்கள் ஊக்க விசைகளாக உள்ளன நன்றி: தினமலர், 2-10-2016.   —- தமிழர் வாழ்வு நெறிக் கருவூலம், அ.சா.குருசாமி, நர்மதா வெளியீடு, விலை 50ரூ. ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், உலக நீதி, வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி ஆகிய நீதி நூல்களின் மூலமும், விளக்கமும் அடங்கிய புத்தகம். நன்றி; தினத்தந்தி, 14/9/2016.

Read more

எம்.ஜி.ஆர். திரைப்பட கருவூலம்

எம்.ஜி.ஆர். திரைப்பட கருவூலம், இதயக்கனி எஸ். விஜயன், இதயக்கனி பிரசுரம், விலை 150ரூ. எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி, அவரைப் பற்றிய நூல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க நூல், இதயக்கனி எஸ். விஜயன் தயாரித்துள்ள இந்தப் புத்தகம். உண்மையில் இது கருவூலம்தான். எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் சதிலீலாவதி. அதில் போலீஸ் அதிகாரியாக சிறு வேடத்தில் தோன்றினார். அதில் இருந்து எம்.ஜி.ஆர். நடித்த ஒவ்வொரு படத்தின் ‘ஸ்டில்’களும் இதில் இடம் பெற்றுள்ளன. படங்கள் பெரிய அளவில் அழகாக அச்சிடப்பட்டுள்ளன. அவற்றின் அடிக்குறிப்பை படித்தாலே, எம்.ஜி.ஆரின் […]

Read more

மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதை

மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதை, மு.அப்பாஸ்மந்திரி, நர்மதா வெளியீடு, பக். 320, விலை 300ரூ. தேச விடுதலைக்காக வதைப்பட்ட இந்திய தலைவர்கள், போராட்டங்கள், இந்திய விடுதலை ஆகியவற்றை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும்விதமாக எழுதப்பட்ட நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.   —- கற்றபின் நிற்க, வாமு.சே. திருவள்ளுவர், தமிழ்மணி புத்தகப் பண்ணை, பக். 272, விலை 200ரூ. உலகம் தழுவிய அமைப்புகளில் பல்வேறு தலைப்புகளில் நூலாசிரியர் பேசிய சொற்பொழிவுன் தொகுப்பு நூல். பல அரிய தகவல்கள் நூலுக்கு சிறப்பு. -இரா. மணிகண்டன். […]

Read more

இஸ்லாமிய சட்ட கருவூலம்

இஸ்லாமிய சட்ட கருவூலம், அஷ்ஷெய்க் ஸெய்யத் சாபிக், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 250ரூ. திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி அடிப்படையில் இஸ்லாமிய சட்டங்கள் குறித்து அஷ்ஷெய்க் ஸெய்யத் சாபிக் எழுதிய ‘பிக்ஹுஸ் சுன்னா’ (இஸ்லாமிய சட்ட கருவூலம்) என்ற நூலை மவுலவி நூஹ் மஹ்ழரி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதுவரை 5 பாகங்கள் வெளியாகி உள்ளன. இது 6 வது பாகம். இதில் முழுக்க முழுக்க ‘திருமணம்’ குறித்து விளக்கப்பட்டுள்ளது. திருமண வாழ்வின் முக்கியத்துவம், திருமணம் செய்யும் முறை, மணக்கொடை, பலதாரமணம் போன்ற பல்வேறு தலைப்புகளில் […]

Read more

அரவிந்த் ஹெர்பல் சித்த மருத்துவ மூலிகைகளும் பயன்களும்

அரவிந்த் ஹெர்பல் சித்த மருத்துவ மூலிகைகளும் பயன்களும், நர்மதா வெளியீடு, பக். 328, விலை 180ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023950.html ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு தென்னிந்தியாவில் வாழ்ந்த சித்தர்களால் உருவாக்கப்பட்டது சித்த மருத்துவம். சித்தர்கள் தங்களின் தவ வலிமையால் எல்லா விதமான மூலிகைகள், தாதுக்கள், ஜீவராசிகள் ஆகியவற்றின் தன்மைகளையும், மருத்துவ குணங்களையும் முழுமையாகக் கண்டறிந்தனர். அவற்றை மனித சமூகத்திற்குப் பயன்படுத்த எண்ணினர். அதன் அடிப்படையில் சுமார் 4,448 நோய்களுக்கான நிவாரணங்களை இந்த மூலிகைகளின் மூலம் கூறியுள்ளனர். அப்படி சித்தர்களால் […]

Read more

கோடம்பாக்கத்தில் அறுபது ஆண்டுகள்

இன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள், மு. அப்பாஸ் மந்திரி, நர்மதா வெளியீடு, சென்னை – 17, பக்கம் 192, விலை 90 ரூ. அன்பையும் அறத்தையும் அடிநாதமாகக் கொண்டது கன்ஃபூசியனிஸம். இதை சீனாவில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே அறிமுகப்படுத்தியவர் கன்ஃபூசியஸ். உண்மை, இரக்கம், ஒருமுகப்படுத்துவது, சகோதரத்துவம், தாய்மையைப் போற்றுதல், கல்வி, ஒழுக்கம் போன்ற பலவற்றைக் குறித்த கன்ஃபூசியஸின் தத்துவங்களை விளக்கும் கதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. சமூகத்தில் பலதரப்பட்ட மக்களுக்கும் சென்றடையும் வகையில், கசப்பு மருந்துக்கு இனிப்புப் பூச்சுடன் தத்துவங்களை அளிக்கும் இந்த […]

Read more