ஆகாயத்தில் பூகம்பம்

ஆகாயத்தில் பூகம்பம், பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், விலை 200ரூ. பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வார இதழ் ஒன்றுக்கு எழுதிய தொடர்கதையின் தொகுப்பே இந்நூல். விமான கடத்தல் சம்பவத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட ‘திரில்லர்’ கதை. ஒரு விமானி, ராணுவ அதிகாரி, மாவோயிஸ்ட்டுகள், சினிமாவில் சாதிக்கத்துடிக்கும் இளம் இயக்குனர்கள் என பலதரப்பட்ட கதாபாத்திரங்கள் இக்கதையில் பயணிக்கின்றன. அவர்களின் லட்சியம், அடிப்படை சித்தாந்தம், காதல், விரோதம் ஆகியவற்றை ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி சர்வதேச அரசியல் பிரச்சினை வரை நடப்பு நிகழ்வுகளுடன் வலைப்பின்னலாக கதையை நகர்த்தி […]

Read more

அபாயம் தொடாதே

அபாயம் தொடாதே, பட்டுக்கோட்டை பிரபாகர், கவிதா பதிப்பகம், விலை 200ரூ. கடந்த 40 ஆண்டுகளாகச் சிறுகதை, நாவல், தொடர்கதை, சின்னத்திரை தொடர்கள், வெள்ளித் திரையில் கதை – உரையாடல் எனத் தொடர்ந்து வெகுசன தளத்தில் பரவலாகப் பேசப்படும் எழுத்தாளரின் நாவல். எந்த முன்குறிப்பும் இல்லாமல் தொடங்கும் கதை, தொடங்கிய வேகத்திலேயே சட்டென முடிந்தும்போகிறது. சியாமளாவின் கொலைக்குக் காரணமான விவேக்கை அவனது கல்யாண மேடையில் வைத்தே கைது செய்வதோடு நாவல் முடிகிறது. வழக்கமான துப்பறியும் கதைதான் என்றாலும் மின்னல் வேக வாசிப்புக்கு உத்தரவாதம் உண்டு. நன்றி: […]

Read more

கடவுள் கனவில் வந்தாரா?

கடவுள் கனவில் வந்தாரா?, பட்டுக்கோட்டை பிரபாகர், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 192, விலை 170ரூ. வெகுஜன எழுத்துலகத்துக்கு நன்கு பிரபலமானவர் பட்டுக்கோட்டை பிரபாகர். துப்பறியும் நாவல்கள் எழுதுவது அவருக்கு கைவந்த கலையாக இருந்தாலும், சிறுகதையிலும் அதே தரத்தையும், தனித்துவத்தையும் வெளிப்படுத்துகிறார். அந்த வகையில் ‘கடவுள் கனவில் வந்தாரா?’ சிறுகதை தொகுப்பிலும் வாசகனை கதைக்கு நெருக்கமாக அழைத்துச் செல்கிறார். ஒவ்வொன்றும் குடும்ப உறவுகள், காதல், சமூகம் பற்றிய கதையாக இருப்பினும், இன்றைய நடைமுறை மற்றும் இளைய தலைமுறையினரின் உலகத்தை அப்படியே படம் பிடித்து யதார்த்தத்தின் […]

Read more

கடவுள் கனவில் வந்தாரா?

கடவுள் கனவில் வந்தாரா?, பட்டுக்கோட்டை பிரபாகர், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 192, விலை 170ரூ. வெகுஜன எழுத்துலகத்துக்கு நன்கு பிரபலமானவர் பட்டுக்கோட்டை பிரபாகர். துப்பறியும் நாவல்கள் எழுதுவது அவருக்கு கைவந்த கலையாக இருந்தாலும், சிறுகதையிலும் அதே தரத்தையும், தனித்துவத்தையும் வெளிப்படுத்துகிறார். அந்த வகையில் ‘கடவுள் கனவில் வந்தாரா?’ சிறுகதை தொகுப்பிலும் வாசகனை கதைக்கு நெருக்கமாக அழைத்துச் செல்கிறார். ஒவ்வொன்றும் குடும்ப உறவுகள், காதல், சமூகம் பற்றிய கதையாக இருப்பினும், இன்றைய நடைமுறை மற்றும் இளைய தலைமுறையினரின் உலகத்தை அப்படியே படம் பிடித்து யதார்த்தத்தின் […]

Read more

ஆகாயத்தில் பூகம்பம்

ஆகாயத்தில் பூகம்பம், பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், பக். 264, விலை 200ரூ. ஆகாயத்தில் பூகம்பம் கதையை தொடராக குமுதத்தில் எழுதியபோது ப்ரியா கல்யாண ராமன் எனக்களித்த உற்சாகத்தையும், சுதந்திரத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். நான் பாட்டுக்கு எழுதிக்கொண்டேயிருந்தேன். பார்த்தால் 44 வயது அத்தியாயத்தில் தான் முற்றும் வந்து நிற்கிறது. ஆகவே இது நான் எழுதியதிலேயே மிக நீளமான தொடர்கதையானது என்கிறார் பட்டுக்கோட்டை. ஒரு பைலட், ஒரு பிரிகேடியர், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் இயக்குனர்கள் என்று பலவகையான கதாபாத்திரங்கள். இவர்களது […]

Read more

இந்திய நேரம் 2 A.M

இந்திய நேரம் 2 A.M., பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், பக். 168, விலை 125ரூ. பட்டுக்கோட்டை பிரபாகரின் புகழ்பெற்ற நாவல்களுள் ஒன்று இது. 1986ல், முத்தாரம் இதழில் தொடராக வந்தது. மகேந்திரன், ஒரு தொழிலதிபர். அவர் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஸ்வர்ணா. மகேந்திரனின் பர்சனல் ஸ்டெனோ. ‘ஒரு துணைக்காக ஏங்கறேன் நான். என் மனைவி என்னை விட்டுவிட்டுப் போய் 12 ஆண்டுகள் ஆகின்றன. என் மேல் அக்கறை காட்ட, அன்பு செலுத்த யாருமில்லை. பசித்தாலும் கேட்க ஆளில்லை. என் தேவைகளை நானே […]

Read more

மன்மதன் வந்தானடி

மன்மதன் வந்தானடி, பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், விலை 130ரூ. ஒவ்வொரு பெண்களும் தனக்கு வரப்போகிற கணவன் பற்றி இனிய கனவு காண்கிறார்கள். அது நனவாகும்போது பிரச்சினை எதுவும் இல்லை. நேர்மாறாக அமையும்போது ஏமாற்றம், விரக்தி, குழப்பம் எல்லாம் சூழ்ந்து கொள்கிறது. அப்படிப்பட்ட நிலையில் அதை எப்படி எதிர்கொள்வது என்பதை இந்தக் கதையின் நாயகி வைதேகி எடுக்கும் முடிவே கதையின் மையக்கருத்து. அதுவே தாம்பத்தியத்தில் உண்மையான வெற்றி என்பது கதை நாயகி, நவயுக பெண்களுக்கு விடுக்கும் செய்தியாகும். வசீகர நடையால் வாசகர்களின் உள்ளங்களைக் கொள்ளை […]

Read more

இரண்டு வரி காவியம்

இரண்டு வரி காவியம், திருக்குறள் தெளிவுரை, பட்டுக்கோட்டை பிரபாகர், ரம்யா பிரியா கிரியேஷன்ஸ் வெளியீடு, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-228-4.html நறுக்கென்று ஒரு திருக்குறள் உரை திருக்குறளுக்குப் பரிமேலழகர் போன்ற ஜாம்பவான்கள் முதல், சென்ற நூற்றாண்டின் டாக்டர் மு.வ. வழி ஆயிரக்கணக்கில் உரை எழுதியிருக்கிறார்கள். இப்போது கதாசிரியர், நாவலாசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர் நடைமுறைத் தமிழில் சரளமாக எழுதியுள்ள உரை விளக்கம் முற்றிலும் வித்தியாசமானது. ஒவ்வொரு அதிகாரத்தின் கடைசியிலும் நறுக்கென்று இரண்டே சொற்களில் மையக் கருத்தைச் சொல்லியுள்ள பாங்கு […]

Read more

அதிசய சித்தர் போகர்

அதிசய சித்தர் போகர், எஸ். சந்திரசேகர், கற்பகம் புத்தகாலயம், பக். 136, விலை 90ரூ. பதிணென் சித்தர்களில் ஒருவரான போகர் பொற்கொல்லர் வகுப்பைச் சேர்ந்தவர். திருமூலரை தன் பாட்டனாராகவும், காலாங்கி சித்தரை தன் ந்தையின் ஸ்தானத்திலும் வைத்து, அவர்கள் பாதம் பணிவதாக தன்னுடைய போகர் 7000 என்ற நூலில் விவரித்து உள்ளார். போகர் தன் குரு காலாங்கி சித்தர் கட்டளைப்படி, சீன தேசம் சென்று, தனது பரகாய பிரவேச சித்து மூலம் சீன முதியவர் ஒருவர் உடலில் புகுந்து, சீன மக்களுக்கு பல போதனைகளும் […]

Read more

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் மு. அருணாசலம், பேராசிரியர் இராஜா வரதராஜா,  அருண் பதிப்பகம், திருச்சி 1, பக்கம் 672, விலை 125 ரூ. தமிழர்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுபவை தமிழ் இலக்கியங்கள். அவை காலத்தால் அழிந்துவிடாதபடி தமிழின் இலக்கிய வரலாறு முறையாகப் பதிவு செய்யப்பட்டு அதன் பயனை எல்லோரும் அனுபவிக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் பதிவு செய்தவர் தமிழறிஞர் கா. சுப்பிரமணிய பிள்ளை, அவருக்குப் பின் மு. அருணாசலம், மு. வரதராசன், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், […]

Read more