மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள்

மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் (இருபது தொகுதிகள்), பதிப்பாசிரியர் ந.முத்துமோகன், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், விலை 5000ரூ- பொருள்முதல்வாதத்துக்கும் சமதர்மக் கொள்கைக்கும் விஞ்ஞானபூர்வமான விளக்கம் கொடுத்தவர்கள் மார்க்ஸும் எங்கெல்ஸும். ஆனால், அவர்களின் எழுத்துகளை விளக்கக் குறிப்புகள் இல்லாமல் ஆரம்பநிலை வாசகர்களால் உட்செரிக்க இயலாது. அதனால்தான், இன்றும் மார்க்ஸியத்துக்கு ஏகப்பட்ட அறிமுக நூல்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. மார்க்ஸிய மூலவர்களின் நூல்களை வாசிப்பது அதற்கு அடுத்தக் கட்டம். மாஸ்கோவிலிருந்து முன்னேற்றப் பதிப்பகம் 1989-ல் மார்க்ஸ், எங்கெல்ஸின் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகளை 12 தொகுதிகளாக வெளியிட்டது. அத்தொகுதிகளை விரிவுபடுத்தியும் […]

Read more

திப்புவின் வாள்

திப்புவின் வாள், பகவான் எஸ். கித்வானி, தமிழில் வெ. ஜீவானந்தம், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், பக். 336, விலை 265ரூ. ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் திப்பு சுல்தான். அவர் 1782 முதல் 1799 வரை மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்டபோது நடந்த சம்பவங்கள், நாடு பிடிக்கும் ஆசையில் களமிறங்கிய கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்ப்பதற்கு சந்தித்த சவால்கள், வெற்றிகள், நம்பிக்கை துரோகம் ஆகியவற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட “தி சுவார்டு ஆஃப் திப் சுல்தான்’ என்ற ஆங்கில வரலாற்று நாவலின் மொழி பெயர்ப்பாக […]

Read more

நைரா

நைரா, சுப்ரபாரதிமணியன், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், பக். 190, விலை ரூ.150. வர்த்தகத்துக்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும் தமிழ் மண்ணுக்குப் புலம் பெயர்ந்து வந்த நைஜீரிய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நாவல் நைரா. உலகமயமாக்கலின் தாக்கத்திலும், அந்நிய தேச கலாசார பன்முகத்திலும் சிக்கித் தவிக்கும் நைஜீரிய இளைஞன்தான் கதையின் நாயகன். கண்டங்கள் தாண்டி வந்த மக்களும் கடை விரித்து காசு பார்க்கும் தொழில் நகரமான திருப்பூரின் பின்னணியில் விரிகிறது இந்நாவல். பண்பாட்டிலும், உருவ அமைப்பிலும், மொழியிலும் வேறுபட்ட ஒரு சமூக மக்கள், மாற்று தேசத்தில் […]

Read more

ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை

ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை, பேராசிரியர் கா. செல்லப்பன், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், விலை 70ரூ. இலக்கிய சிறப்பு வாய்ந்த நூல் இது. இங்கிலாந்து இலக்கியத்தின் பிதாமகனான ஷேக்ஸ்பியர், மேல்நாட்டில் புரட்சிக்கவியாகத் திகழ்ந்த ஷெல்லி, இந்தியாவின் புகழ் பெற்ற கவிஞர் தாகூர் உள்பட 22 இலக்கியவாதிகளின் வாழ்க்கை வரலாற்றையும், சாதனைகளையும் இந்நூலில் எழுதியுள்ளார் பேராசிரியர் கா. செல்லப்பன். மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, புதுமைப்பித்தன், டாக்டர் மு. வரதராசனார், கண்ணதாசன், ஜெயகாந்தன் ஆகியோர் ஆற்றலையும், அவர்களின் படைப்புகளின் […]

Read more

ஒரு தலித்திடமிருந்து

ஒரு தலித்திடமிருந்து, வசந்த் மூன், தமிழில் வெ. கோவிந்தசாமி, நியூ செஞ்சரி புக் ஹவுஸ், பக். 285, விலை 220ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-287-0.html தலித் சமூக உட்பிரிவு பகைமையை அம்பேத்கர் இயக்கம் எதிர்கொண்டது எப்படி? டாக்டர் அம்பேத்கரின் வரலாற்றை ஆதாரத்தோடும் சுவையாகவும் எழுதியவர் வசந்த் மூன். மகாராஷ்டிர அரசால் வெளியிடப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் நூல்களுக்கு தொகுப்பாசிரியராக இருந்து அம்பேத்கரின் எழுத்துக்களை, பேச்சுக்களை மக்கள் முன் வைத்தவர். அம்பேத்கரின் தொண்டர் படை அமைப்பில் சேர்ந்து கடைசி வரை […]

Read more

அறிவியல் முதல்வர்கள்

அறிவியல் முதல்வர்கள், தேவிகாபுரம் சிவா, நியூ செஞ்சரி புக் ஹவுஸ், பக். 84, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-217-0.html அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதன் மூலமே, அறிவியல் மீது பெரிய ஈடுபாடு ஏற்படும். அதற்கு பல்வேறு அறிவியல் அறிஞர்கள் முன்னோடிகளாக இருந்துள்ளனர். இந்த நூலில், குழந்தைகளுக்காக, அறிவியல் அதறிஞர்களின் வாழ்க்கை வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது. அறிவியல் துறையின் பல்வேறு பிரிவுகளில், முன்னோடிகளாக இருந்த ஆர்க்கிமிடிஸ், கலிலியோ, மேகனநாத் சாகா, ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் போன்ற மேதைகளின் வாழ்க்கை […]

Read more

உயிர்த்துளி உறவுகள்

உயிர்த்துளி உறவுகள், தேவிகாபுரம் சிவா, நியூ செஞ்சரி புக் ஹவுஸ், பக். 90, விலை 70ரூ. To buy this Tamil book  online: https://www.nhm.in/shop/100-00-0002-203-2.html முட்டைகளை அடைகாக்கும் அப்பா பெங்குயின்கள் பள்ளி மாணவர்களுக்காக புன்னகை உலகம் மாத இதழில் வெளியான கட்டுரைகளுடன், சில புதிய கட்டுரைகள் சேர்த்து இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. மாணவர்களை வாசகர்களாக கருத்தில் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும், பெரியவர்களும் ஆழ்ந்து படிக்கும் வகையில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. பனிப்புயல், கடுங்குளிருக்கு நடுவில் பென்குயின்களில் அப்பாக்கள்தான் முட்டைகளை அடைகாக்கும். கூடு கட்ட தெரியாத இரு வாட்சி […]

Read more

தென்குமரியின் சரித்திரம்

தென்குமரியின் சரித்திரம், அ.கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில். நூலாசிரியர் அ.கா.பெருமாள் தமிழகம் அறிந்த ஆய்வாளர். அவர் எழுதிய இந்த நூலில் கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆய் அரசர்களின் காலம் துவங்கி, பாண்டியர் காலம், பிற்கால சோழர் காலம், வேணாட்டரசர்கள் காலம், திருவிதாங்கூர் அரசு காலம் என, 14 தலைப்புகளில், தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஏராளமான பழைய அரிய புகைப்படங்களும் தேவையான இடங்களில் தரப்பட்டுள்ளன. தகவல்களில் பல, யூகங்கள், கதைகள் சார்ந்தவை. நாஞ்சில்நாடு பற்றி பல இடங்களில் குறிப்புகள் வருகின்றன. கதை சார்ந்த குறிப்பும் உள்ளது. பல […]

Read more