நம்மாழ்வார்

நம்மாழ்வார், முகிலை ராசபாண்டியன், முக்கடல் வெளியீடு, பக். 96, விலை 100ரூ. தற்போது துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருக்குருகூரில் தோன்றியவர் நம்மாழ்வார் என்னும் மாறன். இவரது காலத்திற்குப் பின், இந்த ஊர் ஆழ்வார்திருநகரி எனப் போற்றப்படுகிறது. குறுநில மன்னனான காரிக்கு மகனாகப் பிறந்தும், அரச வாழ்க்கையைத் துறந்து, திருக்குருகூரில் உள்ள ஆதிநாதர் கோவிலில் நிற்கும் புளிய மரத்தடியில் தவ வாழ்க்கை மேற்கொண்டார். யாரிடமும் பேசாமலும், எந்தச் செயலிலும் ஈடுபடாமலும் இருந்த நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாரைப் பார்த்ததும் அசைந்து கொடுத்து அவரது கேள்விக்குத் தத்துவ விளக்கமாகப் […]

Read more

திருஞான சம்பந்தர்

திருஞான சம்பந்தர், முகிலை இராசபாண்டியன், முக்கடல் வெளியீடு, பக். 192, விலை 150ரூ. பெரிய புராணம் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைத் தெரிவிக்கும் நுால் என்றாலும், சுந்தரரைத் தலைவனாகக் கொண்டது என்றாலும், நுாலின் பெரும்பகுதி திருஞானசம்பந்தரின் வரலாற்றையே கொண்டிருக்கிறது. பாணர் குலத்தைச் சேர்ந்த திருநீலகண்டரைத் தன்னுடன் அனைத்துக் கோவில்களுக்கும் அழைத்துச் சென்று, ஜாதி பேதத்தைப் போக்கியவர் திருஞான சம்பந்தர். பிராமண வகுப்பைச் சேர்ந்த திருநீல நக்க நாயனாரின் இல்லத்தில், வேள்வி செய்யும் இடத்தில் அந்தத் திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தங்க வைத்தவர் திருஞான சம்பந்தர். சைவத்தை […]

Read more

கண்ணீர்ச் சமுத்திரம்

கண்ணீர்ச் சமுத்திரம், குறும்பனை சி. பெர்லின், முக்கடல் வெளியீடு, விலை 90ரூ. நெய்தலின் வாழ்வை அசலாகப் பதிவுசெய்யும் எழுத்தாளர்களில் ஒருவரான குறும்பனை சி. பெர்லின் எழுதியிருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுதி கடற்புரத்து மக்களின் அன்றாட வாழ்க்கைப் பதிவுகளைக் கதைக்களன்களாகக் கொண்டிருக்கிறது. பொது வாசகர்களுக்கு அந்நியமான சொற்கள் ஒவ்வொரு சிறுகதைக்குப் பின்னாலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கடும் நெருக்கடிகள் நிறைந்த சம்பவங்களுக்கு இடையில் நறுக்குத் தெறித்தாற்போல் நகைச்சுவையும் இழையோடுகிறது. நன்றி: தி இந்து, 5/11/2016.

Read more

கண்ணப்ப நாயனார்

கண்ணப்ப நாயனார், முகிலை இராசபாண்டியன், முக்கடல் வெளியீடு, பக். 56, விலை 50ரூ. சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு இடம் பெற்றுள்ளது. அதில் கண்ணப்ப நாயனாரின் வரலாற்றை எளிய நடையில் விவரிக்கும் வகையில் அமைந்துள்ள நூல் இது. திண்ணன் எனும் இயற்பெயர் கொண்ட கண்ணப்ப நாயனாரின் பிறப்பிடமான பொத்தப்பி நாடும், காளத்தி மலையும் தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கின்றன என்பதையும், வேட்டுவர்களின் வாழ்க்கையையும் இந்த நூல் சிறப்பாக எடுத்துரைக்கிறது. வேட்டுவச் சிறுவர்களுக்கு வில் வித்தை துவங்கும் போது, அக்காலத்தில் […]

Read more