சாவித்திரி கலைகளில் ஓவியம்

சாவித்திரி கலைகளில் ஓவியம், நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா, தோழமை வெளியீடு, பக்.270, விலை 250ரூ. மதுவால் சரிந்த அழகு சாம்ராஜ்யம்! இப்போது மட்டுமல்ல, அப்போதும் தமிழ் சினிமா என்பது ஆண்களால் ஆளப்படும் உலகம்தான். கதாநாயகர்களை திருவுருக்களாகவும், நாயகியரை அழகு பதுமைகளாகவும் பார்க்கும் செல்லுலாயிட் சிற்பம். இப்பேதைவிட, 60 ஆண்டுகளுக்கு முன்னால், நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அப்போதும் கதாநாயகர்களே, சினிமா உலகை ஆண்டு கொண்டிருந்தனர். ஏறக்குறைய முடிசூடா மன்னர்களைப்போல. அதனால் உச்ச நடிகர்களோடு நடிக்க பெரும் போட்டியே நடக்கும். கதாநாயகன் தாத்தாவின் வயதில் இருந்தாலும், அவரோடு […]

Read more

சாவித்திரி வாழ்க்கை வரலாறு

சாவித்திரி வாழ்க்கை வரலாறு, நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா, தோழமை வெளியீடு, விலை 250ரூ. நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று சாவித்திரி – கலைகளில் ஓவியம் என்ற தலைப்பில் நெஞ்சைத் தொடும் விதத்தில் எழுதியுள்ளார் நாஞ்சில் மு.ஞா. செ. இன்பா. 1955ல் வெளிவந்த மிஸ்ஸியம்மா படத்தில், ஜெமினிகணேசனும், சாவித்திரியும் இணைந்து நடித்தனர். அப்போது அரும்பிய காதல், பிறகு திருமணத்தில் முடிந்தது. இரு குழந்தைகள் பிறந்தன. 1968ம் ஆண்டில் சாவித்திரி டைரக்டர் ஆனார். அதனால் பல பிரச்சினைகளை சந்தித்தார். சொத்துக்களை இழந்தார். ஈருல் ஓருயிர் என்பதுபோல் வாழ்ந்த […]

Read more

தேவனின் திருப்பாடல்கள்

தேவனின் திருப்பாடல்கள், நாஞ்சில் மு.ஞா.செ. இன்பா, அருவி வெளியீடு, விலை 400ரூ. விவிலியத்தில் தாவீது மன்னன் பாடியதாகச் சொல்லப்படும் சங்கீத பாகத்தை மூலமாகக் கொண்டு இக்கவிதைத் தொகுப்பு எழுதப்பட்டுள்ளது. விவிலியம் தோன்றிய காலத்தில் இருந்து இப்படியோர் கவிதைத் தொகுப்பு உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணி, இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் போன்ற இசை அமைப்பதற்கு ஏற்றவாறு பாடல்களை இயற்றியிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 5/10/2015.   —- கம்பரும் வால்மீகியும், அரிசோனா மகாதேவன், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. பாரதநாட்டின் […]

Read more

காந்தியைக் கடந்த காந்தியம்

காந்தியைக் கடந்த காந்தியம், ஒரு பின் நவீனத்துவ வாசிப்பு, பிரேம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் 1, பக். 288, விலை 240ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-925-9.html சர்வதேச சமூகத் தனது நீண்ட, நெடிய பயணத்தில் எதிர்கொண்ட சவால்கள், தற்போது சந்தித்து வரும் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்னைகளை ஆழமாக அலசி ஆராய்ந்துள்ள நூலாசிரியர், இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் தீர்வு காண அறிஞர்கள் இதுவரை வகுத்தளித்துள்ள கோட்பாடுகளும், கொள்கைகளும் போதுமானவையாக இல்லை என்பதைத் துணிவுடன் சுட்டிக்காட்டியுள்ளார். காந்தியைப் பற்றியும், காந்தியத்தைப் […]

Read more

தலைவன் இருக்கின்றான்

தலைவன் இருக்கின்றான், நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா, பேரிளம் பதிப்பகம், எண்-கிருட்டிணா நகர், பம்மல், சென்னை 75, விலை 120ரூ. சிவாஜியை நடிகர்திலகமாக நேசித்தவர்கள்கூட, அவர் தமிழக அரசியலில் 30 ஆண்டுகாலம் அசைக்கமுடியாத சக்தியாக இருந்தார் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். தி.மு.க. தலைவர் அண்ணாவின் இதயத்தில் முதல் தம்பியாக இருந்தவர், பிறகு அரசியல் சதுரங்கத்தில் இடம் மாறி காங்கிரசுக்கே எல்லாமுமாய் ஆனார். பெருந்தலைவரன் அன்பைப் பெற்ற சிவாஜி, காங்கிரஸ் கட்சிக்காக தன் வருமானத்தின் பெரும்பகுதியை செலவிட்டு கட்சி வளர்த்த தகவல்களை நூலாசிரியர் விவரித்திருக்கும்விதம், நிஜமாகவே அதிர்ச்சிப் பக்கங்கள். […]

Read more