கொங்குநாட்டுக் கோயில்கள்

கொங்குநாட்டுக் கோயில்கள், கி.வெங்கடாச்சாரி, பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 252, விலை 225ரூ. பழந்தமிழகத்தின் மேற்குப் பகுதி கொங்கு நாடு என்று வழங்கப்பட்டது. தமிழகத்தின் பண்பாட்டு வளர்ச்சியில் கொங்கு மண்டலத்தின் பங்களிப்பு முக்கியமானது. ஒரு பண்பாட்டின் வளர்ச்சியில் பேரிடம் வகிப்பவை ஆலயங்களே ஆகும். ஆன்மிகம், கட்டக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் கலவையாக அமைந்துள்ள ஆலயங்கள்தாம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் வரலாறு கூறும் சாட்சியங்களாக நிற்கின்றன. அந்த வகையில் கொங்கு மண்டலத்திலுள்ள கோயில்கள் குறித்த தகவல்களை ஆவணப்படுத்த பேராசிரியர் […]

Read more

தமிழ்க்காதல்

தமிழ்க்காதல், வ.சுப. மாணிக்கம், மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை 625001, விலை 150ரூ. காதல் உடலுக்கு நல்லது, உள்ளத்துக்கு நல்லது, ஊருக்கு நல்லது, உலகத்துக்கு நல்லது. அந்த நல்ல காதல், தமிழ்க்காதல். இதனை தலைப்பாக கொண்டு நூலாசிரியர் வ.சுப. மாணிக்கம் 7 தலைப்புகளில் அகத்திணையை மையமாக வைத்து எளிய நடையில் இலக்கிய நூலை எழுதியுள்ளார். தமிழர் கண்ட காதல் நெறியே அகத்திணையாகும். இதனை நம் முன்னோர்கள் முழுமையாக கற்றிருந்ததால், உலகையும், உடலையும், மனதையும், திருமணத்தையும் அவர்கள் […]

Read more

சிவதரிசனம்

சிவதரிசனம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 192, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-013-7.html மொகஞ்சதாரோ காலத்திலேயே (கி.மு. 3250) சிவ வழிபாடு இருந்துள்ளது என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கூற்ற. காலத்தால் மூத்த மிகப் பழமையான சிவ வழிபாட்டின் அருமை பெருமையை சிவலிங்கத் தத்துவம், பைரவர் தத்துவம், கணேசர் தத்துவம், முருகன் தத்துவம், நடராஜர் தத்துவம், போலோநாத் தத்துவம் ஆகிய தத்துவங்களின் அடிப்படையில் நூலாசிரியர் விளக்கியுள்ளார். இடையிடையே வடமாநிலங்களில் உள்ள […]

Read more

தென்னாட்டு சிவத்தலங்கள் (தமிழகம்)

தென்னாட்டு சிவத்தலங்கள் (தமிழகம்), ப. முத்துக்குமாரசாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, விலை 235ரூ. இந்த நூல் இரண்டாம் தொகுதியாக மலர்ந்திருக்கிறது. தமிழகத்தில் 274 கோவில்களைப் பற்றிய ஆதாரபூர்வ தகவல்கள், அமைவிடம், நால்வர் பாடியதெனில், அப்பாடல் என்ற பன்முகத் தகவல்களுடன், கோவிலின் படமும் தரப்பட்டிருப்பது இந்த நூலின் சிறப்பாகும். மேலும், திருத்தலங்களின் பழைய தமிழ்ப் பெயருடன் அதன் விளக்கமும் தரப்பட்டிருக்கின்றன. சைவ நெறியில் தோய்ந்து வாழும் அனைவரும் விரும்பும் நூல்.   —-   தென்னாட்டுச் செல்வங்கள் (பாகம்2), ஓவியர் […]

Read more

ஜின்னா தேசியவாதியா? பிரிவினைவாதியா?

ஜின்னா தேசியவாதியா? பிரிவினைவாதியா?, ச. ராசமாணிக்கம், சந்தியா பதிப்பகம், சென்னை – 83, பக்கம். 200, ரூ. 130. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-814-4.html இந்திய துணைக் கண்டத்தின் மிக முக்கிய இஸ்லாமியத் தலைவர்களுள் முதன்மையானவர் ஜின்னா. இத்தனைக்கும் அவர் முஸ்லிம்களின் புனிதக் கடமையான ஹஜ் யாத்திரையை மேற்கொண்டதில்லை, தன் உயிலைக் கூட இஸ்லாமிய முறைப்படி எழுதியதில்லை; மசூதிக்குப் போவதை வழக்கமாகக் கொண்டதில்லை; உருது அவருக்குத் தெரியாது; குரானுக்கும் அவருக்கும் வெகுதூரம்; இஸ்லாமிய மரபுப்படி உடையணிந்ததில்லை; அவரது மனைவி […]

Read more

வேதம் கண்ட விஞ்ஞானம்

வேதம் கண்ட விஞ்ஞானம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை – 14, விலை: ரூ. 270. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-8.html எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது என்ற பெருமை பெற்ற வேதங்களில் இருந்து ஆச்சரியமான விஷயங்களை தொகுத்து கொடுத்து இருக்கிறார், ஆசிரியர். இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவற்றுக்கு தடம் அமைத்து கொடுத்தது வேதங்களே என்பது அசைக்க முடியாத ஆதாரங்களோடு எடுத்து வைத்து இருப்பது வியக்க வைக்கிறது. விமானம், […]

Read more

சிவ தரிசனம்

சிவ தரிசனம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீ+ட்டர்ஸ் சாலை, சென்னை – 600 014. பக்: 192, விலை: ரூ. 150. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-013-7.html காலத்தால் மூத்த சிவ வழிபாட்டை விளக்கும் நூல். சிவன், கணபதி, முருகன், நடராஜர் போன்ற தெய்வ வழிபாட்டின் தத்துவங்களையும், வாழ்வியல் நெறிகளோடு ஆசிரியர் சிறப்பாக விளக்கி உள்ளார். சிவன் உயர்ந்த தபஸ்வீ. மங்களம் என்பது சிவனுக்கு மட்டுமே பொருந்தும். சத்தி மூலம் சிவனை அடைய முடியும், சிவன் […]

Read more

திருமந்திர நெறி

திருமந்திர நெறி, ஜி. வரதராஜன், பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக்கங்கள் 176, விலை 75ரூ நெறி என்றால் சமயக் கொள்கைக்காகவோ, தனிமனித ஒழுக்கத்துக்காகவோ ஏற்படுத்தப்பட்ட விதி அல்லது முறை எனப்படும். திருமூலர் தாம் அருளிய திருமந்திரம் வாயிலாக இத்தகைய வழிமுறைகளை அருளிச் செய்துள்ளார். பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக உள்ளது திருமூலரின் திருமந்திரம்- திருமூலர் அருளிச்செய்த திருமந்திரம் தோத்திர நூலாகவும் சாத்திர நூலாகவும் திகழ்கிறது. எல்லா சமயங்களும் மதங்களும் இறைவனை அடைவதற்குரிய வழியாக அன்பையே வலியுறுத்திக் […]

Read more

கணினியின் அடிப்படை

கணினியின் அடிப்படை, ஜெ. வீரநாதன், வெளியிட்டோர்: பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், 167, போலீஸ் கந்தசாமி வீதி, ஒலம்பஸ், இராமநாதபுரம், கோயம்புத்தூர் – 641045. விலை ரூ. 123   கணினி நமது அடிப்படைத் தேவைகளின் ஒன்றாக மாறிவிட்டது. அதன் அடிப்படைகளைத் தெரிந்துகொண்டால் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவராலும் இதனை கையாளமுடியும். அறிமுக நிலையில் இருக்கும் அனைவருக்கும் ஏற்படும் சந்தேகங்களை 31 தலைப்புகளில் புரியும்படி விளக்கப்படங்களுடன் ஆசிரியர் விளக்கியுள்ளார். விண்டோஸின் சமீபத்திய பதிப்பான, பதிப்பு 7-ஐ மையமாக வைத்து புத்தகத்தை எழுதியுள்ளார். கணினி மட்டுமல்லாமல் அதனுடன் […]

Read more

தமிழர் உணவு

தமிழர் உணவு, தொகுப்பாசிரியர் பக்தவத்சல பாரதி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக்கம் 415, விலை 250ரூ. பரபரப்பான இன்றைய வாழ்க்கை முறையில் உணவைப் பசிக்காகவோ, ருசிக்காகவோ உண்பது என்ற நிலை மாறிவிட்டது. அன்றாட நாளில் அதுவும் ஒரு கடமையாகவே கழிகிறது. உணவு என்பது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவது போன்ற விஷயம் அல்ல. அது சமூகம் சார்ந்தது. உணவும் சமூகமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை என்ற கருத்தை இன்றைய தலைமுறையினருக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில், தமிழர்களின் உணவு முறைகளை நூலாகத் தொகுத்துள்ளார் பக்தவத்சல பாரதி. ஈழத்தில் […]

Read more
1 7 8 9 10