குதிப்பி

குதிப்பி, ம.காமுத்துரை, வெளியீடு, டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.400/- அதிக அளவில் இலக்கியக்கவனம் பெறாமல் இருந்த நாவிதர்கள், சோழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், வண்ணார்கள், நாகசுரக் கலைஞர்கள் குறித்து சமீப காலங்களில் காத்திரமான படைப்புகள் தமிழில் வெளிவருகின்றன. அவை வாசக கவனத்தையும் குவித்திருக்கின்றன. அவற்றின் தொடர்ச்சியாகத்தான், சமையல் கலைஞர்களின் வாழ்க்கையைப் பேசும் ‘குதிப்பி’ நாவலையும் பார்க்க வேண்டும். சாரதி என்ற சமையல்காரரின் குவாட்டர் பாட்டில் மூடித் திறப்பில் நாவல் தொடங்குகிறது. சாரதியின் மகன் சரவணன் குவாட்டர் பாட்டிலைத் தூக்கி வெளியே எறிவதில் நாவல் முடிவடைகிறது. […]

Read more

கோட்டை வீடு

கோட்டை வீடு, ம. காமுத்துரை, மருதா, சென்னை, விலை 100ரூ. காமுத்துரையின் மூன்றாவது நாவல் இந்த கோட்டை வீடு. ஒவ்வொருவரது மனதிலும் இருக்கிற கோட்டை வீட்டிற்கு இந்நாவல் உங்களை அழைத்துச் செல்லும் என முன்னுரையில் காமுத்துரை கூறியிருப்பது உண்மையே. நாவலைப் படித்தவுடன் நமது வீட்டின் வயதான பெற்றோர், தாத்தா, பாட்டி நினைவு வராமல் யாரும் தப்ப முடியாது. மனசை சற்றுப் பிசையத்தான் செய்கிறது. பேரனின் மூலம் கதை சொல்லப்படுகிறது. தாத்தா இறந்த பிறகு ஒரே மகளிடம் வந்து சேரும் ஆயா பற்றிய கதை. ஆயாவிற்கு […]

Read more

திருப்பதி

திருப்பதி, மஞ்சுள் பதிப்பகம், 2வது தளம், உஷா பிரீத் காம்ப்ளக்ஸ், 42, மாளவியா நகர், போபால் 462003, விலை ரூ 199. உலகிலேயே மிக முக்கியமாகக் கருதப்படும் கோவில்களில் ஒன்றான திருப்பதி கோவிலின் தெய்வீக மற்றும் வரலாற்றுப் பின்புலத்தை விளக்கும் நூல். பூமியில் சில காலம் வாழ்வதென்று முடிவு செய்த வராகப் பெருமாள், தனது பட்சி வாகனமான கருடனை அழைத்து, சொர்க்கத்திலிருந்து தனது வசிப்பிடமான வைகுண்டத்தில் இருந்து தனக்குப் பிரியமான கிரீடாச்சல மலையை எடுத்து வந்து, தான் குறிப்பாகத் தேர்ந்தெடுத்த ஓர் இடத்தில் அதை […]

Read more